சிலாங்கூர் மந்திரி புசார் பதவியிலிருந்து விலக மறுத்ததற்காக பிகேஆர் அப்துல் காலிட் இப்ராகிம்மை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது.
இம்முடிவு பக்கத்தானின் பங்காளி கட்சி பாஸுடனான உறவைப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது.
கட்சியின் ஒழுங்குமுறை வாரியத்தின் தலைவர் டான் கீ குவோங் இந்த முடிவை அறிவித்தார். அவ்வாரியத்தின் கூட்டம் இன்று பிற்பகல் மணி 3.00 க்கு பிகேஆர் பெட்டாலிங் ஜெயா தலைமையகத்தில் கூடி கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்திற்கு இவ்விவகாரத்தை விவாதித்த பின்னர் இம்முடிவு எடுக்கப்பட்டது.
அக்கட்சியின் தலைமைத்துவ மன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் அக்கூட்டத்தில் பங்கேற்றனர், காலிட் இப்ராகிம்மை தவிர.
“நாங்கள் செய்த வேண்டியதை முறைப்படி செய்துள்ளோம். கட்சி சுமுத்தியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிப்பதற்கான சந்தர்ப்பம் அவருக்கு அளிக்கப்பட்டது”, என்று பிகேஆர் மத்திய செயற்குழு உறுப்பினர் ஆர். சிவராசா கூறினார்.
khalid துரோகி பச்சை கேவலமான துரோகி MIC யை விட கேவலமானவன்
அவன் உன் கட்சி காரன்தானே … அவனை பத்தி பேசு …. அவன் கட்சியை பத்தி பேசு… உன் கட்சி பத்தி பேசு… எதுக்கு மத்தவங்களை வம்புக்கு இழுக்குற…
காளிட்டின் அராஜகம் கண் கூடாக தெரிகிறது.
எல்லா கட்சிலேயும் ஊழல் இருக்கு .எவனையும் நம்ப முடியவில்லை
காவல்காரனே பயிரை மேய்ந்தால்????
எதிர் கட்சியில் உள்ள துரோகிகளுக்கு அடிக்கும்
லாட்டரி; ஏற்கெனவே சிலர் அனுபவித்து விட்டார்கள் !
அவர்களோடு சேர்ந்து கொள்ள இன்னும் சிலர் புறப்பட்டுள்ளார்கள் !
கீதை சொன்ன கண்ணன் சொன்னது போல் …,துரியோதனாதிகள்
திருந்த எவ்வளவோ சந்தர்ப்பம் கொடுத்தும் திருந்த மறுப்பவன் ;
விரைவில் எல்லாம் இழக்கும் காலம் வெகு தூரம் இல்லை !!!
இந்த உண்மை மே 13 காரண வாதிகளை அடையாளம் காட்டும் !!!
கிருஷ்ணா நீ உரைத்த கீதை பொய்க்காது !
அன்வார் காட்டிய வழியில் காலித். அன்று மகாதிர் பதவி விலக சொன்ன பொது மறுத்த அன்வாரின் செயல் நியாயம் என்றல் இதுவும் நியாயம் தான்
காலத்தின் கட்டாயம்,நன்மையும் தீமையும் பிரர்கொடுக்க வாரா.ஏதோ கேம் நடக்கிறது தெரியும்,வெற்றி பெற வாழ்த்துக்கள்.வாழ்க நாராயண நாமம்.