பிகேஆர் செமம்பு சட்டமன்ற உறுப்பினர் லீ சியான் சங், குவாந்தானில் நடைபெறும் மெர்டேகா கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மெர்டேகா கொண்டாட்டங்களில் தாம் பங்கேற்பது தடுக்கப்பட்டிருப்பதாக லீ இன்று தெரிவித்தார்.
கடந்த வாரம் மாநிலச் செயலகம் ஒரு குறுஞ்செய்தி வாயிலாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் மெர்டேகா கொண்டாட்டத்திலும் அதற்கான ஒத்திகையிலும் கலந்துகொள்ள வருமாறு அழைத்திருந்தது என லீ கூறினார்.
“ஆனால் அதன் பின்னர் மாநிலச் சட்டமன்ற செயலாளர் தொலைபேசியில் கூப்பிட்டு எனக்குக் கொடுக்கப்பட்ட அழைப்பு இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
“சட்டமன்றம் என்னை இடைநீக்கம் செய்திருப்பதால் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள எனக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறதாம்”, என்றவர் சொன்னார்.
கடந்த ஆண்டு இறுதியில், பகாங்கின் உபரி பட்ஜெட்டை “பொய்யானது” என்று கூறியதற்காக லீ இரண்டு கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ள தடை விதித்து பகாங் சட்டமன்றம் அவரை இடைநீக்கம் செய்தது..
இந்நாடு சுதந்திரம் பெற ஆங்கிலேயர்களுடன் ரத்தம் சிந்தி போராடிய கம்யூனிஸ்ட் தியாகிகளையே நாங்கள் மதிக்கவில்லை. உங்களுக்கென்ன சிவப்பு கம்பளமா விரிக்கப் போகிறோம்.? கடையிலே போய் உட்கார்ந்துக்கொண்டு நண்பர்களோடு ‘மா ஜோங்’ விளையாடுங்கள் தோழரே!
அவர் சட்டமன்றத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதால் சட்டமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் மெர்டேகா கொண்டாட்டங்களில் பங்கேற்பதை பாரிசான் சர்வாதிகாரப்படி அவர் தடுக்கப்பட்டிருக்கலாம் ஆனால் இந்நாட்டின் பிரஜை என்ற முறையில் மெர்டேகா கொண்டாட்டங்களில் இருந்து யாரையும் தடுக்க எவனுக்கும் உரிமை இல்லை. அப்படித் தடுப்பவன் நாட்டுத் துரோகியென்றே அழைக்கபடுபவான்
பிச்சை எடுத்ததிற்கே இப்படினா !!! உயிரை கொடுத்து சுதந்திரம் வாங்கி இருந்தா, மற்ற இனங்கள் இந்நாட்டில் எதையும் கொண்டாட முடியாது.
கலந்துகொள்ளத் தானே தடை. கொண்டாடத்தடை இல்லையே!
நாட்டின் சுதந்திரத்திற்கு உயிரை பணயம் வைத்து போராடிய கம்யுனிஸ்ட் வீரர்களுக்கு வெற்றிவீர வாழ்த்துக்கள்.
வாழ்க கம்யுனிசம் !!!,