உள்துறை அமைச்சர் அஹமட் ஸாகிட் ஹமிட் குறிப்பிட்டுள்ள நான்கு புனிதமான விவகாரங்கள் பற்றிய துள்ளியமான சட்டங்கள் மற்றும் தடையுத்தரவுகள் இல்லை என்றால், அவற்றைப் பற்றி பேசும் மலேசியர்களை தண்டிப்பது நியாயமற்றதாகும் என்று முன்னாள் சட்ட அமைச்சர் ஸைட் இப்ராகிம் கூறுகிறார்.
தேச நிந்தனை குற்றச்சாட்டுகள் நிரம்பி வழியும் இந்நேரத்தில், அதனைப் பொருட்படுத்தாமல் தென்னாப்பிரிக்காவுடன் மலேசியவை ஒப்பிட்ட அவர், தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கீடு முறை மலேசியாவின் நிலைமையைவிட சிறப்பானது ஏனென்றால் அங்கு சட்டங்கள் தெளிவாக இருந்தன என்றார்.
“சில தினங்களுக்கு முன்னர் உள்துறை அமைச்சர் பேசியதை நீங்கள் கவனமாக கேட்டிருந்தீர்களானால், அவர் நான்கு புனித விவகாரங்களை ஒன்று சேர்த்து அவற்றை சமூக ஒப்பந்தம் என்று கூறி அவற்றை மீறுவது குற்றம் என்றார். அவரது பேச்சு உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் ஏனென்றால் அந்த நான்கு புனித விவகாரங்களில் குற்றம் என்பதை திட்டவட்டமாக உருவாக்குபவைகள் யாவை என்பது தெளிவாக்கப்படவில்லை.
நான்கு புனித விவகாரங்கள்
“அம்னோ கிடைக்கக்கூடிய அனைத்து சட்டங்களையும் பயன்படுத்தி அவை குறித்து கேள்வி கேட்போரை தண்டிக்கும், அமைச்சர் அலறினார்”, என்று ஸைட் அவரது இணைய தளத்தில் இன்று இடுகை செய்துள்ளார்.
பகசா மலேசிய பற்றி கூறிய ஸைட் இப்ராகிம், நியாயமான மலேசியர்கள் எவரும் தேசிய மொழிக்கு எதிராக இல்லை என்று குறிப்பிட்டார்.
“அது அமைச்சரின் மனதில் மட்டும் இருப்பது சாத்தியமே. செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் ஆங்கிலத்தில் பேசினால் (அதை அவர் விரும்புகிறார்), அவர் தேசிய மொழியை அவமதிக்கிறார் என்றாகுமா?
“மொழியை ஒருவர் “எதிர்க்கவில்லை” என்று கருதப்படுவதற்கு ஒவ்வொரு மலேசியரும் குறைந்தபட்சம் ஒரு நாளில் ஒரு தடவையாவது பகசா மலேசியாவில் பேசித்தான் ஆக வேண்டுமா? எது குற்றத்தை உருவாக்கும் கூறுகள் என்பதைத் தெளிவு படுத்துவதற்கு நாம் சட்டங்களை இயற்றி இருக்க வேண்டும்.
“இல்லை என்றால், அம்னோ நினைத்தவரை எல்லாம் மொழிக்கு விசுவாசமாக இல்லை அல்லது அதற்கு எதிராக இருக்கிறார் என்று கூற இயலும். வேறு வகையில் கூறினால், நிலைமை (தென்னாப்பிரிக்க) இன ஒதுக்கீட்டில் இருந்ததை விட மோசமாக இருக்கும் ஏனென்றால் மக்களுக்கு குற்றம் விளைவிக்கும் செயல் என்ன என்று தெரியாமல் இருப்பார்கள். எல்லாம் அம்னோவை பொறுத்தது,” என்று ஸைட் மேலும் கூறினார்.
ஆட்சியாளர் பற்றி குறிப்பிட்ட ஸைட், எப்போது ஓர் ஆட்சியாளர் அவமதிக்கப்படுகிறார். அதனையும் கூட எழுத்து வடிவில் போட வேண்டும் என்றார்.
