காலஞ்சென்ற தியோ பெங் ஹொக்கின் குடும்பத்தார், அந்த டிஏபி அரசியல் உதவியாளரின் மரணத்துக்குக் காரணமானவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அதற்கு மூன்று நாள் அவகாசமும் அளித்துள்ளனர்.
நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஏற்கனவே வாக்குறுதி அளித்துள்ளார் என்றும் இன்று முறையீட்டு நீதிமன்றம் அது தற்கொலை அல்ல என்று முடிவு செய்திருப்பதை அடுத்து அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தியோவின் சகோதரி லீ லான் கூறினார்.
“தக்க நடவடிக்கை எடுக்க நஜிப்புக்கும் போலீஸ் படைத் தலைவருக்கும் மூன்று நாள் அவகாசம் கொடுக்கிறோம்”, என்றாரவர்.
மக்கள் : 3 நாட்களுக்குள் பிரதமரால் நடவடிக்கை எடுக்க முடியுமா ?
நக்கல் : பிரதமர் MH 17 விமான விபத்தில் பலியானவர்கள் முஸ்லீம் பெருநாளுக்குள் இந்நாட்டிற்கு கொண்டு வருவேன் என்று வீர முழக்கம் செய்தும், இன்றுவரை அனைத்து உடல்களையும் கொண்டு வர முடியவில்லையே. அதுபோல்தான் இதுவும்.
கொ…. இல்லாதவன் அவன் நடவடிக்கை எடுக்க மட்டன் அஹ சோ
சகோதரி லீ லான் , அப்படிப் போடு அருவாள…