முக்தாமார். பாஸ்சின் துணை ஆன்மீக தலைவர் ஹருன் டின் பக்கத்தானில் தற்போதைய “நெருக்கடியான அரசியல் சூழ்நிலையை” கவனத்தில் கொண்டு கட்சியின் தேவான் உலாமா பக்கத்தானுடனான ஒத்துழைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்று கூறினார்.
ஜொகூரில் பாஸ் உலாமா முக்தாரை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்து உரையாற்ரிய ஹருன் டின் பக்கத்தானுடனான அரசியல் ஒத்துழைப்பு மறு பரிசீலனை செய்யப்பட்டாக வேண்டும் ஏனென்றால் சயுரா மன்றம், பாஸ் தலைவர் மற்றும் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் எதிராக நாள்தோறும் அவதூறு கூறப்படுகிறது என்றாரவர்.
உலாமாவின் ஆலோசனை அடிப்படையில் (ஒத்துழைப்பு) உருவாக்கப்பட்டது. அதற்கான பின்பற்றப்பட வேண்டிய நிபந்தனைகளும் கோட்பாடுகளும் இருக்கின்றன. இவை எல்லாம் பின்பற்றப்பட்டால், உலாமா இஸ்லாத்திற்காகவும் கட்சி உறுப்பினர்களுக்காகவும், தனிப்பட்ட ஒருவரின் முக்கியத்துவத்திற்காக அல்ல, ஒத்துழைப்பை தற்காக்கும்”, என்றார் ஹருன்.
“நிபந்தனைகள் மீறப்பட்டால், கோட்பாடுகள் நசுக்கப்பட்டால், இதனைத் தொடரலாமா என்று உலாமா மீண்டும் ஆலோசிப்பது நியாயமாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.
தங்களுடைய சக்தி பலவீனமடைவதைத் தவிர்க்கும் பொருட்டு பாஸ் தலைவர் அவர்களுக்குள்ளேயே சண்டையிட்டுக் கொள்ளக்கூடாது என்றும் அவர் கூறினார்.
வாருன்ங்கள் என் தலைவன் BN சுருட்டல் வாதிகளோடு சேர்ந்து இஸ்லாம் மானத்தை காப்பு போட்டு காப்போம்
தற்போது PAS இரண்டாக பிரிந்துள்ளது. தங்களுடைய போதனைகளுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாமல் PAS தனித்து செயல்படலாம். PAS கட்சியை விட்டு பிரிந்த PASMA இயக்கம், அரசியல் கட்சியாக தங்களை பதிந்து கொண்டு பக்காத்தானில் இணைந்து செயல்படலாம். எல்லோருக்கும் நல்லது.
சமயத்தையும் அரசியலையும் போட்டு குழப்பி கொள்ளும் இவங்களின் அரசியில் எப்போவுமே குழப்பம் நிறைந்தது!! அந்த மதத்தையே முழுக்க கொண்ட நாட்டில் வேண்டுமானால், இந்த அரசியல் முறை ஈடுபடலாம்! நம் நாடு போன்ற வற்றில் இவர்கள் மற்ற அரசியல் கட்சியுடன் கூட்டு சேர வில்லையெனில்….. இவர்கள் கதி ….. அதோ கதிதான். இப்போ கொஞ்சம் அதிகம் தலை விரித்தே ஆடுகின்றனர்!! உண்மை நிலை புரியாமல்!! வெளியேறி பார்க்கட்டும். அப்புறம் தெரியும்…..இவர்களின் …கேலிகூத்து நிலைமை….. அரசியல் சோணகிரிகள்……..
பக்கத்தானுடனான உறவு மறுபரிசீலனை செய்து காலத்தை விரயமாக்காமல், முதலில் KELANTAN மாநிலத்தில் PAS ஆட்சியை எப்படி தக்க வைத்து கொள்வது பற்றி ஆலோசனை செய்யுங்கள்.
இடைதேர்தலில் BN வெற்றி நிச்சயம் என்று BN இப்பொழுதே ஹாடி ஆசிர்வாதத்தோடு PAS தவளைகளுடன் பேரம் பேசி வருவதாகவும்,
அதில் 4 தவளைகள் சம்மதித்து விட்டதாகவும் ஒரு தகவல்.
உடனடியா வெளியேறுங்கள் டி எ பிக்கும்,பி கே ஆருக்கும் நல்லது.
என்று அறிவியல் முதன்மை ஆகிறதோ அன்றுதான் இந்த கூறு கெட்ட
மதவாதிகளுக்கு பல விசயங்களை பகுத்தறிவோடு சிந்திக்க இயலும். 21ம் நூற்றாண்டில் இவ்வளவு அறிவீனமாக செயல் படுவது எந்த ஆண்டவனால் ஏற்று கொள்ளப்படும்?
உண்மை உடுத்தும் உடையில் மட்டும் இல்லை ! பேச்சில் , செயலில், கொள்கையில் இருக்கவேண்டும் , நெஞ்சை தொட்டு சொல்லுங்கள் பி கே ஆர் உதவி இன்றி எதனை பேர் உங்களின் கட்சியின் பிரதிநிதிகள் நாடாளும் மன்றம் போயிருப்பார்கள் ? தாரளமாக பரிசீலனை செய்யுங்கள் ! அனைவருக்கும் நல்லதே !!