காலிட் எம்பி பதவியைக் காப்பாற்றிக் கொள்ள சுல்தானை சந்திக்கிறார்

PKR - Khalid -Sultanபிகேஆர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள அப்துல் காலிட் இப்ராகிம் தமது மந்திரி புசார் பதவியின் எதிர்காலம் குறித்து பேசுவதற்கு இன்று சிலாங்கூர் சுல்தானை சந்திக்கிறார். காலை மனி 8.45 க்கு கிள்ளான், இஸ்தானா அலாம் ஷாவுக்கு காலிட் வந்து சேர்ந்தார். சுல்தான் மணி 9.00 க்கு வந்தார். சுல்தான் காலை மணி 10.00 க்கு சிலாங்கூர் அரச மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். அக்கூட்டத்தில் காலிட்டின் நிலை பற்ரி விவாதிக்கப்படும். சுல்தான் சிலாங்கூர் சட்டமன்றத்தை கலைக்கலாம் அல்லது சட்டமன்றத்தில் காலிட்டிற்கு இருக்கும் ஆதரவை உறுதிப்படுத்துவதற்காக சட்டமன்றத்தின் நம்பிக்கை வாக்கை பெறுமாறு காலிட்டிற்கு சுல்தான் உத்தரவிடலாம். சிலங்கூர் அரச மன்றத்தின் உறுப்பினர்களை சுல்தான் நியமிக்கிறார். தற்போதைய மன்றத்தில் காலிட் உட்பட 20 உறுப்பினர்கள் இருக்கின்றனர்.