குண்டு வெடிப்புக்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்படுவர்: நஜிப் சூளுரை

najபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக், இன்று  அதிகாலை  புக்கிட்  பிந்தாங்கில்  நிகழ்ந்த  குண்டுவெடிப்புச்  சம்பவத்தைக்  கண்டித்துள்ளார். அச்சம்பவத்தில்  ஒருவர்  கொல்லப்பட்டு  13 பேர்  காயமடைந்தனர்.

“இன்று  காலை  நிகழ்ந்த  வன்செயலைக்  கடுமையாகக்  கண்டிக்கிறேன்.

“இப்படிப்பட்ட  சட்டவிரோதச்  செயல்களைப்  பொறுப்பதற்கில்லை.

“இதற்குக்  காரணமானவர்கள்  கண்டுபிடிக்கப்பட்டு  தண்டிக்கப்படுவர்”, என்றாரவர்.

குண்டர்  கும்பல்களின்  சண்டைதான்  சன்  கொம்ப்ளெக்சில்  நிகழ்ந்த குண்டு வெடிப்புக்குக்  காரணம்  என  போலீசார்  நம்புவதாக  தெரிகிறது.