பாஸ் துணைத் தலைவர் முகம்மட் சாபு, சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கு கட்சியின் ஆகஸ்ட் 17 கூட்டத்தில் முடிவு செய்யப்பட்ட இரண்டு பெயர்கள் தவிர்த்து வேறு பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருப்பது பற்றித் தமக்குத் தெரியாது என்கிறார்.
அவ்விரண்டு பெயர்களுடன் பாஸ் அதன் கட்சியைச் சேர்ந்த ஒருவரின் பெயரையும் பரிந்துரைத்திருப்பதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்திருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
“புதிய பெயர்கள் பற்றி பாஸ் மத்திய குழுவுக்குத் தெரியாது ஏனென்றால் அது பற்றி அந்த மத்திய குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படவில்லை”, என்றாரவர்.
மத்தியக் குழுக் கூட்டத்தில் பிகேஆர் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில், மற்றும் அதன் துணைத் தலைவர் அஸ்மின் அலி ஆகியோரின் பெயர்களை மட்டுமே முன்வைப்பது என முடிவெடுக்கப்பட்டதாக மாட் சாபு வலியுறுத்தினார்.
ஐயோ!!! உலாமாக்கள் இப்படிப்பட்டவர்களா???
“நியமனம் பற்றி அறியேன்” கிழிச்சே ! போடா …………..