நீதிமன்றத்துக்கு வெளியில் இளைஞர் கும்பலால் பாஸ் எம்பி-க்கு தொல்லை

pas mpஇன்று  காலை  நீதிமன்றத்திலிருந்து  வெளிவந்த  பாஸ்  எம்பி  காலிட் சமட்டை  ஆத்திரம்  கொண்ட  மலாய்க்கார  இளைஞர்  கூட்டமொன்று  சுற்றி  வளைத்துக்  கொண்டது.

“நான் (நீதிமன்றத்திலிருந்து) வெளிவந்ததும் ஒரு  மலாய்  இளைஞர் என்னிடம் வந்து  காலிட்  சமட்டா  என்று  வினவினார். ஆமாம்  என்றதும் என்மீது  காரித்  துப்பினார்.

“பின்னர், மேலும் பத்து பேர்  சேர்ந்துகொண்டு  என்னைப்  பழித்துரைத்தார்கள். என்னை  மலாய்  இனத்துக்கு துரோகி  என வசை  பாடினார்கள்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

ஷா  ஆலம்  எம்பி-ஆன  சமட்மீது,  சிலாங்கூர்  இஸ்லாமிய  விவகார  மன்ற(மயிஸ்)த்தின்  அதிகாரத்தை  எடுத்தெறிய  வேண்டும்  என்று  கூறியதற்காக  கோலாலும்பூர்  செஷன்ஸ்  நீதிமன்றத்தில்  தேச  நிந்தனைக்  குற்றம்  சாட்டப்பட்டது.