பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி “பைபிள்களை எரிக்கச் சொன்னது” தேச நிந்தனைக் குற்றம் அல்ல என்கிறார் டாக்டர் மகாதிர் முகம்மட்.
“முஸ்லிம்களும் முஸ்லிம்-அல்லாதாருக்குமிடையில் சண்டை மூட்டுவது அவரின் நோக்கமல்ல”, என்று முன்னாள் பிரதமர் செய்தியாளர்களிடம் கூறினார்.
திருக்குர்ஆன் நூல்கள்கூட மிகவும் பழையதாக விட்டால் எரிப்பது உண்டு என்று கூறிய மகாதிர், தீய நோக்கம் இல்லாதவரை அப்படிச் செய்வது தப்பல்ல என்றார். அதைப் போன்றதுதான் இதுவும்.
ஆனாலும், முஸ்லிம்கள் பைபிளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும், பிடிக்கவில்லை என்பதற்காக அதைத் தரையில் போட்டு மிதித்து அவமதிக்கக் கூடாது என்றாரவர். .
ஒரு முன்னால் பிரதமர் கூரும் கருத்து கேட்டால் வயிற்றில் வளரும் குழந்தை கூட சிரிக்கும்.
இந்நாட்டின் அழிவுப்பாதைக்கு வழி வகுத்தவனே இவன் தானே-பிறகு எப்படி பேசுவான்? இவன்களையும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களையும் ஒப்பிட்டு பாருங்கள் உண்மை புரியும்-யார் தலைவர்கள் என்று. கீழ்தர ஜென்மங்கள்.
இப்ராகிம் சொல்வது எல்லாம் சரி ஏன் என்றால் அந்த தவளைவாயன் BN க்கு ஜால்ரா. இவனை கண்டு BN அரசுக்கு பயம்.
யா அல்லாஹ் இவர்களுக்கு நல்ல புத்தியை குடுப்பாயாக …….ஆமின்
ஒரு குட்டையில் ஊறிய மட்டைகள்.
திருக் குர் ஆன் பழையதாகி விட்டால் எரிப்பது உண்டு, என்கிறார் மகாதி[மி]ர். பழயதாகிவிட்டால் எரித்துவிடவேண்டும் என்கிறார் இவர். அப்பாடியானால்…
பைபிளை எரித்தால் கிறித்தவர்களின் இறை நம்பிக்கையை எரித்து விட முடியுமா? இறைவனையே நம்பாத நாத்திகனுக்கு இறைவனை பற்றி தெளிவுபடுத்த முயல்வது வீண். அதுபோல கிறித்துவத்தை அறியாத தெரியாத இப்ராகிம் அலி போன்றவர்களுக்கு பைபிள் ஒரு சாதாரண புத்தகம் தானே. அவனுக்கு வேண்டாததை அப்புரபடுத்ததானே செய்வான். அதைப்பற்றி நாம் ஏன் கவலையோ கோபமோ பட வேண்டும்? தத்தம் சொந்த சமய போதனையை சரிவர தெரியாமலும் புரியாமலும் எவ்வளவோ நபர்கள் உள்ளனரே. எத்தனை கிறித்தவர்கள் பைபிளையோ, முஸ்லீம்கள் குர் ஆணையோ அல்லது மற்ற சமயத்தவர்கள் அவர்தம் சமய நூல்களையோ முழுமையாக படித்து, அவைகளில் கூறப்பட்டுள்ளது போல் வாழ்கின்றனர். அப்படி அணைத்து சமயத்தினரும் தத்தம் சமய போதனைகளை முழுக்க முழுக்க கற்று அதன்படி நடந்தால், உலகில் ஏழைகளையும் அமைதியின்மையையும் கதைகளிலும் கட்டுரைகளிலும்தான் காண முடியும். மனிதன் நல்வழி நடப்பதற்கே சமய நூல்கள் நன்னெறி கூறுகின்றன. ஆனால் மனிதனோ அதையும் தனது சுயநலத்துக்காக பயன்படுத்த தொடங்கியதால் வந்த சீரழிவைத்தான் நாம் இப்பொழுது அனுபவிக்கிறோம். ‘யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்’ என்ற கூற்றுக்கிணங்க நமது சமய நல் போதனைகளை மற்ற சமயத்தவரோடு பகிர்ந்து கொள்வதில் தப்பு இல்லை, ஆனால் அதனையே வலுக்கட்டாயமாக மற்றவரில் திணிப்பதை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். ‘கண்டதையும் கற்பவன் பண்டிதனாவான்’ ஆக நமது சமய அறிவோடு மற்ற சமய நம்பிக்கையும் தெரிந்துகொள்வது மிகவும் பயனளிக்கும். அந்த சமயத்தில் உள்ள நட்போதனைகளையும் நாம் போற்றவேண்டும். ‘மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்’ அல்லவா? நமது தேடலை குறுகிய வட்டத்திற்குள் அடக்காமல் பறந்து விரிந்து கிடக்கும் அகிலத்திலும் தேடுவோம். துன் மகாதீர் கூட பைபிளை எவரும் மிதிக்க கூடாது என்றல்லவா கூறுகிறார். இறைவன் நம்மை ஆசீர்வதித்து நல்வழி நடத்துவாராக.
நல்ல வேலை இப்பொழுது அந்த இன வாதி பிரதமராக இல்லை.இருந்திருந்தால் அந்த காட்டுப் பன்றியோடு சேர்ந்து இருவரும் பைப்பிளை எரித்திருப்பார்கள்.ஒரு மதத்துக்கு சொந்தமான புனித நூலை எரிப்பேன் என்று சொல்வது இவர்களுக்கு ஒரு சாதாரண விஷயம்.சிறு குழந்தை கூட சொல்லும் அது தப்பு என்று.இந்த காட்டு ஜென்மங்களுக்கு அது புரியவில்லையே! உலகில் இப்படியும் ஒரு ஜென்மமா? தூ……!
அநியாயம் செய்பவன் என்னும் அநியாயம் செய்யட்டும்…குருடருக்கு வழிகாட்டுகிற குருடர்கள் …இவர்களின் முடிவோ நரகம் -பைபளில் உள்ளது.
வாள் வழி வந்த மதம் பிறகு என்ன சொல்லும்?
குளத்தை குழப்பி விட்டு அதில் மீன் பிடித்து பழக்கப்பட்டவர் இந்த மகா தீரர். தான் இன்னும் உயிரோடு இருப்பதாக மறைமுகமாக மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறார்.அவ்வளவுதான்.மேலும் மக்களை குழப்பி,பிரித்து அரசியல் நடத்தும் அரசியல்வாதிகளை மலேசியாவில் தான் காண முடியும். அதற்கு வழிகாட்டி இந்த மகா தீரர்.
அவர்கள் வசதிக்கேற்ப அவர்கள் பேசியதை எல்லாம் நியயப்படுதுவர்கள் ! மற்றவர்கள் பேசினால் குற்றம் !நெற்றி கண் திறப்பினும் குற்றம் குற்றமே !!!