“ஒரு மலாய் ஆட்சியாளர் நாட்டின் நிருவாகத்தில் செயலாக்க அதிகாரம் வேண்டும் என்று தீர்மானித்தால், அதை அம்னோ அனுமதித்தால், அதனை நமது சட்டத்தில் கூற வேண்டும். அப்போதுதான் மக்கள் அதனை எதிர்ப்பது குற்றம் என்று தெரிந்து கொள்வார்கள்.
“ஓர் ஆட்சியாளரின் விருப்பம் பற்றி கருத்து கூறுவது கூட குற்றம் என்பதைத் தடை செய்வதற்கான தெளிவான சட்டத்தை இயற்றுங்கள். சீன பேரரசர் அம்மாதிரியான தகுதியை சீன பேரரசு காலத்தில் (Middle Kingdon) கொண்டிருந்தார்.
“அப்போதுதான் நமக்கு கேள்வி கேட்க உரிமை இருக்கிறது என்று நம்ப வைத்து விட்டு பின்னர் அதற்காக கிரிமினல் குற்றச்சாட்டுக்கு ஆளாகமல் இருக்க முடியும். உண்மையில் ஒரு பகுதி-இன ஒதுக்கீடு சாரம் கொண்டவர்களான நாம் வழக்கமான ஜனநாயமாக விளங்கிறோம் என்று பாசாங்கு செய்ய முடியாது”, என்று அவர் மேலும் கூறினார்.
இஸ்லாம் மற்றும் மலாய்க்காரர்களின் சிறப்பு தகுதி
இஸ்லாம் ஒரு “பெரிய பிரச்சனை” என்று குறிப்பிட்ட அந்த முன்னாள் சட்ட அமைச்சர், எச்செயல்கள் அச்சமயத்தை அவமதிக்கின்றன, அதற்கு சாவால் விடுகின்றன என்று வியந்தார்.
“இப்போதைக்கு, அதிகாரத்தினர் செய்யும் எது குறித்தும் கேள்வி கேட்கக் கூடாது, ஏனென்றால் அது இஸ்லாத்தை அவமதிப்பதாக அர்த்தமாக்கப்படும். இந்தப் பிரச்சனையை அல்லது சூழ்நிலையை தெளிவாக விளக்குவதன் வழி மக்களுக்கு உதவுங்கள்.
“எடுத்துக்காட்டாக, நண்பரும் வழக்குரைஞருமான ரோஸ்லி டாலான் இன்னொரு இஸ்லாமியர் காசிம் அஹமாட்டை ஷரியா நீதிமன்றத்தில் பிரதிநிதிக்கிறார் என்பதற்காக அவர் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளார்”, என்று ஸைட் தெரிவித்தார்.
மலாய்க்காரர்களின் சிறப்புத் தகுதி என்ற நான்காவது புனித விவகாரம் பற்றி குறிப்பிட்ட ஸைட், (தென்னாப்பிரிக்காவில்) இன ஒதுக்கீடு அமலில் இருந்த காலத்தில் வெள்ளையர்களை அவர்கள் உருவாக்கிய வேற்றுமைப்படுத்தும் கொள்கைகள் குறித்து கேள்வி கேட்பது ஒரு குற்றமாகும்.
“இது (வெள்ளையர் கொள்கை) உள்துறை அமைச்சரின் சமீபத்திய பேச்சிலிருந்து எந்த அளவுக்கு வேறுபட்டிருக்கிறது? இப்போதைக்கு, அவர் பேசிய மலாய்க்காரர்களின் உரிமைகள் எதனை உள்ளடக்கியது என்பது எவருக்கும் தெரியாது.
