சரவாக்கில், 2015-இல் வீடுகளுக்கான மின்சாரக் கட்டணம் குறையும் என முதலமைச்சர் அடினான் சாதேம் கூறினார்.
இதனால் குறைந்த வருமானம் பெறுவோர் அதிக நன்மை அடைவர் என்றாரவர்.
ஏற்கனவே அம்மாநிலத்தில் 70,000 பேர் கூட்டரசு அரசாங்கத்திடமிருந்து மின்கட்டண உதவித் தொகையாக ரிம20 பெற்று வருகிறார்கள். புதிய திட்டம் அமலுக்கு வரும்போது மேலும் 60 ஆயிரம் பேர் அவர்களுடன் சேர்ந்து கொள்வர்.
அதாவது சுமார் 130,000 பேர் சரவாக்கில் மின் கட்டணம் செலுத்த வேண்டியிருக்காது என அடினான் கூறினார்.
“அதே வேளை அரசாங்க உதவித் தொகையைப் பெறாமலும் மாதம் 150 யுனிட்டைப் பயன்படுத்துவோருமான வாடிக்கையாளர்களின் மின்கட்டணம் 40விழுக்காடுக்குமேல் குறையும்”, என்றாரவர்.
150-இலிருந்து 200 யுனிட்வரை பயன்படுத்தும் 80,000 வாடிக்கையாளர்களின் மின்கட்டணம் 30 விழுக்காடு குறையும்.
சரவாக் மக்கள் கொடுத்துவைத்தவர்கள்.