சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி அம்மாநிலம் நீதியையும் மிதவாதத்தையும் நிலைநிறுத்த பாடுபடும் என உறுதி கூறியுள்ளார்.
பெட்டாலிங் ஜெயாவில் முஸ்லிம் ஜனநாயகவாதிகள் கருத்தரங்கில் பேசிய அவர், “தீவிரவாதிகளுக்கும்” “வெறியர்களுக்கும்” சிலாங்கூர் மாநிலத்தில் இடமில்லை என்றார்.
“அந்த வகையில், அப்படிப்பட்ட உணர்வுகளுக்கு சிலாங்கூர் மாநில நிர்வாகத்தில் இடமிருக்காது என்பதையும் எப்போதுமே நீதி மற்றும் மிதவாத கோட்பாடுகளை நிலைநிறுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம் என்பதையும் வலியுறுத்த விரும்புகிறேன்”, என்று அஸ்மின் குறிப்பிட்டார்.
ஆமாம் MB அவர்களே ! தீவீரவாதிகளை ஏற்றுமதி செய்கிறது , இங்குள்ள இந்தியர் குண்டர்களை பிடிப்பதில் மும்முரம் காட்டுகிறது அரசு !
நல்ல அரசியல் பதில். பிழைத்துக் கொள்வீர்.
நம்பிட்டேன்,நாராயண நாராயண.