ஐ.நா விசாரணைக்குழு முன்பாக காணாமற் போனோரின் உறவுகள் இலங்கையிலிருந்து சாட்சியமளிக்கவுள்ளனர். அதற்குரிய ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகக் காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கையின் இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்ற சர்வதேச மனிதாபிமான சட்டமீறல்கள், மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணைகள் வெளிநாடுகளில் பல்வேறு நகரங்களில் நேரடியாக இடம்பெற்று சாட்சிகள் திரட்டும் நடவடிக்கை இடம் பெற்று வருகின்றது. அத்துடன் ஸ்கைப் ஊடாகவும் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
அதனடிப்படையில் இலங்கையிலுள்ள காணாமற் போனோரின் உறவுகளும் நவீன தொடர்பு சாதனங்கள் ஊடாக சாட்சியமளிப்பதற் குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாதுகாப்பு கருதி இதற்குரிய நடவடிக்கைகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன என்றும், இது இரகசியமாகவே மேற்கொள்ளப்படும் என்றும், எப்போது சாட்சியமளிப்பு இடம்பெறும் என்பதைப் பற்றி எந்தவொரு பகிரங்க அறிவித்தலும் விடுக்கப்படாதெனவும், காணாமற் போனோரைத் தேடிக் கண்டறியும் குழு மேலும் தெரிவித்துள்ளது.
எமது உறவுகளுக்கு நல்ல காலம் பிறக்கணும்