கூட்டரசு அரசாங்கம்,, 2008-இலிருந்து 2013-வரை சாலைக் கட்டணத்தைக் கூட்டாமல் இருப்பதற்காக நெடுஞ்சாலை பராமரிப்பாளர்களுக்கு ரிம1 பில்லியன் இழப்பீடு கொடுத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் ங்கா கொர் மிங்-குக்கு வழங்கப்பட்ட எழுத்து வடிவிலான பதிலில் பொதுப்பணி அமைச்சு இதனைத் தெரிவித்தது. 2014ஆம் ஆண்டுக்கு மேலும் ரிம400 மில்லியன் அவற்றுக்குக் கொடுக்க வேண்டியிருக்கும்.
15 நெடுஞ்சாலை பராமரிப்பு நிறுவனங்களில் அதிகமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றவை ஸ்பிரிண்ட் எக்ஸ்பிரஸ்வேயும் டமன்சாரா-பூச்சோங் ஹைவேயும் ஆகும்..அவ்விரண்டுக்கும் கடந்த ஐந்தாண்டுகளில் முறையே ரிம281.84 மில்லியனும் ரிம257.78 மில்லியனும் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நெடுஞ்சாலையிலும் அதிகமான வாகனங்கள் நகர்கின்றன ! எதுக்கு இழப்பீடு கொடுத்தீர்கள் ? டோல்வசூலித்த கணக்கு யாரிடம் சொன்னீர்கள் ?
அம்னோ குஞ்சுகள் பிறகு எப்படி பணக்காரன் கள் ஆ க முடியும்? 1957ல் எப்படி இருந்தவன்கள் இன்று எல்லாவற்றையும் தங்களின் கையில் வைத்திருக்க என்ன காரணம்?
எழும்புக்காக நம்மை எல்லாரையும் விற்று விட்ட ஈன ஜென்மங்கள்– MIC -MCA .
அங்கு இருகிறவன் எல்லாம் நாட்டான், கண்டிப்பா பணம் கொடுக்கணும்.
போராமை தீவினையின் உறைவிடம்.வாழ்க நாராயண நாமம்.
நண்பர்களே இந்தியர்கள் ,சீனர்கள் , மலாய்க்காரர்கள் என்று சொல்வோம் நாட்டான் நாம் எல்லோருமே நாட்டுக்காரங்கள் தான்.