கூட்டரசு நீதிமன்ற முன்னாள் நீதிபதி கோபால் ஸ்ரீராம், அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞராக நீதிமன்றத்தில் வாதாடுவது குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அது வழக்குரைஞர் மன்றத்தின் தீர்மானத்தை மீறுவதாகும் என்றவர்கள் தெரிவித்தனர்.
கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங், வழக்குரைஞர் மன்றம் இவ்வாண்டு மார்ச் 15-இல், பணிஓய்வு பெற்ற நீதிபதிகள் வழக்குரைஞர்களாக நீதிமன்றத்தில் முன்னிலை ஆவதற்குத் தடைவிதிக்கும் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றி இருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“முன்னாள் கூட்டரசு நீதிபதி ஒருவர் அன்வார் இப்ராகிமின் வழக்குரைஞராக வாதாட விதிவிலக்கு எதுவும் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை மலேசிய வழக்குரைஞர் மன்றம் விளக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
டிஏபி எம்பி லிம் லிப் எங்-கும், முன்னாள் நீதிபதி ஒருவர் வழக்குரைஞராக வாதாடுவதில் ஒரு வழக்குரைஞர் என்ற முறையில் தமக்கும் உடன்பாடில்லை என்றார்.
பள்ளி ஆசிரியர் ஓய்வு பெற்ற பின் பகுதி நேர ஆசிரியர் தொழில்
செய்ய கூடாது என்று சட்டம் இயற்ற வேண்டியதுதானே.
குதிரையை ஒட்டிப்புட்டு கழுதையை ஓட்டவேண்டாம் என்பதாகும்.கூட்டரசு நீதிபதி என்பது உயரிய அந்தஸ்து.இதை சொல்லி விளங்கவாபோகிறது.வாழ்க நாராயண நாமம்.
ஏன் முடியாது ? சட்டத்தில் இடம் இருந்தால் முடியும். யார் யாருக்கு வேண்டுமானாலும் வாதாடலாம். இங்குதான் சட்டம் ஒரு சாராருக்கு மட்டும் வளைந்து கொடுக்கும்.
முன்னாள் நீதிமன்ற தலைவர் துன் சாலே அபாஸ் அம்னோ
செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதால் மகாதீர் அவரை
நீதிபதி பதவியிலிருந்து நீக்கினார் ,அதன் பின் துன் சாலே அபாஸ் வக்கீல் தொழிலை செய்யும் போது ஏன் பதவி
ஒய்வு பெற்ற கோபால் ஸ்ரீராம் வக்கீலாக முடியாது ,கேராக்கான் எதையும் சொல்லும் போது சிந்தித்து சொல் புரியுதா நைனா .