2வது கேஎல் அனைத்துலக விமான நிலையத்தில் கிறிஸ்துவ குறுவட்டுகள்(சிடி) பறிமுதல் செய்யப்பட்டதானது ‘அல்லாஹ்’ விவகாரத்தில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் போர்னியோ கிறிஸ்துவர்களுக்குக் கொடுத்த வாக்குறுதி பொய்யாகிப் போனதைக் காண்பிக்கிறது என செர்டாங் எம்பி ஒங் கியான் மிங் கூறினார்.
கடந்த சனிக்கிழமை, இந்தோனேசியாவின் மேடானிலிருந்து கேஎல்ஐஏ2-இல் வந்திறங்கிய சாபா குடிமகன் ஒருவரிடமிருந்து நூற்றுக்கணக்கான கிறிஸ்துவ சிடிகளும் நூல்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார்.
“அச்செய்தி உண்மையானால், சாபா, சரவாக் கிறிஸ்துவ சமூகத்தினருக்கு நஜிப் அளித்த உத்தரவாதம் நம்ப முடியாதது என்பதைத்தான் அது காண்பிக்கிறது”, என ஒங் ஓர் அறிக்கையில் கூறினார்.
ரொம்ப லேட்டா புரிஞ்சிருக்கு இவருக்கு. எங்களுக்கு இது சொன்ன அன்றே தெரியுமே!.
நஜிப்பின் வாக்குறுதி சற்றும் உறுதியற்றது. அது காற்றில் சுலபத்தில் பறக்கக் கூடியது. இது தெரியாதா உங்களுக்கு..?! . இன்னும் 2 நஜிப்புகள் இருந்தால், 3 பேரும் ஒண்ணா சேர்ந்து அவர்கள் உறுதி மொழியின் உந்துதலிலேயே, எண்ணெய் இல்லாமல் விமானத்தைப் பறக்க செய்து விடுவார்கள். அமரிக்க விஞ்ஞானிகளுக்குக் கூட கனவில் தோன்றாத திறமை இது.