அன்வார் இப்ராகிம்மின் மேல்முறையீடு விசாரணையின் 3 ஆவது நாளான இன்று அன்வாரின் வழக்குரைஞர் ராம் கர்ப்பால் அவரது வாதத்தை இன்று தொடர்கிறார்.
பெடரல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை மீண்டும் காலை மணி 9.30 க்கு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராம் கர்ப்பால் அவரது வாதத்தை முடித்துக் கொண்ட பின்னர் அரசு தரப்பு வழக்குரைஞர் முகமட் ஷாபி அப்துல்லா அவரது வாதத்தை தொடங்குவார்.
அன்வாரின் வழக்குரைஞர்கள் கடந்த இரு நாட்களாக முன்வைத்த வாதத்தில் “புதிதாக ஒன்றும் இல்லை” என்று ஷாபி அப்துல்லா நேற்று கருத்துரைத்தார்.
வழக்கின் விசாரணை வெள்ளிக்கிழமை வரையில் தொடரலாம் என்று கூறப்படுகிறது.
இன்ரு காலை மணி 8.00 அளவில் அன்வார் ஆதரவாளர்களின் ஒரு சிறிய கூட்டத்தினர் நீதிமன்ற வளாகத்திற்கு வெளியில் காணப்பட்டனர்.
நேற்று நடந்தது போலல்லாமல், அங்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் எவரும் காணப்படவில்லை.
நீதிமன்ற அறைக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களான கமாருடின் ஜாப்பார், வோங் சென் மற்றும் பத்து புரூக் சட்டமன்ற உறுப்பினர் ஸைட் அஸ்மான் ஸைட் முகமட் ஆகியோர் இருக்கின்றனர்.
அன்வாரின் வழக்குரைஞர்களான சங்கீதா கௌவுர் மற்றும் எரிக் பால்சென் ஆகியோர் விசாரனைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த வழக்கைக் கண்டு உலகமே ஆசனவாயால் சிரித்துக் கொண்டிருக்கிறது !
காலீட்டை சாய்பதற்கு என்னவெல்லாம் சதி செய்தாய்,ஆனால் இன்று உமக்கு ஞாயம் கேட்டு பணத்தை செலவு செய்து கூட்டத்தை கூட்டினாய் ரெபோர்மாசி சொன்னாய்,இன்று எங்கே போனது அந்த கூட்டம்.இலய தலைமுறை உமக்கெதிராக ரெபோமாசி செய்கிறது,ஓய்வெடுக்க சொல்கிறது.நாராயண நாராயண.
வரலாற்றில் அரசியல் தலைவர்களை , இதைவிட மோசமாக நடத்த பட்டிருக்கிறார்கள் ! ஆவற்றை வென்று மக்களுக்கு நல்லது செய்வது தான் , கடவுளுக்கு செய்யும் தொண்டு ! அன்வார் அவர்கள், புரட்சியை முன் எடுக்கும் பொழுது, அதற்கு ஒரு விலையை கொடுத்தே ஆகவேண்டும், அது தான் இது ! ISKCON தோற்றுனர் ஸ்ரீல பிரபோ பாத அவர்களுக்கு , 2 வருடம் தொடர்ந்து பாலில் விஷம் (arsenic)கலந்து தரப்பட்டது . அவரும் அதை தேவாமிர்தம் போல் குடித்து வந்தார் ! அவரிடம் இதை தெரிவித்த பொழுது , கிருஷ்ணருக்கே விஷம் வைக்க பார்த்தார்கள் , நான் எம்மாத்திரம் என்றார் . அதற்க்கு அவர் தந்த விலை, அவர் உயிர். இன்று ISKCON உலகளாவிய நிலையில் பாகவத கீதையை கொண்டு சேர்த்திருக்கிறது ! ஸ்ரீல பிரபோ பாத அவர்களிடம் இன்று கேட்டால் கூட , ஒரு டம்ளர் விஷம் தாருங்கள் என்பார் ! ஆனால் அவர் இன்று இல்லை !