பயங்கரவாதிகளின் சொர்க்க பூமி பாகிஸ்தான்: அமெரிக்கா விமர்சனம்

america_critises_001பயங்கரவாதிகளின் சொர்க்க பூமியாக பாகிஸ்தான் விளங்குவதாக அமெரிக்காவின் பெண்டகன் செய்தித்துறை செயலாளரான அட்மிரல் ஜான் கிர்பி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் பயங்கரவாதிகளால் அமைதியை இழந்து தவிக்கின்றது.

நீண்ட காலமாக பயங்கரவாதிகள் மீது தாக்குதலை நடத்தாமல் இருந்த பாகிஸ்தான் ராணுவம் கடந்த கோடை காலம் முதல், அவர்கள் மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பொது வாழ்க்கைக்கு கேடு விளைவிக்கும் இத்தகைய பயங்கரவாதிகள் மீதான தாக்குதல் தொடர நாங்கள் விரும்புகிறோம் என்றும் அதனால் பாகிஸ்தானுடன் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

மேலும் தங்களுக்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே தற்போது சமூக உறவு நிலவுவதாகவும் கிர்பி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

– http://world.lankasri.com

TAGS: