அனைத்துலக இந்து மாநாடு இம்மாதம் நவம்பர் 21 இருந்து 23 வரை 3 நாட்களுக்கு புதுடில்லியில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் பல இந்து அமைச்சர்கள், மாநில ஆளுநர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர். இந்த மநாட்டில் கலந்து கொள்ள மலேசியாவில் இருந்து முன்னாள் அமைச்சர் ச. சாமிவேலு மற்றும் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மு. குலசேகரன் ஆகியோர் செல்லவிருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் மலேசியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி உரையாற்றுவர்.
அனைத்துலக் குற்றவியல் மன்றத்தில் மலேசியா அங்கத்துவம் பெற வேண்டியதின் அவசியத்தைப் பற்றி குலசேகரன் விவாதிப்பார். சிறுபான்மையினருக்கு குறிப்பாக சொந்த நாட்டின் சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் இன ஒழிப்பு, போர்க் குற்றங்கள் இவற்றை கண்காணிப்பதற்காக அமைக்கப்பட்டதே இந்த அனைத்துல குற்றவியல் மன்றம்.
பின்தள்ளப்பட்ட இந்திய சமூகம்
மலேசியாவில் பொருளாதாரத்தில் பின்தங்கி விட்ட மலேசிய இந்துக்களுக்கு உலக இந்து சமூகம் உதவ முன்வரவேண்டியதின் அவசியத்தையும் குலா வலியுறுத்துவார்.
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு மலாயாவும் அதன் சுற்றுப்புற நாடுகளும் இந்துக்களால் ஆளப்பட்டு, இந்து சமயமே முதன்மைச் சமயமாக இருந்து வந்துள்ளது. இன்று பாலி மட்டுமே இந்து பெரும்பான்மை கொண்ட மாநிலமாக உள்ளது.
இந்து மதத்தில் இருந்து பிற மதத்திற்கு ஒரு சாரர் சம்மதத்துடன் மதம் மாற்றபட்ட சிறார்கள் படும் கொடுமைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விளக்கமளிக்கப்படும். கணவனால் கைவிடப்பட்டு மதம் மாறி இரண்டு குழந்தைகளை பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட இந்திராகாந்தியின் நிலை குறித்தும் இங்கு விளக்கமளிக்கப்படும்.
இறுதியாக, இந்து சமயத்தின் பண்புகளும் அதன் மகத்துவமும் இந்த மாநாட்டில் வலியுறுத்தப்படும்.
இந்திய நாட்டின் அமைச்சர்களையும் மற்ற நாடுகளைச் சார்ந்த பிரதிநிதிகளையும் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வதை தாம் பெருமையாகக் கருதுவதாக குலா கூறுகிறார்.
குலசேகரன் மாநாட்டில் பேசவிருக்கும் நிகழ்ச்சிக்கு இந்தோனீசியாவின் பாலி ஆளுனர் இ மாடே மாங்கு பாஸ்திக்கா தலைமை ஏற்கிறார்.
இம்மாநாட்டிற்கு மலேசியாவுடன், அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, சுரினாம், தென் ஆப்பரிக்கா, மொரிசீயஸ், பிரான்ஸ், ஸ்ரீலங்கா, இந்தோனீசியா, நெதர்லாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகளின் அமைச்சர்களும் சமய அறிஞர்களும் கலந்து கொள்ளவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
.
ஹிந்துக்கள் மாநாடு சரி , எனக்கு ஒரு ஆசை வேண்டுகோள் ஹிந்து மதத்தில் இருக்கும் ஜாதி வேறுபாடை களைய ஒரு மாநாடு நடத்துனால் நல்லா இருக்கும்.
குலசேகரன் பேசுவார் .அரசாங்க பிரநிதிகள் பேசுவார்களா ?
இந்து கோவிலை இடிக்கச் சொன்னவர் மலேசியாவில் இந்துக்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி உரையாற்றுவார். எப்படி இந்துக்கள் மனமாற்றத்தால் கிறிஸ்துவர்கள் ஆகலாம் என்று அனுபவம் உடையோர் கொஞ்சம் எடுத்துச் சொன்னால் இன்னும் நன்றாக இருக்கும். இந்து சமயம் என்றால் என்ன என்பதை அறியாத ‘அறிஞர்கள்’ எல்லாம் இந்து சமயம் நோக்கும் பிரச்சனையைப் பற்றி பேச, இந்து சமய தெய்வங்கள் எல்லாம் மூக்கின் மேல் விரலை வைத்துக் கொண்டு பார்க்கப் போகின்றனர்!.
இந்த சாமிவேலு என்ன பேசப்போறாரு? ஏற்கனவே நமக்காக்காக நிறைய பேசிவிட்டார். இவர் பேசி கிழிச்சது போதும்..
முதலில் வீட்டுக்கு வீடு கோவில் கட்டுவதை நிறுத்துங்கள் பிறகு அரசாங்கத்தை
குறை கூரலாம். கோவில் நிர்வாகம் சரி ல்லை என்றால் அரசாங்கம் என்ன செய்யும்.
எல்லாவற்றையும் முறையாக பதிவு செய்திருந்தால் ஏனையா கோவிலை உடைக்க போகிறார்கள்.
மதம் மாறி போகும் சில 7 1/2 கல் எதற்காக பிள்ளைகளையும் சேர்த்து அந்த குழியில் தள்ளுகின்றனரோ . அண்மையில் பாராளும் மன்றத்தில் ஒரு அம்னோ ….. தமிழனை அறைந்ததாக கேள்விபட்டேன் . உண்மையா ஆசிரியரே ?
போச்சிடா ..இந்த மக்கள் கூட்டனி மக்கைகள் சும்மா இருக்க முடியாம இல்லாத
விசயதுக்குல்லாம் சிங் சக் போடுவாங்க ..இதை முதல்லே விடுங்கப்பா.
சாமிவேலு பாடாங் ஜாவா இந்து ஆலயம் உடைபட்ட நேரத்தில் உங்களுக்கு செருப்பு விழுந்தது நினவு இருக்கிறதா ? உண்மையான இந்து என்றால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாதே. உனக்கு அந்த தகுதி இல்லை. நீயும் கிர்தொயும் செய்த அந்த அட்டுழியம் மக்கள் அறிவர் .
இதுக்கு நான் கருத்து சொன்னால் சில பேர் கடுப்பாகி விடுவார்கள்.
மேலே சில அரை வேக்காடுகள் உண்மை தெரியாமல் புலம்பியிருக்கின்றன. நானும் உண்மை சொல்ல வந்தால் ‘அவை’ தூக்குப் போட்டுக்கொள்ளும் .
நம் தேசத்தில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்? ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.
சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே… ஏன்?
நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர… ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.
‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 91-2 to 96
பகுதி – 91 – 2. இவ்வளவு விஷயங்களைப் பார்த்த நாம்.. எங்கேயாவது ஒரு இடத்திலாவது ‘ஹிந்து என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறோமா? முதல் அத்தியாயத்தின் முடிவில்… பிராமணர்கள் இங்கு (இந்தியாவிற்கு) வரும்போது 450 மதங்கள் இருந்தனவாம் இதில் எது இந்து மதம்? என கேள்வி எழுப்பியிருந்தேன்.
அந்தப் பிரயோகத்திற்குப் பிறகு வேறு எந்த இடத்திலாவது நாம் இந்து or ஹிந்து என்கிற வார்த்தையைப் பிரயோகப்படுத்தி யிருக்கிறோமா? யோசித்துப் பாருங்கள் தலைப்பே இந்து மதம் எங்கே போகிறது? என்பது தான் ஆனால், இதுவரை இந்து என்கிற பெயரையே உங்களுக்கு நான் அறிமுகப்படுத்த வில்லையே?
நமது மதத்தைப்பற்றி இவ்வளவு விஷயங்களை, நமது கலாச்சார மதத்தைப்பற்றி எத்தனை மேற்கோள்கள், சம்பவங்கள், கதைகள் பார்த்துவிட்டோம் ஆனால்…? இந்து or ஹிந்து என்கிற பதத்தை எடுத்து பயன்படுத்தவில்லையே?
இந்தக் கேள்வி வரும்போதுதான் இந்தப் பதம் எப்படி வந்தது என சொல்ல வேண்டியுள்ளது அதற்குமுன்.. உலகத்தில் பொதுவாக மனித இனங்களைப் பார்த்தோமென்றால்.. அய்ந்தாகப் பிரிக்கிறார்கள் Artho biological அறிஞர்கள்.
என்னென்ன இனம்? Semetic – யூதர்கள், அரேபியர்கள் Hemetic – இவர்கள் இன்று இல்லை என்கிறார்கள். Negroes – ஆப்பிரிக்கா மக்கள். Mongols – சீனா தேசத்தவர். Aryans – அய்ரோப்பியர்கள், இந்திய பிராமணர்கள் போன்றோர்..
இந்த இனப் பாகுபாட்டை அப்படியே பார்த்துவிட்டு பாபிலோனியாவுக்கு (IRAQ) வாருங்கள். பாபிலோனியா?
ஆமாம் உலக வரலாற்றாசிரியர்கள் ஆழ்ந்த ஆராய்ச்சிக்குப் பிறகு.. அவர்கள் வெளியிட்ட ஒரு சொற்றொடரை இங்கே தருகிறேன் அப்போது பாபிலோனியா என்றால் என்ன என்று உங்களுக்கு விளங்கும்.
”In the dark past of ancient countries.. Bobylonia and Egypt are only lights with fine culture’ உலகின் மிக இருட்டான பழைய காலத்தைப் புரட்டிப் பார்க்கிறபோது அங்கே இரண்டு இடங்களில் தான் நாகரிக கலாச்சார வெளிச்சம் கண்ணைப் பறிக்கிறது ஒன்று பாபிலோனியா (IRAQ) , மற்றொன்று எகிப்து.
இதில் ஒரு வெளிச்ச ஸ்தலமான பாபிலோனியாவைப் பற்றித்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம் அங்கே வாழ்ந்த மக்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகப் புரட்சி செய்தவர்கள், நாடமைத்து, நகரம் அமைத்து கட்டியாண்டவர்கள் அவர்களது மதமும், நாகரிகமும் பொருந்தியதாகத்தான் இருந்திருக்கிறது. இதற்கான ஆதாரங்கள் ‘The Encyclopedia of world religions and Ethics’ என்ற களஞ்சியத்தில் நமக்குக் காணக் கிடைக்கிறது.
பாபிலோனியர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் வணங்கிய தெய்வங்கள் என்ன? பழைமை வாய்ந்த பாபிலோனியாவில் Fatamism worship அதாவது விலங்கு உருக்களை வழிபடும் வழக்கமும் இருந்தது.எப்படி? அவர்கள் அந்த விலங்குக் கடவுளுக்கு விழா எடுத்தார்கள் அதுவும் நம்மூரில் பல்லாக்கு தூக்குகிறோமே அதேபோல மரத்தாலான பல்லாக்கு செய்து அதை பூக்களால் அலங்கரித்து தங்கள் தெய்வத்தை அதற்குள் வைத்து தூக்கிக்கொண்டு சென்று உற்சவமே நடத்தியிருக்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி… இன்னது இன்னதுதான் தர்மங்கள், இவைகளைச் செய்யக்கூடாது என நீதிக் கருத்துக்களை நிர்ணயிக்கும் அளவுக்கு அவர்கள் வளர்ந்திருந்தனர்.
குட்டைப் பாவாடை போல கட்டிக்கொண்டு கரடு முரடான கட்டுமஸ்தான உடலில் இடுப்பில் வாளை சொருகிக் கொண்டு அவர்கள் பார்க்கப் பயங்கரமாக இருப்பார்கள்.
ஆனால், முற்றிய நாகரிகத்திலிருந்து முளைவிட்டுப் பூத்திருந்தது அவர்களின் வாழ்க்கை.சரி.. பாபிலோனியாவில் கலாச்சார வெள்ளம் கரைபுரண்டு ஓடட்டும் அதற்கும், ‘இந்து பேருக்கும் என்ன சம்பந்தம் என்று தானே கேட்க வருகிறீர்கள். பொறுங்கள்.. பாபிலோனியாவைப் பற்றி இன்னும் கொஞ்சம் பார்த்து விடுவோம். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி – 92. பாபிலோனியர்களைப் பற்றி பார்த்து வருகிறோம். நமது விஷயத்துக்கு வரும் முன்னர் பாபிலோனியர்களின் நாகரிக கலாச்சாரம் பற்றி இன்னும் கொஞ்சம் பார்க்கலாம். என்ன பண்பாடு. அப்படியே ஆச்சரியம் பொத்துக் கொண்டு பாபிலோனியா மீது வழிகிறது. அப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள் பாபிலோனியர்கள்.
சுமேரிய நாகரிகத்தின் சுவடுகளைக் கொஞ்சம் எடுத்துக் கொண்ட பாபிலோனியர்கள் தங்களுக்கென்று தனிச்சிறப்பு மிக்க வாழ்க்கையை வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு பாபிலோனிய மண்ணுக்கு கொஞ்சம் செல்லலாமா?
பச்சைப் பசேலென பூத்துக் கிடக்கும் பச்சை மரங்கள். அந்தப் பக்கமாய் ஓர் இனிய இசை காற்றில் சலசலவென பரவுகிறது. அது என்ன நாதம்? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாசிக்கப்பட்ட அந்த கீதத்தை, இசையை எப்படி வார்த்தைகளில் கொண்டுவர முடியும்?
