‘மிதவாதம் பேசும் புத்ரா ஜெயா, அதைச் செயல்முறையிலும் காண்பிக்க வேண்டும் என்று கூறும் இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி (ஐஆர்எப்), இஸ்லாமிய அடிப்படைவாதம் மீதான வட்டமேசை பேச்சுக்கு அது ஆதரவு கொடுக்க வேண்டும் என விரும்புகிறது.
அப்பேச்சுகளில் பிரபலமான முற்போக்கு முஸ்லிம் தலைவர் ஒருவர் கலந்து கொள்வதால் அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என புத்ரா ஜெயாவுக்கு நெருக்குதல் வலுத்து வருகிறது.
“உலக அளவில் மிதவாதத் தலைவராக தன்னைக் காண்பித்துக் கொள்ளும் ஓர் அரசாங்கம் மிதவாத இயக்கத்துக்கு எதிராக செயல்படுவது எப்படி நியாயமாகும்.
“மிதவாதத்துக்குப் போராடும் முன்னணி சக்தியாக விளங்க விரும்பினால் இப்படிப்பட்ட பேச்சுகளைத் தடுக்காமல் ஆதரவு கொடுக்க வேண்டும்”, என ஐஆர்எப் தலைவர் பாருக் மூசா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
‘இந்நாட்டில் சமய அடிப்படைவாத வாதத்தின் மிரட்டல்’ என்ற தலைப்பில் நடைபெறும் பேச்சைத் தடுக்க வேண்டும் என்று மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை கேட்டுக்கொண்டிருப்பது குறித்து பாரூக் மூசா இவ்வாறு எதிர்வினை ஆற்றினார்.
நண்பா இவன்கள் வாயில்தான் மிதவாதம் என்பான்கள், ஆனால் இவங்களே தீவிரவாதிகளி விட கொடுமையானவன்கள். இதுதான் உண்மை.