“(அரசமைப்புச் சட்ட) பிரிவு 153 “சலுகைகள்” பற்றியதாகும். ஆகவே, மலாய்க்காரர் “உரிமைகள்” என்ன என்பது எனக்கு தெரியவில்லை. நாம் அதிகமான மலாய்க்காரர்களை தொழிற்பயிற்சி மற்றும் பகுதி-தொழிலியத்துவ பயிற்சிக்கும் அனுப்ப வேண்டும் என்றும் அதனால் குறைவானவர்களை பல்கலைக்கழங்களுக்கும் அனுப்ப வேண்டும் நான் கூறினால், அமைச்சர் என்னை மலாய்க்காரருக்கு எதிரானவர் என்று நினைக்கக்கூடும்.
“(முன்னாள் பிரதமர்) டாக்டர் மகாதீர் மலாய்க்காரர்கள் சோம்பேறிகள் அல்லது நாணயமற்றவர்கள் என்று சமீபத்தில் கூறினார். இது ஒரு குற்றமா? (தென்னாப்பிரிக்காவில்) ஆப்ரிக்கானெர்கள் (வெள்ளையர்கள்) கறுப்பர்களுக்கு செய்தது போல் மலாய்க்காரர்களை பற்றி நாம் பேசுவதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கும் அனைத்து விவகாரங்கள் பற்றிய பட்டியல் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும்”, என்று அவர் மேலும் கூறினார்.
தெளிவான சட்டங்கள் இல்லாத நிலையில், அம்னோ எது குற்றம் எது குற்றமில்லை என்பதை வரையறுக்கும் ஒரே அதிகார சக்தியாகி விடும்.
“அம்னோவுக்கு சினத்தை ஏற்படுத்தினால் அல்லது அது அவமதிக்கப்பட்டு விட்டதாக அது கருதினால், அது ஒரு குற்றமாகும் என்பது தெளிவாகி விட்டது. இது பெரும் நாசம் விளைவிக்கக்கூடியது என்பதோடு நியாயமற்றதாகும். நிச்சயமாக, இது (தென்னாப்பிரிக்காவில்) இன ஒதுக்கீடு காலத்தில் இருந்த சட்டங்களை விட மிக மோசமானதாகும்”, என்று ஸைட் இப்ராகிம் கூறினார்.
இந்த நான்கு வார்த்தைகளையும் சொல்வது கூட குற்றமாகி விடலாம். அவற்றைச் சொல்லவே வேண்டாமே!.
இந்த 4 புனிதங்களுடன் மேலும் ஒன்றையும் ஆளும் கட்சி தன்மூப்பாக, தொடர்ந்த உயிர்வாழ்விற்காக, தனது பெயரையும் இணைத்துக்கொண்டுள்ளது. ஆக 5.
சபாஷ் சார்! சட்டம் தெரிந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் நாட்டின் சட்டம் சரியில்லை என்பதால் பல பழைய கேஸ்களை உடைத்து நியாமான முடிவுகளை எடுக்க வழி விட்டவர். ஆனால் சட்டம் தெரியாமல் ஒரு ஜனநாயக நாட்டின் அதுவும் பல்லின நாட்டின் இன குமுறல் குளறுபடிகளை காரணம் காட்டி மிரட்டுவது குழப்பம்தான்.
தேச நிந்தனை என்பது ஒட்டு மொத்த மலேசியர்களை அவமதிப்பதாக கருத வேண்டும். அதை விடுத்தது தனிப்பட்ட ஒரு இன அவமதிப்பு என்பது தவிர்க்க வேண்டும். எந்த வித அவமதிப்பும் அரசை நோக்கியதாக இருக்காது மாறாக பெரிய பதவிகளில் இருப்பவர்கள் செய்யும் சேட்டைகளை உரிமை கருதி கடமையுடன் வெளிக்கொணர்வது தேச நிந்தனையாக கொள்ள முடியாது. அப்படி அது தவறாகுமானால் சிவில் சட்டத்தில் defamation கேஸ் போட்டு இருக்கும் சட்டத்தை மதித்தல் ஜனநாயக சிறப்பாக இருக்கும். ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது மக்கள் குரல், மனித நேயம், அரசு உரிமைகள் என்பது சாதாரன மனிதனுக்கும் உபயோகமாக இருக்க வேண்டும். தேச நிந்தனை என்று அடாவடி செய்யும் அதிகாரிகளை அல்லது அரசை ஏசினால் தற்காலத்திய நவீன மனித சிந்தனைகள் மீண்டும் அடிமைத்தன காட்டுவாசிகள் நிலைக்கு போகும் அவலம் ஜனநாயகமல்ல! அது அதிகாரத்தின் விகடமாகிவிடும்.
