கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் (டிபிகேஎல்) அதன் நிலங்களைச் சில தரப்பினருக்கு இரகசிமாக விற்பனை செய்திருப்பதாக செராஸ் எம்பி டான் கொக் வாய் கூறினார்.
“திறந்த டெண்டர்கள் அழைக்கப்படும் என விளம்பரப்படுத்தப்பட்ட சில திட்டங்கள் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் சில தரப்புகளுக்குக் கமுக்கமாக விற்கப்பட்டுள்ளன.
“நேரடிப் பேரம்பேசி எல்லாம் முடித்துக்கொள்ளப்பட்டுள்ளன”. இன்று டிபிகேஎல் பட்ஜெட் விளக்கமளிப்பில் கலந்துகொண்ட டான் அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
டிபிகேஎல்-இன் புதிய தலைமையகம் கட்டுவதற்காக ஒதுக்கப்பட்டிருந்த பகுதி உள்பட பல நிலப் பகுதிகளை டிபிகேஎல் விற்பனை செய்திருப்பதாக டான் தெரிவித்தார்.
“டிபிகேஎல் ஏழையாகி விட்டதா அல்லது பணம் இல்லையா? அல்லது நில விற்பனைவழி சிலர் கொள்ளை இலாபம் அடைகிறார்களா?”, என்றவர் வினவினார்.
அக்டோபர் 27-இல் நாடாளுமன்றத்தில் அது பற்றி கேள்வி எழுப்பப்போவதாக டான் கூறினார்.
இதில் எல்லாம் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை.என்ன கேட்க நாதி இல்லை –யார் கேட்டாலும் ஒன்றும் ஆகப்போவது ஒன்றுமில்லை– அம்னோ ஈன ஜென்மங்கள் சுரண்டி சுரண்டி திற்று வயிர்வளர்க்கும்
ஐயா நீங்க ரொம்ப லேட் , சிங்கப்பூரில் உள்ள மலேசியாவிற்கு சொந்தமான நிலம் , ஒரு தீவு , ஜோகூரில் ராணுவத்திற்கு சொந்தமான நிலம் , டாங்க பே பாதி என்று போய்கொண்டே இருக்கு. கணக்கில் வராத சொத்துக்கள் . இதில் கொடுமை என்னவென்றால் பயிரை காக்க வேண்டிய வேலியே அதை விற்று குத்தடிகிறது. யாராலும் தட்டி கேட்க முடியாத இடம் , தெரிந்தும் மௌனமாக இருக்கு ஒரு கூட்டம் . அதனோடு ஒப்பிட்டால் நீங்கள் சொல்லும் நிலங்களும் பில்லியங்களும் குறைவாக தான் இருக்கும் .
டெலிகொம் , பொம்பா, TNB ,போலிஸ் நிலங்கள் எல்லாம் கணக்கில் வரவில்லையே MP அவர்களே !
உங்கள் ஊழல்களை வெளிபடுத்த வேண்டிய பத்திரிக்கைகள்
என்ன செய்துகொண்டு இருக்கின்றன ,பத்திரிகையை நடத்தும்
ஒரு ஏமாற்று பெர்விளி எப்படி மற்றவர்களின் ஊழலை தட்டி
கேட்க முடியும் , உதாரனதிற்கு இன்று தினக்குரலில் வந்த
தலையங்க செய்தியை பாருங்கள் ” உழைப்பவர்களின் வயிற்றில் அடிக்கலாமா ? என்று நியத்தை கேட்டும்
தினக்குரல் பத்திரிக்கை முதலில் உங்கள் முதுகை பாருங்கள் உங்கள் பத்திரிகையின் நிருபர்களுக்கு கடந்த
வருடம் 8,9,10,11,12 ஆகிய 5 மதங்களுக்கு சம்பளங்களை
படாமலும் இது வரை இ.பி.எப் .சந்தா தொகையை கட்டாமலும் 30க்கும் மேற்பட்ட நிருபர்களின் வயிற்றில்
அடித்து விட்டு ஆடு நனைகிறதே என்ற ஓநாய் கண்ணீர்
விட்ட கதையாக இருக்கும் போது எப்படி இருக்கு இந்த தலைப்பு செய்தி.
டி.பி.கே. எல் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப போகும் டான் ,தினக்குரல் பத்திரிகையின் நிருபர்களை ஏமாற்றி கொள்ளை லாபத்தை அடிக்கும் அயோக்கியர்களை பற்றி நாடாளுமன்றத்தில் உம்மால் பேச முடியுமா நைனா.
DBKL நிலங்கள் மட்டும்தான் கமுக்கமாக விற்கப்பட்டனவா ? அல்லது KL-யே கமுக்கமாக விற்று விட்டார்களா ?
அயல் நாட்டினர் “HARI RAYA HAJI” அன்று சாலையில் போக்குவரத்துக்கு மூட பட்டு, சாலையிலேயே தொழுகை புரிந்தது என்னவோ KL-லை வாங்கி விட்டார்களோ என்று சந்தேகம் வருகிறது.