மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் வடக்கு கிழக்கில் வாழ்வதற்கு விரும்பினால், அவர்களுக்குரியதை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு எவ்வித ஆட்சேபனையும் இல்லையென கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற விசேட கருத்துக்களம் நிகழ்ச்சியில் தமிழ் அரசியல் தலைமைகள் தங்களது காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
அத்துடன், குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உலகத் தமிழர்கள் தங்களது ஆக்ரோசமான கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
தமிழர்கள் மத்தியில் பிரித்தாளும் தந்திரத்தை அரசாங்க நிபுணர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
“தமிழர்களின் ஒற்றுமையீனமே தமிழர்களை அழிப்பதற்கான மூலகாரணமாக உள்ளது.” போன்ற பல கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.
http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Bj2E7ybpJVM