அய்யா, சைட் இப்ராகிம், உங்களைபோல் நியாயமாக சிந்தித்து பேசுபவர்கள்தான் நம் நாட்டிற்கு தேவை.பாகச மலேசிய மலாய் கார்களின் தாய் மொழியாக இருந்தாலும்கூட , அனைத்து மலேசியர்களுக்கும் தொடர்பு பாலமாக விளங்குகிறது. அந்த பாலம் இல்லாமல் நாம் நமது வாழ்க்கை பயணத்தை தொடர முடியாது.;இன்னாட்டில்!
தவறை சரி என்று நிரூபிக்க
எவ்வளோ விளக்கங்கள்…
கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டதென கொக்கரிக்கிறார் சாந்தி அவர்கள். எப்போதுதான் தெளிவு பிறக்குமோ!!! மஞ்சள் காமாலைக்காரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சளாகவே தெரிவது போல இருக்கு இந்த சாந்தியின் கூற்று. இறைவா! சாந்திக்கு கருணை காட்டி அவரது கோளாறு நரம்பினை கொஞ்சம் தட்டி விடுவீராக!!!!
இதைத்தான் கிறுக்கனும் ஒரு நல்ல உதாரணம் கொடுத்துள்ளார். விளக்கமிலா சட்டத்தினைக் கொண்டு எத்தனை விவாதங்கள்!!. தெளிவில்லா சட்டத்தினை குறிப்பிட்டு எத்தனை ஏமாற்றங்கள், எத்தனை உரிமைப் பறிப்புக்கள். கேட்டால், அர்த்தமற்ற தேச நிந்தனை குற்றம் என்பர்.!!! பைத்தியக்காரர்களாவது எவ்வளவோ மேல். செருப்படிக்கும் மாற மாட்டா ஜென்மங்கள்!!!!
“தவறை சரி என்று நிரூபிக்க
எவ்வளோ விளக்கங்கள்…” எது தவறு எது சரி என்று shanti சொல்லவிலையே !! ஏன் எது தவறு எது சரி என்று உங்களுக்கும் தெரியாதா ? தெரியவில்லை என்றால் FEDERAL CONSTITUTION OF MALAYSIA வில் இருக்கும் 183 articles ளையும் படித்து விட்டு , பின்பு பேசவும் ! எது சரி , எது தவறு என்று…..
உங்கள் போராடும் நோக்கம் என்னமோ சரிதான் அனால் இருக்கும் இடம்தான் சரி இல்லை..இந்நிலை தொடர்ந்தாள் கடைசி வரை நிங்கள் தான் கொக்கரிப்பீர்கல் தராசு அவர்களே..கடைசியில் உங்களுக்கு தொற்று வியாதிதான். கடவுள் கருணை உங்களுக்கத்தான் தேவை இப்பொழுது .
சாந்தி ஒரு ஜோக் கழுதைகள் அறயும கற்பூர வாசனை
இல்ல இல்ல மேலே என் கருத்து யாரோ தவறா போட்டிருக்காங்க இவர் சொல்வது 100 சதவீதம் உண்மையே .
Shanti : “இவர் சொல்வது 100 சதவீதம் உண்மையே” என்று எழுதி இருக்கிறிர்கள் … இங்கே நிறை இவரும் அவரும் இருக்கிறார்கள் ! யாரிடம் கூருகிரிர்கல்? உங்களுக்கு நிறைய எதிர்பாளர்கள் இருக்கிறார்கள் என்று நினைக்கிறன் …. ஊருடன் கூடி வாழ கற்று கொள்ளுங்கள் !