ஹிண்ட்ராப் தலைவர் உதயாகுமாருக்கு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வித்திக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய அவர் செய்திருந்த மேல் முறையீட்டை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
இருப்பினும், அந்த நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட 30 மாத கால சிறைதண்டனையை 24 மாதங்களுக்கு குறைத்து தீர்ப்பளித்தது.
இத்தண்டணை குறைப்பின் வழி உதயகுமார் எதிர்வரும் அக்டோபர் மாதம் 3 இல் விடுவிக்கப்படுவார் என்று அவரது வழக்குரைஞர் எம். மனோகரன் கூறினார்.
ஹின்றப்பை மக்கள் கூட்டணிக்குள் கொண்டு வர சரியான தருணம். அரசியல் காயை தக்கவாறு நகர்த்த தெரிந்தால் எதுவும் நடக்கலாம்.
நல்லது ஆனால் அவர் அம்னோ வால் பாதிக்கப்பட்டவர் , நல்லது செய்தவற்கு கிடைத்த பரிசு . நீங்கள் வருகிற நாளை எதிர்பார்கிறோம் .
தன்னலமற்ற மனிதர். இவரைப்போன்று இன்னும் பல தமிழர்கள் நம்மிடையே இருப்பாரேயானால், இந்நாட்டில், அரசியல் ரீதியில் சற்று செழிப்புடன் வாழ வழிகள் உண்டாகும். வாழ்க இவரது தியாகங்கள்.
நண்பர் Theni கூறுவதைப்போல் மக்கள் கூட்டணியில் சேருவதே இப்போதைக்கு நல்ல யோசனை. ஆனாலும் கவனம். அங்கேயும் ‘முதலைகள்’ பெருத்துவிட்டன’.
முதலில் அவர் உடம்பு தேறட்டும்…. மனம் ரொம்ப புண் பட்டிருக்கும் .. அவர் நன்றகா தேறினபிறகு வரட்டும் . வாழ்க உதயா ……….
அக்டோபர் மாதத்திற்கும் தன்னலமற்றவர்களுக்கும் ஏதோ ஓர் தொடர்பு உண்டு போலும். அக்டோபர் 2ல் மகாத்மா காந்தி பிறந்த தினம். அக்டோபர் 3ல் உதயா விடுதலை தினம். அக்டோபர் 4ல், தன் கட்சிக்கும் மக்களுக்கும் தொண்டு புரிய நாட்டையே மோட்டாரில் வளம் வந்துகொண்டிருக்கும் கேமரன் மலை சிம்மாதிரி அவர்களின் பிறந்த தினம்.
மக்கள் உங்களை வரவேற்கிறார்கள் வருக வருக வருக…
செஞ்சோற்று கடன் தீர
சேராத இடம் சேர்ந்து
வஞ்சத்தில் வீழ்ந்தாயடா-‘உதயா’
வஞ்சகன் ‘தநேந்திரனடா
உதயா-வஞ்சகன் தநேந்திரனடா.
தாய்க்கு நீ மகனில்லை
தம்பிக்கு அண்ணனில்லை
ஊர் பழி கொண்டாயடா-உதயா
அண்ணனும் உன் பழி கொண்டானடா.
உள்ளத்தின் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா -உதயா
வருவதை எதிர்கொள்ளடா.
உண்மையான தமிழன் தமிழனுகாக தேனீ கருத்தை நான் ஆதறிகுரேன்
மு.ப.கரிகாலன், அருமையான, உதயாவுக்கு நேர்த்தியான கவிதை[பாடல்].
நீர் என்னிடம் இருப்பததைத்தானே கேட்டாய், என் உயிரையே இந்நாட்டு இந்தியர்களுக்கு தாரை வார்த்துக் கொடுக்கின்றேன் என்று தைரியமாக சொல்லி விட்டு சிறைக்குச் சென்ற உதயசூரியன் எங்கே, மாக்கள் சக்தி கொண்டு மானங்கெட்ட பிழைப்பு நடத்தும் தனமில்லா இந்திரன் எங்கே.
ஆமாம் இப்போது விட்டாதானே வரும் பொது தேர்தலுக்கு BN சார்பில் பாடுபடமுடியும் !
ஒரு புதிய சகாப்த்தம் உருவாகட்டும் ……..எல்லாம் நன்மைகே …
அவர் நமக்காக பட்ட, படும், படப்போகும் சிரமங்களுக்கு சமூகத்தின் கைம்மாறு என்ன? நன்றியுள்ள சமூகமே நல்லோர் போற்றும் சமூகம். இயற்கை இவருக்கு இனிமேலாவது துன்பமற்ற வாழ்வினை அருளுமாக.
உதய தொடக்ககால கெஅடிலான் உறுப்பினர்தான்.மன கசப்பின் காரணமாக விலகிவிட்டார். அரசியலில் பணம் சம்பாதிக்க ஆசைபடாத சில மனிதர்களில் இவரும் ஒருவர்!!!
