இஸ்லாத்தைப் பாதுகாக்கும் நோக்கில்தான் பைபிளைத் தீயிட்டுக் கொளுத்தப்போவதாக மிரட்டினார் என பெர்காசா தலைவர் இப்ராகிமை அதிகாரிகள் தற்காத்திருப்பதை எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் சாடினார்.
“இது அம்னோவின் நிலைப்பாடு அல்லது அமைச்சரின் நிலைப்பாடு. (இஸ்லாம்) அதை (பைபிள் கொளுத்தப்படுவதை) என்றும் ஆதரித்ததில்லை.
“நான் அறிந்தவரை இஸ்லாம் சமய நம்பிக்கைகளை, சமய நூல்களை மதிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறது”, என அன்வார் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இப்ராகிமுக்கு சமய இணக்கத்தைக் கெடுக்கும் நோக்கமில்லை, இஸ்லாத்தைப் பாதுகாக்கும் நோக்கில்தான் அப்படிச் சொன்னார் என்பதால் அவர்மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்று பிரதமர்துறை அமைச்சர் நன்சி ஷுக்ரி எழுத்து வடிவில் தெரிவித்த பதில் குறித்து கருத்துரைத்த அன்வார் இவ்வாறு கூறினார்.
அமைச்சர் மடத்தனமான அறிக்கையை வெளியிடுவதைவிட வாயை மூடிக்கொள்வதே சிறப்பு. தகுதியற்ற அமைச்சரின் அறிவிலித்தனம் வெட்ட வெளிச்சமாகிவிடும். இப்ராஹிம் அலியின் அறிக்கையை போலவே இஸ்லாமிய கொர்ரானுக்கு எதிராக பிற சமயத்தின் பாதுகாப்பின் பெயரில் அறிக்கை விட்டிருந்தால் புத்ரா ஜெயா ஏற்றுக்கொள்ளுமா??? மண்ணாங்கட்டி அமைச்சர்!!!!!
ஒரு அமைச்சரே தெளிவு இல்லாமல் பேசினால் அப்புறம் அந்த தவளைக்கு இன்னும் கொழுப்பு வச்சுப் போயிடுமே?. அமைச்சர் என்போரெல்லாம் இப்பொழுது தன் சொந்த அறிவில் பேசுவதாக தெரியவில்லை!. யாரோ ஒரு அரசாங்க அதிகாரி எழுதி கொடுத்த காகிதத்தை அப்படியே நாடாளுமன்றத்தில் சமர்பிப்பதாக தெரிகின்றது. சும்மா வெட்டி வேலை செய்யும் இவர்களுக்கு எதுக்கடா சம்பள உயர்வு?.
இந்த அமைச்சர் மீது மக்கள் கடும் கண்டனங்கள் தெரிவிக்க வேண்டும்.
இஸ்லாம் இப்படிப் பாதுகாப்பற்ற நிலைக்குப் போனதற்கு யார் காரணம்? பாதுகாப்பு இல்லை என்பதால் தானே இப்ராஹிம் அப்படிப் பேசினார். அதற்காவது விளக்கம் கொடுங்களேன்!
பைபிளைக் தாராளமாக கொளுத்துங்கள் மேலும் MH370 காணாமல் போக வாய்புகள் பிரகாசமாக உள்ளது
முடிந்தால் இறைவனுக்கே பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று சொல்வார்கள். படைத்தவரே தான் படைத்தவைகளை பாதுகாத்து வழிநடத்துகிறார். அவருக்கு இவன் பாதுகாப்பு அளிக்கிறானாம். வயிறு குலுங்க சிரிக்கலாம், முடியவில்லை காரணம் இது இறைவனை பொறுத்த விஷயம். இறைவனே எல்லாவற்றிற்கும்
நீதிபதியாக இருக்க, படைப்பாகிய மனிதன் எப்படி படைத்தவரின் நிலைக்கு உயர்ந்து அந்த நீதியாசனத்தில் அமர்ந்து அந்த பரம்பொருளையே தீர்ப்பிட நினைக்க முடியும்? சிந்திப்போம். இறைவனை இறைவனாகவே வழிபடுவோம். அவருக்கு நமது பாதுகாப்பு தேவையில்லை. எத்தனை பைபிள்களையோ, குர் ஆணையையோ, பகவத் கீதையையோ மற்ற எந்த சமய நூல்களையோ எரித்தாலும் இறைவனை மறைக்க முடியுமா? அவர் படைத்த சூரியனையையே நாம் மறைக்க முடியவில்லை. எல்லா சமய நூல்களும் எழுத்து வடிவம் காணும்முன் ஒலி வடிவத்திலேயே தான் வழக்கில் இருந்து வந்தது . ஆகவே இவர்கள் இப்பொழுது பைபிளை எந்த அளவுக்கு அடக்க முயற்சி எடுத்தாலும் அந்த அளவுக்கு அது மேலும் பிரபல்யமாகும். தமிழில் ஒரு முதுமொழி உண்டு ‘கண்டதையும் கற்பவன் பண்டிதன் ஆவான்’ அதற்கொப்ப நாம் எல்லாவற்றையும் படித்து நன்மையானவைகளையும் மேன்மையானவைகளையும் கைக்கொண்டு நலமாகவும் வளமாகவும் வாழ்வோம் மற்றவர்களும் வாழ வழிகாட்டுவோம். இறைவனும் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.