பல்கலைக்கழக அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்ததால் துணிச்சல்காரர் எனப் பெயர் பெற்றிருக்கிறார் மலாயாப் பல்கலைக்கழக மாணவத் தலைவர் பாஹ்மி சைனல்.
அன்வாரின் பேச்சை ஏற்பாடு செய்ததால் சிலர் அவரை எதிரணி கையாள் என்றும் முத்திரை குத்தியுள்ளனர்.
ஆனால், அது உண்மை அல்ல என்று மலேசியாகினிக்கு வழங்கிய நேர்காணலில் மறுக்கிறார் பாஹ்மி.
தாம் அம்னோவின் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான டாக்டர் மகாதிர் முகமட்டின் இரசிகன் என்றாரவர். இப்படிச் சொல்வதால் அன்வாருக்கு எதிரி என்று யாரும் நினைத்து விடக்கூடாது என்றும் அவர் சொன்னார்.
மகாதிரின் தொலைநோக்குப் பார்வையும், பரந்த படிப்பறிவும் நாட்டை உருவாக்கிய திறமையும் துணைப்பிரதமராக இருந்த அன்வாரை அப்பதவியிலிருந்து தூக்கக் கையாண்ட உத்தியும் பிரமிக்க வைப்பதாக பாஹ்மி கூறினார்.
“(அரசியல்) தந்திரத்தை மகாதிரிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்”, என்று குறிப்பிட்ட அவர், மகாதிரின் சுயசரிதையான Mahathir’s memoirs A Doctor in The House நூல் தாம் விரும்பிப் படிக்கும் நூல்களில் ஒன்று என்றும் சொன்னார்.
‘மகாதிரைக் கண்டு பிரமிக்கிறேன்’ அப்படியா ? நான் மகாதிரை கண்டு காரி துப்புகிறேன்