மேல்முறையீட்டு நீதிமன்றம், ஸுனாரின் இரண்டு நூல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை ஏகமனதாக அகற்றியது.
பறிமுதல் செய்யப்பட்ட ‘1 Funny Malaysia’ ‘Perak Darul Kartun’ ஆகிய இரண்டு நூல்களையும் அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு நீதிபதி முகம்மட் அரிப் முகம்மட் யூசுப் உத்தரவிட்டார்..
அவரது முடிவை நீதிபதி தெங்கு மய்முன் துவான் மாட், நீதிபதி வர்கீஸ் ஜார்ஜ் வர்கீஸ் ஆகிய மற்ற இருவரும் ஏற்றனர்.
‘1 Funny Malaysia’, ‘Perak Darul Kartun’ ஆகிய இரண்டுமே பல மாதங்கள் விற்பனையில் இருந்து நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த வேளையில் அவை பொது ஒழுங்கைக் கெடுப்பதாகக் கூறி அவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டது என்று அவ்விரு நீதிபதிகளும் கூறினர். ஆனால், தடை செய்யப்பட்டதற்கான காரணத்தை நிரூபிக்க ஆதாரங்கள் எதுவும் காண்பிக்கப்படவில்லை என்றவர்கள் கூறினர்.