மலேசிய விமான நிறுவனமான எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியவர்களை நீதிமுன் நிறுத்தாமல் விடப்போவதில்லை என்பதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் உறுதியாக இருக்கிறார். ஆனால், உக்ரேனில் தொடர்ந்து சண்டை நடப்பதால் விமானம் விழுந்த இடத்துக்குச் செல்வது தடைப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.
காணாமல்போன எம்எச் 370 பற்றியும் அடுத்த சில மாதங்களில் தகவல்கள் கிடைக்கக்கூடும் என்றவர் எதிர்பார்க்கிறார்.
டூபாயில், ராய்ட்டர்ஸுக்கு வழங்கிய நேர்காணலில் நஜிப் இவ்வாறு தெரிவித்தார்.
“அது (எம்எச்17 புலனாய்வு) அதற்குப் பொறுப்பானர்கள் நீதிமுன் நிறுத்தப்படும்வரை தொடரும்”, என்றாரவர்.
MH370 காணமல் போனதற்கு, கழுவு மீனில் நழுவுற மீனாக போகின்றவர் MH 17-க்கு மட்டும் இவ்வளவு கரிசனை ஏனோ?. எங்கோ இடிக்கின்றதே?. ‘Something is wrong somewhere’.
மலேசிய பிரதமர், விமானம் விழுந்த இடத்துக்குச் செல்வது தடை செய்யப்பட்டிருக்கும் தைரியத்தில் உளறுகிறார்.
ஓகே .
சுட்டது நாங்கள் தான் என்று ரஷியா ஒப்புகொண்டால்,அவர்கள்
மேல் பிரதமர் நடவடிக்கை எடுக்க முடியுமா ?
ஹி ஹி ஹி வடிவேல் இல்லாத குறையை நீக்கியுள்ளார் ……..ஐரோப்பிய நாடுகளே இந்த விடயத்தில் தள்ளாடுகின்றன ..
மலேசிய விமான நிறுவனமான எம்எச்370-ஐ காணாமல் போனதற்கு , அதற்கு சம்பந்த பட்ட தரப்பினரை … நீதிமுன் நிறுத்தாமல் விடப்போவதில்லை ….. இது நல்ல இருக்கும் !