மந்திரி புசார் பதவிக்கான பக்கத்தான் ராக்யாட்டின் வேட்பாளர்களின் பெயரை அரண்மனையிடம் தாக்கல் செய்வதற்கான இறுதி நாள் அடுத்த புதன்கிழமை என்று அரண்மனை நிர்ணயித்துள்ளது.
மலேசியாகினி பார்த்துள்ள இக்கடிதத்தில் செப்டெம்பர் 3 குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சுல்தானின் தனிப்பட்ட செயலாளர் முகம்மட் முனிர் பாணி பக்கத்தான் கட்சிகளுக்கு அனுப்பியுள்ளார்.
இதனிடையே, கட்சிகள் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை முன்வைக்க வேண்டும் என்ற கோரிக்கை இவ்விவகாரத்தில் சுல்தான் ஒரு முடிவு எடுப்பதை எளிதாக்கும் என்று முகம்மட் முனிர் கூறினார்.
வான் அஸிசாவுக்கு அனுப்பப்பட்டுள்ள இக்கடிதத்தில் கட்சிகள் இரண்டுக்கு மேற்பட்ட பெயர்களை முன்வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இக்கடிதத்தின் நகல்கள் பாஸ் தலைவர் ஹாடிக்கும் டிஎபி தலைமைச் செயலாளர் குவான் எங்கிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நன்றி மேன் தாங்கிய அரசர் அவர்களோ!!! , தாங்களிடம் வேறு பெயர்களை மற்ற கட்சிகள் சமர்பிக்காவிடில் , சமர்பிக்கப்பட்ட பெயரை மட்டும் அரசர் பரிசீலிப்பார் என்று மக்கள் நம்புகிறார்கள்!!!! ஆனால் பதவியை ராஜனாமா செயதவரை, மக்கள் ஆதரவை இழந்தவரை ஒரு பதவியில் வைத்திருப்பது பெரிய பாதகம் !!
நம் நாட்டில் அரசியலமைப்பு தள்ளாடுகிறது.இது போன்று ஒருவர்க்கு மேல் பெயர் குறிப்பிட்டு கேட்பது நம் அரசியலமப்பில் இல்லாத ஒன்று. இதுவரை இப்படி நடந்ததது இல்லை.
சுல்தானும் அரசமைப்பை அறிந்து உணர்ந்து பாதகமில்லாமல் தேர்வு செய்வார் என்றே செலாங்கொர் மக்களின் நம்பிக்கை. சட்ட வல்லுனர்களின் கருத்தையும் கவனத்தில் கொண்டு சிறந்த தேர்வினை செய்வார் என்றே நம்புவோம். மகேசன் எப்படியோ மக்களும் அப்படியே!!!!
இந்த சமயத்தில் கர்பால் சிங் இல்லாமல் போய்விட்டாரே , என்ற ஆதங்கம் என்னுள் மேலோங்குகிறது!!!
தகுதியற்றவரை முன்மொழிந்தால் அரண்மனை எப்படி அங்கீகரிக்கும் 3/9/2014ல் மேலும் வான் பெயரை மாத்திரம் அனுப்பிவைத்தால்,அரண்மனை இந்த கூட்டனியில் வான்,னை தவிர வேறு தகுதியானவர் கிடையாது சொல்லி அதிகாரத்தை வும்னோவிடம் கொடுக்கும்,வாழ்க நாராயண நாமம்.
யார் ஆட்சி செய்தாலும், நம்ம பொழப்ப பாப்போம்,
சற்ற மன்றத்தை கலைத்து விட்டு, மறு தேர்தல் நடத்துவது சிறப்பு.
