பெல்டா வழக்கில் பிகேஆர் எம்பிக்கு சாதகமான தீர்ப்பு

 

Felda MP winsபெல்டா வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் டான் கீ குவோங்கிற்கு எதிராகத் தொடுத்திருந்திருந்த ரிம200 மில்லியன் வழக்கில் தோல்வி கண்டது. பெடரல் உச்சநீதிமன்றம் பெல்டாவின் வழக்கை தள்ளுபடி செய்தது.

பிகேஆர் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவருமான டான் தமக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

“ஆண்டவனுக்கு நன்றி கூறுகிறேன். பெடரல் நீதிமன்றம் பெல்டா வழக்கில் எனக்குச் சாதகமாக தீர்ப்பு அளித்துள்ளது. நீதிக்காகவும் சிறந்த அரசாங்கத்திற்காகவும் நாம் தொடர்ந்து போராடுவோம்”, என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.