2014ம் ஆண்டின் ஐந்து மாதங்களுக்குள் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக 80 வெறுக்கத்தக்க சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது.
முஸ்லிம் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அச்சுறுத்தல்கள், தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகள் என்ற அடிப்படையில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக முஸ்லிம் செயலகம் தெரிவித்துள்ளது.
இதில் அளுத்கம சம்பவங்கள் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பை வெளிச்சத்துக்கு கொண்டு வந்ததாக முஸ்லிம் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக அளுத்கம மற்றும் பேருவளை பகுதிகளில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை ஏனைய பகுதிகளில் உள்ளவர்கள் தெரிந்துகொள்ளாதபடி ஊடகங்கள் அவற்றை வெளிக்காட்டாமல் தடுக்கப்பட்டன.
பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் கருத்துக்கள் யாவும் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகளை அந்த அமைப்பினர் கையிலெடுத்து செயற்படுவது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தவிர ஒரு இடத்தில் முஸ்லிம் மாணவி ஒருவரின் தாயை இஸ்லாமிய உடையுடன் வரக்கூடாது என்று பாடசாலை நிர்வாகம் ஒன்று தடுத்தமையானது, முஸ்லிம் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டும் செயல்களில் ஒன்றாகும் என்று முஸ்லிம் செயலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 40 வருடங்களாக தமிழர்களுக்கு இழைக்க பட்ட கொடுமைகள் ,கொலைகள் எல்லாம் இந்த முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை எதோ சிங்களவர்கள் நல்லவர்கள் என்று பிதட்டினார்கள் …தமிழை தாய் மொழியாக கொண்ட இவர்கள் நேரத்திற்கு ஏற்றபடி …நிறத்தை மாற்றினார்கள் …இன்று அனுபவிகின்ரர்கள் ….இன்று இலங்கையல் சிங்கள ராணுவம் இல்லாத முஸ்லிம் கிராமம் கிடையாது …அன்று சிங்கள அரசுக்கு ..தமிழர் பற்றி உளவு வேலை பார்த்தவர்கள் இவர்கள் பணம் ..பதவிக்காக
வேதனை.
இணையுங்கள் தமிழ் தேசியத்துடன் , நிமிர்ந்தது நிர்ப்போம் நிம்மதி காண , ஏற்ப்பார் தலைவர் .