போலீஸ் வாகனம் மீது தாக்குதல்: எகிப்தில் 11 பேர் பலி

egypt deathஎகிப்தில் போலீஸ் வாகனம் மீது செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்ட வெடிகுண்டுத் தாக்குதலில் 11 காவலர்கள் உயிரிழந்தனர்.

எகிப்தின் வடக்கு சினாய் பகுதியில் உள்ள ஷேக் ஸýவாயித் எனுமிடத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. போலீஸார் வாகனத்தைக் குறி வைத்து நடைபெற்ற வெடிகுண்டுத் தாக்குதலில் அதிகாரி ஒருவரும் 10 காவலர்களும் கொல்லப்பட்டனர். நால்வர் பலத்த காயமடைந்தனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.