கிளந்தான் மந்திரி புசார் அஹ்மட் யாக்கூப், பிகேஆர் தலைவர் அப்துல் காலிட் இப்ராகிமுக்கு பாஸில் சேர அழைப்பு விடுத்ததாகக் கூறும் செய்தியை மறுக்கிறார்.
“(நேற்றைய த ஸ்டாரில்) ‘காலிட்டுக்கு பாஸ் கதவுகள் திறந்திருக்கின்றன என்கிறார் கிளந்தான் எம்பி’ என்று வெளிவந்த செய்தியில் கொஞ்சமும் உண்மையில்லை”, என அஹ்மட் யாக்கூப்பின் பத்திரிகைச் செயலாளர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கை கூறிற்று.
நேற்று செய்தியாளர்கள் காலிட் பாஸில் சேர்வது பற்றி வினவியபோது “அதைப் பற்றி நாங்கள் கருத்துரைக்க இயலாது. அது அவர் முடிவெடுக்க வேண்டிய விசயம்”, என்று மட்டுமே அஹ்மட் யாக்கூப் கூறியதாக அந்த அறிக்கை விளக்கியது.