தேச நிந்தனைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதை தடுத்து நிறுத்தக்கூடிய ஒரே அமைப்பு நீதித்துறை மட்டுமே என்று முன்னாள் வழக்குரைஞர் மன்ற தலைவர் அம்பிகா கூறினார்.
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்கும் மக்களுக்கும் இடையில் நிற்கும் ஒரே அமைப்பு அதுதான்”, என்றாரவர்.
தற்போது தேச நிந்தனைக்காக விசாரிக்கப்படவிருக்கும் வழக்குரைஞர் எட்மண்ட் போன் பாட்வாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல கூறிய போது அவர் தமது சட்டக் கருத்தைத்தான் அளித்தார் என்று அம்பிகா சுட்டிக் காட்டினார்.
“நான் அவரது கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் அது தவறான கருத்து என்று நினைக்கலாம், ஆனால் அது அவருடையக் கருத்து என்பதோடு அது ஒரு சட்டக் கருத்து ஆகும்”, என்று அவர் நேற்றிரவு Gerakan Hapus Akta Hasutan (GHAH) என்ற அமைப்பின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில் கூறினார்.
த மலேசியன் இன்சைடர் வெளியிட்டிருந்த அவரது கட்டுரையில் போன் தெரிவித்திருந்த கருத்துக்காக கடந்த வாரம் போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
அரசாங்க நடவடிக்கைகள் வெறுப்பு மற்றும் அவமதித்தல் ஆகியவற்றை நிகழச் செய்கின்றன என்று பெர்சே இயக்கத்தின் முன்னாள் கூட்டுத் தலைவரும், நெகாரா-கு என்ற அரசு சார்பற்ற அமைப்பின் கூட்டு நிறுவனருமான அம்பிகா கூறினார்.
“நமக்கு அவர்கள் செய்வதுதான் அவர்கள் மீது வெறுப்பையும் அவமதிப்பையும் உண்டாக்குகிறது”, என்று அம்பிகா மேலும் கூறினார்.
நீதித்துறை? என்ன நீதித்துறை இந்நாட்டில் ? எல்லாம் அவன்கள் மயம்- இவன்களை எல்லாம் நீதிபதிகள் என்று எப்படி ஏற்றுகொள்வது?
நாம் உங்களை ஆதரிக்கிறேன் என் தலைவன் நஜிப்பைவது கீஜிப்பைவது நீங்கள் தமிழச்சி நானும் தமிழச்சி உங்க்கொலொடு சேர்ந்து பட்சொந்தி போல BN MIC அழிப்போம்
அது சுதந்திரமாக இருந்தால் இங்குள்ள பல பிரச்சணைகள் இருந்திருக்காது.
அந்த காலத்தில் மகாதிர் நீதிபதிகளுக்கு வைத்த ஆப்பு இன்னும் யாரும் புடுங்கவில்லை ! குறிப்பாக துன் saleh அபாஸ் , நீதி மன்றm என்ன செய்ய முடியும் ?
நீதித்துறை என்று ஒன்று இந்நாட்டில் இருக்கிறதா ???
IGP மதிக்காத நீதித்துறையை அரசாங்கம் மதிக்கும் என்று கனவு காணாதீர்கள்.
சட்டத்தின் பின்னால் நின்று
சதிராடும் கூட்டம்.
தலை மாறி ஆடும் இன்று
அதிகார ஆட்டம்.
என்றைக்கும் மேலிடத்தில்
‘நஜீப்’ மீது நோட்டம்.
இப்போது புரியாது
எதிர்காலம் காட்டும்.
நாடக வேஷம் கூட வராது.
நாளைய உலகம் ‘அவரை’
விடாது சொல்கின்றேன்.
பலநாள் திருடன்
ஒருநாள் சிறையில்.
பாவம் செய்பவன்
தலைமுறை வரையில்
காண்கின்றேன்.