முடிந்தால் சீனர் அல்லது தமிழர் கலையின் mb பெயர் கொடுப்பது நல்லது
யார் ஆட்சியிலும் இங்கு இந்தியர்களுக்கு பொன்மழை பெய்யப்போவது இல்லை. உண்மை. அன்வாரோ, காலிட்டோ நமக்கு முக்கியம் அல்ல. ஆனால் ….. இந்த MB போராட்டம் நமது நாடு எந்த திசையில் செல்லப்போகிறது என்பதை நிர்ணயக்கும். அதுவே எனது ஆதங்கம். சமீபத்தில் பேராக்கில் பேராக்-சரவாக் காற்பந்து போட்டியில் சரவாகிற்கு ஆடிய சந்துரு இன தூவேசத்திற்கு ஆட்பட்டதாக செய்தி. இன்னும் இதைவிட பன்மடங்கிற்கு நம்மை ஆட்படுத்த வேண்டுமா? வசதி உள்ளவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கலாம். வசதி இல்லாதவர்கள்…?! இப்பொழுது அரசில் ஏதோ கிடைக்கும் contaract கூலி வேலை கூட இல்லாமல் அவதியுறுவர். umnob (+pas) அணி வென்றால் நாடு இன்னும் அதிதீவிர தீவிரவாதத்துக்கு ஆட்படும். அரசியல் என்பது அன்றாட நிகழ்வுகளை மட்டும் பார்ப்பது அன்று. தூரநோக்குப் பார்வை மிக3 அவசியம். நமது விடுதலையின் போது nonsகளுக்கு அது இன்மையினாலேயே இன்று நமக்கு எல்லையற்ற அவலம்; துன்பம். இனியும் அதே நிலைப்பாடா..?! குறிப்பாக ஆளுங்கட்சியின் பட்டுவாடா லிஸ்டில் உள்ள இன, மத தீவிரவாதக் குண்டர்களின் அட்டுழியம் கட்டுக்கு அடங்காமல் போகும். ஓர் இன, மத மேலாண்மை எல்லையின்றி விரியும். இப்பொழுது சிவனே என தங்கள் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கும் மிக2 வசதி படைத்த நம்மவர்களின் குழந்தைகள், பேரர்கள், கொள்ளுப்பேரர்கள் கூட இதனால் நிச்சயம் அப்பொழுது அதிகம் பாதிப்படைவர் . இந்த நாட்டில் ஆளும் வர்க்கம் தீவிரவாதத்தை நன்கு உரம் போட்டு வளர்க்கிறது. அதன் தாக்கத்தை முற்றிலும் களைய முடியாது. ஆனால் PR வென்றால் இது ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். அரசியலில் யோக்கியதனத்தை எதிர்பார்ப்பது மடத்தனம். இந்தப் போராட்டத்தில் நமக்கு சுயநலமின்றி, சமூக நலன்மிக்க பார்வை தேவை. umnob, pas கும்பல் வென்றால் நம்மில் ஒரு சில சுயநலமிகளுக்கு சில துண்டுகள் கிடைக்கலாம். ஆனால், இன மேலாண்மை ஓங்கும். மத தீவிரவாதம் அதிகரிக்கும். அதுவே நமது கவலை இந்த MB கோதாவில். .
பரவாயில்லையே இப்போ பலரும் சமுக நலன் கரதி நேரம் ஒதுக்கி திட்டங்கள் தீட்டுகின்றனர்.கேம்ப் வாழ்த்துக்கள்.ஆனால் தோழரே,ஒரு இனத்தை பாதுகாக்க அரண் எனப்படும் துடிப்பான இளைஞர் பங்கு முக்கிய இடம்பெறுகிறது.இல்லையென்றால் நம் இந்து மதத்தை சீன்டி பார்க்கும் திராவிடர்போல் கண்டவனெல்லாம் சீன்டி சீரழித்திருப்பர் இஸ்லாத்தை,இதுரோன்ற நிகழ்வை அழித்து ஒழித்து அச்சமூட்டி எச்சரிக்கை செய்தமையால் எவறுக்கும் பயம் அதனால் மரியாதை கொடுக்கின்றோம் அடக்கி வாசிக்கிறோம்.சுல்தான் மத காவலர் ஆகையால் அங்கே கை வைத்தாலும் ஆபத்து.இதன் பேர் அராஜகம் கிடையாது.நம் குடும்பத்துக்கு நாம் அரண்,நம் குடும்பத்தை சீன்டினால்,சீன்டிய கையை வெட்டுவோம்,இது நம் கடமை,இதைவிடுத்து போலீஸ்ஸிலா புகார் கொடுக்க ஒடுவோம்.போலீஸ் நம்மை கைது செய்து நீதி முன் நிறுத்தும்,யாம் செய்தது குற்றமில்லை ஆனால் சட்டம் குற்றம் சொன்னால் நான் அதை ஏற்கிறேன் சொல்லி கம்பி எண்ணுவதில் பெருமையே,இதுபோலவே அதுவும்,வாழ்க நாராயண நாமம்.
மிக சரியாகச் சொன்னிர்கள் திரு காமப்பு அவர்களே !வருங்கால நம் சந்ததிகளின் நலம் பொருட்டே என் ஆதங்கமும் !