அம்னோ ஆண்டுப் பேரவையில் கலந்துகொள்ளும் பேராளர்கள் இனம், சமயம் தொடர்பிலான எளிதில் உணர்ச்சிவசப்படவைக்கும் விவகாரங்களைப் பெரிதுபடுத்திப் பேசாதிருப்பது நல்லது எனத் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார்.
உறுப்பினர்களின் தனிப்பட்ட பிரச்னைகளையெல்லாம் பேரவைக்குக் கொண்டுவரக் கூடாது.
“தனிப்பட்ட விவகாரங்கள், எளிதில் உணர்ச்சிவசப்பட வைக்கும் இன விவகாரங்கள், அம்னோ உறுப்பினர்களுக்கிடையில் ஆத்திரத்தை உண்டுபண்ணக்கூடிய பிரச்னைகள் பற்றியெல்லாம் பேச வேண்டாம்.
“இவ்விவகாரங்களுக்குப் பொறுப்பான உதவித் தலைவர் ஹிஷாமுடின் உசேன் வழிகாட்டிகளை வழங்கியுள்ளார். அவற்றை அவர்கள் பின்பற்றலாம்”, என தெங்கு அட்னான் செய்தியாளர்களிடம் கூறினார்.
அம்னோவின் 65-வது ஆண்டுக் கூட்டம் நவம்பர் 25 தொடங்கி நவ.29வரை நடைபெறுகிறது.
நம்பிவிட்டோம் …….
நம்புங்க இல்லன்டா BRIM குடுக்க மாடோம்
உணர்ச்சிவசபடாமல் சிரித்து கொண்டே,தமிழ் சீன பள்ளிகளை
மூட என்று வேண்டும் என்று பேராளர்கள் பேச வாய்ப்பு இருக்கிறது.
செவிடன் காதில் உதிய சங்கு
கைத்தட்டல் பெற வேண்டுமானால் உணர்ச்சி வசப்படக்கூடிய பிரச்சனைகளைத் தான் பேச வேண்டும்! அப்படிப் பேசுபவர்கள் தான் ஹீரோவாக மதிக்கப்படுவர்! பெரியார் போற்றி! போற்றி!