பெரியார் பிறந்த நாளில் ஒரு இனிப்பான செய்தி, மகிழ்ச்சி. பெரியாரைப் போன்று போராட்ட குணம் படைத்தவர் உதயா, விரைவில் விடுதலை பெறுகிறார் இந்த சமூகக் காவலன், வாழ்க பல்லாண்டு. இந்த நாட்டில் இந்தியனை (குறிப்பாக தென்னிந்தியனை) சிந்திக்க வைத்த ‘அதிரடி சாக்ரடீஸ்’ அவர்!! அரசே ஆட்டம் கண்டது அவர் ஊட்டிய எழுச்சியால்!! ஆனால் இந்தியர்கள் பலர் அவரை மறந்து விட்டனர்; பணத்திற்காக, பட்டத்திற்காக, பதவிக்காக பலர் துரோகிகளாயினர். கவலையில்லை அவர்கள் கவிழ்ந்துப் போகும் காலம் வெகு தூரத்தில் இல்லை ..
மலேசியா இந்தியருக்கு நீங்கள் என்றும் உதைய சூரியன் …!
ஐயா மு. தா, நீலவாணன் அவர்களே ! டீலா நோ டீலா என்று அடம் பிடித்தவர்தானே இந்த உதயா ! அன்வாரிடம் எது கிடைக்காதோ அதை எழுத்து பூர்வமாக எழுதி கொடு என்று அடம் பிடித்து, அப்படி எழுத்து பூர்வமாக எழுதி கொடுக்க அவர் என்ன பிரதமரா ? அது ஒன்றே போதும் BN அரசு அன்வாரை கிழி கிழி என்று கிழித்துவிடும். மலேசிய இந்தியருக்கு வாய்ப்பாக அமையவேண்டிய 13 பொது தேர்தலில் கோட்டை விட்டோம். அவரின் தம்பி பிரிக்பீல் வட்டாரத்தில் நஜிப்வுடன் செல்லாத கையொப்பம் செய்து ,அப்போது ஏக்டிங் பிரதமர் (நாடாளமன்றம் கலைக்கபட்டு விட்டது ) கையெழுத்து ஒப்பந்தம் செய்து , கடைசியில் அவரே நஜிப் அரசாங்கம் இந்தியரை ஏமாற்றி விட்டது என்று சொல்லி வெளியேறினார் ! இந்த அண்ணன் தம்பிகளுக்கு இறைவன் நல்ல புத்தியை கொடுக்க சொல்லி பிராத்திப்போம் !
அமனோ/பரிசான் நேசனல் போடும் பிச்சைக்காக அவர்களின் காலணியை துடைத்து வால் பிடித்துக் கொண்டிருக்கும் சில இந்தியர்களின் கட்சிகள் இருக்கும் வரை நாம் கெளரவமாக வாழ வழியில்லை. நாம் இனாமாக அளிக்கும் வாக்குச் சீட்டு மட்டுமே தே. முன்னணிக்கு வேண்டும். இனி வரும் தேர்தல்களில் நம் வாக்கு சீட்டுக்கு ஒரு “மதிப்பு” கொடுத்தால் மட்டுமே நாம் வாக்களிக்க வேண்டும்.
திரு உதயா அவர்கள் கொலையா செய்தார் ,என்னாமா கூத்து அடிக்கிறார்கள் இந்த அரசாங்கம் ,மலாய்காரர்கள் சொபெரிகள் என்று சொன்னாரே மகாதிரு ,அவர் பிடித்து உள்ளே போடவேண்டியதுதானே ?ம்ம்ம்
ஹிந்ட்ரப் பை வழி நடத்த சரியான ஆள் இவர்தான் ! ஆனால் இவர் தியாகத்தை எத்தனை தமிழர்கள் இன்னமும் நினைத்து கொண்டிருக்கிறார்கள் ? தன் சொந்த தம்பியே இவருக்கு துரோகம் இலைதவராயிற்றெ !!! கவலையை விடுங்கள் உதய சார் ! கடவுள் உங்கள் பக்கம் தான் ! மனித குலத்துக்கு நல்லது நினைக்கும் ஒவ்வொருவனுக்கும் கடவுள் சேவகன் ! அறம் தழைக்க மனிதன் கருமம் செய்ய கடமை பட்டவன் என்பதக்கு நீங்களே உதாரணம் !
நீங்கள் ஒவ்வொரு தமிழனுக்கும் வழிகாட்டி .வாழ்க வளர்க .
அதர்மம் தலை விரித்தாடும் இத்தறனத்தில் நீதி தேவதையாக புறப்பட்டு வர வேண்டும் சிலசுயநல வாதிகள் போல்கவிழந்து விடாமல் நியாயம் தலைதோங்கபாடுப் பட்டிர்களானால் மக்கள் மனதில் சரித்திரம் படைப்பீர் வாழ்க !வாழ்வங்க வாழ்க !!!
அவருக்கு நம்மால் ஆனா உதிவியை செய்ய வேண்டுகோள்
தல! நீங்கள் விடுதலை ஆவதில் மகிழ்ச்சி. சொன்னா கொவிச்சிக்காதீங்க! உங்க குடும்பத்தைப் பாருங்க! உங்களைப் பாருங்க! நீங்களே பல வியாதிகளால் கஷ்டப்படுறீங்க! தமிழனின் தலை எழுத்தை மாற்ற ஏகப்பட்ட என்.ஜி.ஓ.க்கள் வுந்துட்டாங்க! நீங்க நல்ல ஓய்வெடுங்க! ஏதாவது நல்லது செய்யனும்னா ஓசைப்படமால் செய்யுங்க! வாழ்த்துகள்!
செம்பருத்தி ஆசிரியருக்கு ஒரு வேண்டுகோள் ! இந்த பகுதியை , புதிதாக மீண்டும் பிரசுரியுங்கள் ! தயவு செய்து !