இந்தியாவுக்கு செல்ல மறுக்கும் ஈழ அகதிகள் அனைவரும் பப்புவா நியுகினிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அண்மையில் படகு மூலம் அகதிகளாக சென்ற 157 ஈழ அகதிகளும் தற்போது கேர்ட்டின் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்தியாவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது.
எனினும் இந்தியா செல்ல மறுக்கின்றவர்கள் பப்புவா நியுகினியில் உள்ள மானஸ் அல்லது நவுரு ஆகிய முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பில் உள்ள அவஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட இந்தியாவிற்கு செல்வதை விட வளமான இயற்கை. வகை2யான கனிமங்கள் கொண்ட பாப்புவா செல்வது எவ்வளோவோ மேல். crime சற்று அதிகம்தான். இருந்தும், சீனர்களைப் போல் புத்திசாலியாக, கடினமாக உழைத்தால் ஒரு 10 ஆண்டுகளில் அங்கு கோடிஸ்வரர் ஆகும் வாய்ப்பு நிச்ச்யம்3 உண்டு. நம்புங்கள். சீக்கிய, குஜாராத்திய சகோரர்கள் போல் இனவுணர்வுடன் செயல்பாட்டால் நீங்கள் அங்கு சில தமிழர் கிராமங்களையே பிறகு உண்டாக்கலாம். தெரியவில்லை என்றல் அங்கு குடியேறிய பின்னர் தொடர்புகொண்டு கனடா, இங்கிலாந்து நாட்டு சீக்கிய நண்பர்களைக் கேளுங்கள். மலேசியாவில் இருந்து நாங்களும் சிலர் அங்கு வந்து குடியேறலாம் – உங்கள் மூலம். எங்கே போனாலும் அபத்த அதர்ம பூமி இந்தியாவுக்கு மட்டும் திரும்பாதீர்கள். இப்போதைய தங்களின் தாங்கமுடியா துயரத்தையும் சிரமங்களையும் நாங்கள் உணர்கிறோம்.
Inthiyavirkku anupuvathaivida ithu evvalavo nallathu