அப்துல் காலிட் இப்ராகிம், சிலாங்கூர் மந்திரி புசார் பதவியை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தால் பிகேஆரிலிருந்து நீக்கப்படலாம் என்று கட்சி வட்டாரம் ஒன்று தெரிவித்துள்ளது.
நேற்று, பெட்டாலிங் ஜெயா, ட்ரோபிகானாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் காலிட்டை விலக்குவது பற்றியும் விவாதிக்கப்பட்டதாம்.
“காலிட்டைப் பதவியிலிருந்து அகற்ற இது ஒரு வழியாகும் என்றாலும், அப்படிச் செய்வது கட்சியின் பெயரைக் கெடுத்துவிடும் என்பதையும் உணர்ந்தே இருக்கிறோம்”, என அவ்வட்டாரம் கூறிற்று.
இன்று, இது பற்றிக் கட்சித் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலிடம் வினவியபோது “கட்சிநீக்கம்” பற்றிப் பேசப்பட்டதாகக் கூட்டக்குறிப்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை என்றார்.
நாகரிகம நியே நின்னுடு ,,,,,,,,,,ஆனால் பண வெரி ,,,,,,நீ என்ன செய்வ
சிலாங்கூரில் சம்பலத்தில் அதிக விழுகாடு மக்களுக்கு தானமாக கொடுப்பதில் காலீட் முதலிடம்,காலீட் பெரிய கோடீஸ்வறராம் கேள்வி.உங்களுக்கு தெரியுமா அவர் தந்தை யார் தெரியுமா,நாராயண நாராயண.