தமக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள குதப்புணர்ச்சி வழக்கில் தாம் சிறையில் அடைக்கப்படும் சாத்தியம் இருந்த போதிலும், தாம் நாட்டை விட்டு வெளியேறப் போவதில்லை என்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.
அன்வார் தற்போது பிரிட்டனில் இருக்கிறார். முஸ்லிம் உலகில் உயர்கல்வி சீர்திருத்தம் குறித்த ஒரு பணிப்படை கூட்டத்தில் பங்கேற்பதற்கு அவர் அங்கு சென்றுள்ளார்.
“பெரும்பாலான முஸ்லிம் அறிஞர்கள் இங்கேயே (யுகேயில்) தங்கிவிடுமாறு வலியுறுத்துகின்றனர். நாம் முடியாது என்று கூறினேன். இது கொள்கை அடிப்படையிலானது. ஓர் ஊழல் மற்றும் தெளிவற்ற அமைவுமுறையை எதிர்க்கையில் எவ்வளவு துயரங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை நான் அறிவேன்”, என்று ஒரு நேர்காணலில் அவர் கூறியதாக யுகேயின் டெலிகிராப் கூறுகிறது.
மார்ச் 7 இல், அவருக்கு எதிரான குதப்புணர்ச்சி வழக்கில் குற்றவாளி எனத் தீர்மானிக்கப்பட்டு அவருக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை வித்திக்கப்பட்டது அவர் மேல்முறையீடு செய்துள்ளதால், அவர் சிறையில் அடைக்கப்படவில்லை.
அவரது மேல்முறையீடு அக்டோபர் 28 இல் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
டாத்தோ சிறி உங்கள் மீது மக்கள் பணத்தை சுருட்டினார் என்ற குற்றம் குறை ஏதும் சொல்லபடவில்லை. இதை மக்கள் அறிவார்கள். வழக்கின் முடிவு எப்படி வேண்டுமானாலும் .இருக்கலாம். ஆனாலும் உங்களை மக்கள் விரும்புகிறார்கள்!
நீங்கள் தான் எங்களுக்கு சிவாஜி the boss ,இதய தெய்வம் mgr rajini அடுத்து நீங்கள் தான் எந்த மதத்தை சாராத மனித தெய்வம்
அன்வாரின் துணிவு , எமது தமிழ் இன தலைவன் மேதகுரு பிரபாகரன் போல் உள்ளது ! வந்தால் மலை போனால் மயிரு ! புலிகள் உறங்கும் நேரத்தில் , குள்ள நரிகள் துள்ளி நடமாடுவது இயற்கையே ! விடியல் வெகு காலம் இல்லை அன்வார் அவர்களே !
இவருக்கு ஏன் நாட்டை விட்டு வெளியேறும் திட்டம் .?! எந்தத் திட்டமும் தீட்டாமலேயே அடிக்கடி வெளி நாடுகள் சென்று வருகிறாரே!! நேரம் போதாத நேரத்தில் வீணே திட்டம் தீட்டுவதற்கு வேறு வீணே நேரம் ஏன் செலவிடவேண்டும்?
எப்படியெல்லாம் பில்டாப் கொடுக்கிறாங்க. …… தாங்காதுடா சாமி …வாழ்க ஜனநாயகம் ….