Allianze University College of Medical Sciences (ஏயுசிஎம்எஸ்) நிதிப்பற்றாக்குறை உள்பட பல பிரச்னைகளை எதிர்நோக்கினாலும் அது தொடர்ந்து செயல்பட உரிமம் வழங்கப்பட்டிருப்பது எப்படி எனக் கல்வி அமைச்சு விளக்க வேண்டும்.
இவ்வாறு கேட்டுக்கொண்ட பினாங்கு துணை முதலமைச்சர் பி.இராமசாமி, அப்பல்கலைக்கழகம் எதிர்நோக்கும் குறைகளுக்கு அதன் நிறுவனர் சைனுடின் வாஸிர் உடனடியாக தீர்வு காண வேண்டும் என்றார். ஏப்ரல் தொடங்கி பல குறைகள் தெரிவிக்கப்பட்டு வருவதாகவும் அவற்றுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்றும் அவர் சொன்னார்.
இவ்விவகாரம் பினாங்கில் நடந்தாலும், கல்வி கூட்டரசு அரசாங்கத்தின் அதிகாரத்துக்கு உள்பட்டது என்பதால் மாநில அரசால் எதுவும் செய்ய இயலாதிருக்கிறது.
“எங்களால் பிரச்னையை வெளிச்சம்போட்டுக் காட்டத்தான் முடியும். அமைச்சுதான் இதற்கு விரைவாக தீர்வு காண வேண்டும்”, என்றாரவர்.
கப்பலா பத்தாசில் உள்ள அப்பல்கலைக்கழகக் கல்லூரியால் அதன் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க இயலவில்லை. நிதி நெருக்கடி காரணமாக அக்கல்விக்கழகம் இழுத்து மூடப்பட்டதால் சுமார் 476 மாணவர்கள் நிலை திண்டாட்டமானது.
476 பேரில் 208 பேருக்கு மற்ற பல்கலைக்கழகங்கள் இடம் வழங்க முன்வந்தன. ஆனால், பின்னர் அங்கும் இடமில்லை என்று கைவிரித்து விட்டார்கள்..
இப்படி இன்னும் எத்தனையோ புதிய தனியார் உயர்க் கல்விக் கூடங்கள் வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் தத்தளித்துக் கொண்டிருகின்றது. பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தால் எல்லாமே வெட்ட வெளிச்சத்துக்கு வரும். காத்திருங்கள்.
இந்நாட்டின் முதலைகள் இது போன்ற அழுக்கு நீரில் தானே மறைமுகமாக வாழ்கின்றன.
அப்படி இருந்தும் இப்படி சம்பந்தப்பட்டவர்கள் அனுமதி கொடுத்தால்….., இங்கு என்னவோ சிறிதும் சந்தேகம் இல்லாமல் சந்தேகப்பட வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகிறோம். நாட்டில் மதம் பரவும் வேகத்தில், அதற்கு ஈடு கொடுத்து நேர்மை பரவ முடியாமல் தள்ளாடுகிறது.
அப்படியிருந்தும் சம்பந்தப்பட்டவர்கள் இப்படி இவர்களுக்கு அனுமதி கொடுப்பது சந்தேகம் சிறிதும் இல்லாமல் நம்மை சந்தேகம் கொள்ள செய்கிறது. நாட்டில் சமயம் பரவும் அசூர வேகத்தில், அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் நேர்மை தள்ளாடுகிறது.
இந்த மாறி தன் முன்பு சில ம இ க அரசியல் வாதிகள் தாதியர் கல்லுரி ஆரம்பித்து தகுதி இல்லாதவர்களை தன் தாதியர் கல்லூரில் சேர்த்து கடன் காரன் ஆக்கி இப்பொழுத் வேளை இல்லாமல் இருகிறார்கள் இந்த பிரச்னை ம இ க அரசியல் அமைச்சர்களுக்கும் தெரியும் ,அதுவும் பேரக் மாநிலத்தில் அதிகமாக நடந்தது