இப்ராகிம் அலி பைபிளைக் கொளுத்தப்போவதாக மிரட்டல் விடுத்ததைத் தேச நிந்தனை குற்றம்தான் என்று விடாமல் கூறிக்கொண்டிருக்கும் அம்னோ இளைஞர் தலைவர் இஸ்லாத்துக்குக் கடப்பாடு கொண்டர்தானா என பெர்காசா வினவுகிறது.
“அம்னோ இளைஞர் தலைவர் எந்தச் சமயத்துக்காகப் போராடுகிறார்?”, என பெர்காசா இளைஞர் தலைவர் இர்வான் பாஹ்மி இட்ரிஸ் ஓர் அறிக்கையில் கேள்வி எழுப்பினார்.
அம்னோவில் உண்மையான அரசியல்வாதி மாண்புமிகு கைரி ஒருவர்தானோ..? தவள வாயனுக்கு சரியான சாட்டையடி கொடுத்தற்கு ஒரு சபாஸ்..!
எந்த மதமாக இருந்தாலும் சரி மற்ற மதத்தை மதித்து நடக்கணும் அவனே ஒரு நல்ல தலைவன் அப்படி பார்த்தல் திரு kairhi ஒரு நல்ல சமய பற்றலர்
சோழியன் குடுமி சும்மா ஆடாதப்பா! தன்னை மிதவாத அரசியல்வாதி என்று காட்டிக் கொண்டு அம்னோவின் உதவித் தலைவர் பதவிக்கு குறி வைக்கின்றார் கைரி.
மீன் புத்தியை மாற்றவா முடியும்,நாராயண நாராயண.
இவர் படித்தவர் தவறு என்று தெரிந்த உடன் தவறு என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார் இந்நாள் வரை இவர் தலைவர்.மற்றவர்கள் மதத்தை மதிக்க தெரியாதவர் அவர் அதான் உலருகொண்டிருகிறார்.
நல்லதைச் சொன்னீர் மலேசியரே.