சிலாங்கூர் பைபிள் விவகாரத்தில் மாநில அரசு சுல்தானின் ஒப்புதலை நாடுகிறது. அதன் பின்னர் அதற்கு ஒரு தீவு காணப்படும் என்று சிலாங்கூர் மந்திரி புசார் அஸ்மின் அலி இன்று கூறினார்.
பறிமுதல் செய்அயப்பட்ட பைபிள்கள் சம்பந்தமாக ஜாயிஸ் மற்றும் மைஸ்சுடன் பல சந்திப்புகள் நடத்தப்பட்டுள்ளன. நல்ல விளைவுகளைக் காட்டுகிறது என்றார் அஸ்மின்.
என்ன விளைவுகள், வை எப்போது வரும் என்ற கேள்விகளுக்கு பதில் கூறுவதில் அவர் சற்று தயக்கம் காட்டினார். ஓர் அறிவிப்பு செய்யப்படும் என்பதை மட்டும் அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.
செய்தியாளர்களின் விடாப்பிடியான வற்புறுத்தலைத் தொடர்ந்து, “நீங்கள் ஆறு மாதங்களுக்கு காத்திருக்க முடியுமென்றால், இன்னும் சில நாள்களுக்கு காத்திருக்க முடியாதா? என்று அஸ்மின் வினவினார்.
மீண்டும் அம்னோ வலையில் சிக்காமல் இருந்தால் மக்கள் கூட்டணிக்கு நன்மை. இல்லையேல் 2-வது தடவையாக பாஸ் கட்சி தனது சுயபுத்தியைக் காட்டி விடும். எதிலும் கவனமும், அறிவுத் திறமையும், பேச்சு திறமையும், சட்டத் திறமையும் தேவை. தேவையான தகுந்த சட்ட ஆலோசகர்களை உடன் வைத்துக் கொள்வது மாநில முதல்வருக்கு நல்லது.
கவனம் அஸ்மின் அவர்களே ! அல்லாஹ் என்ற சொல்
முஸ்லிம்களுக்கு மட்டும் என்று பல்டி அடிக்க வேண்டாம்.
அல்லாஹ் என்ற சொல்லின் ,பயன்பாடு இஸ்லாம் மதம் உருவகும்முனே புழக்கத்தில் உள்ளது என்பதை யாரும் மறந்திட வேண்டாம் .ஆய்வு அறிக்கைகல் கூறுகின்றன .அதனால் மலேசியா முஸ்லிம்கள் இதில் தீவிரம் கடுவதை கவனத்தில் கொளவேண்டும்.