சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மந்திரி புசார் காலிட் இப்ராகிம்மை இன்று சந்திக்க மாட்டார்கள். மாறாக, நாளை நடைபெறவிருக்கும் ஆட்சிக்குழு கூட்டத்தின் போதுதான் காலிட்டுடனான சந்திப்பு நடைபெறும்.
ஆட்சிக்குழுவின் டிஎபி உறுப்பினர்கள் கட்சியின் கட்டளைக்காக காத்திருக்கின்றனர் என்றும் அக்காரணத்திற்காக அவர்கள் காலிட்டை தனிப்பட்ட முறையில் சந்திக்க மாட்டார்கள் என்று சிலாங்கூர் ஆட்சிக்குழு அலுவலக வட்டாரத்திலிருந்து மலேசியாகினிக்கு தெரிவிக்கப்பட்டது.
ஆட்சிக்குழு உறுப்பினர்களைத் தனித்தனியாக சந்தித்து அவர்கள் தம்முடன் ஒத்துழைக்க விரும்புகின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புவதாக நேற்று காலிட் இப்ராகிம் கூறியிருந்தார்.
“நாளைய கூட்டத்தில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், அனைவரும், கலந்துகொள்வர். பிகேஆரும் அதில் இருக்கும்”, என்று பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு வட்டாரம் கூறியது.
யாருக்கு தலைவர் ???
பாரிசானிடம் அடைக்களம் ஆகிவிட்டார் எனபது நிரூபிக்கப்பட்டுவிட்டது ..
anytime u will be IN HELL