அதோ அந்த இசை வரும் திசை நோக்கிச் சென்றால், ஒரு சிறிய கூட்டம் நடுவிலே மொட்டைத் தலையோடு நீண்ட சிவப்பு நிற முழு அங்கியோடு காட்சி தருகிறார் ஒருவர். யார் இவர்? அவர்தான் பாபிலோனியர்களின் மதகுரு.
பாபிலோனியர்களின் மதம் என்ன? இயற்கையான சூரியனையும் சந்திரனையும் வழிபட்டவர்கள். பிறகு விலங்குகளை வழிபட்டு பிற தங்களுக்கென கடவுள்களை தங்கள் மொழியின் பெயரில் உருவாக்கிக் கொண்டார்கள். அந்தக் கூட்டத்தில், டமாரம் இருக்கிறது. புல்லாங்குழல் இருக்கிறது. சிலர் இவற்றை வாசிக்க இன்னும் சிலர் பாடுகிறார்கள். “In the assembly of the elders may my speech he heardOh God.. daily walk with me thy prise I would sing…”பாபிலோனியர்களின் பலதரப்பட்ட பக்தி கீதங்களில் ஒரு சிறு துளி இது.
Encyclopedia of World Religions and ethics என்ற புத்தகத்தில் . . . Babytlonian’s Prayer என்ற தலைப்பின் கீழ் இந்த பாட்டை நாம் படிக்க முடிகிறது. என்ன அர்த்தம்?
“மாபெரும் சபைகளில் நான் நடந்தால் எனக்கு மாலைகள் விழவேண்டும். கடவுளே என்னை அந்த அளவுக்கு என்னை அறிவுள்ளவனாக மாற்று. தினமும் என்னோடு எனக்குத் துணையாக நடந்து வா. அதற்காகத்தான் உன்னைப் போற்றிப் பாடுகிறேன்..” கடவுளிடம் அறிவைக் கேட்டார்கள் பாபிலோனியர்கள்.
இங்கே மதகுருமார்களைப் பற்றி நிறைய விஷயங்கள் இருக்கின்றன. மதகுருக்களில் நிறைய வகைகள் பிரித்து வைத்திருக்கிறார்கள். பொதுவான மத குருவுக்கு சேங்கு என்று பெயர். இதற்கு தலைவர் என்று அர்த்தம். இதற்கு அடுத்தவர் ‘சேங்கு ரேபு’ என்றால் High Preist. அவரைவிட இவர் உயர்ந்தவர். அதற்கு அடுத்தவர் ‘சேங்கு டேனு’ இவருக்கு Mighty Preist என பெயர். இவரையும் விட உயர்ந்தவர்தான் ‘சேங்கு மேஹு’. அதாவது Supreme Preist.
இவ்வாறு மதகுருக்களில் இத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் வழிபாடுகளில் அதாவது Public Prayer களில், மன்னனிலிருந்து பாமரர்கள் வரை அங்கே அனுமதிக்கப் பட்டிருக்கிறார்கள். பாமரர்களும் ஏன் அடிமைகள் கூட அங்கே கூட்டு வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் வழிபாட்டில் கலந்துகொள்ள ஒரு தகுதி வேண்டும்.
அதாவது பத்தில் ஒரு பங்கு வரி கட்டுபவன். வழிபாட்டில் வந்து கலந்துகொள்ளலாம். அப்படி வரிகட்ட இயலாதவன் அதாவது நிலமற்ற ஏழைகளும் வழிபாட்டில் கலந்து கொள்ளலாம். அதற்கு பதிலாக கோயில் காரியங்கள் சிலவற்றைச் செய்யவேண்டும். அதாவது உடல் உழைப்பை அர்ப்பணிக்கவேண்டும்.
வழிபாட்டில் பெண்கள்? ஏன் கிடையாது? இதே போல அவர்களுக்கும் வரி தகுதிதான். ஏனென்றால் பாபிலோனியர்கள் பெண் தெய்வங்களையும் வழிபட்டவர்களாயிற்றே.
இங்கேயொரு காட்சி. ஒரு கோயிலில் பொது வழிபாடு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது அங்கே வந்த ஒரு பெண்ணை சில அதிகாரிகள் வழிபாட்டுக்குள் அனுமதிக்க மறுத்து விடுகின்றனர்.
‘ஏய். நான் யார் தெரியும்? ’‘யாராக இருந்தால் என்ன?’‘ என் பெயர் நின்குயயா (Ninaqaya). நான் இந்நாட்டு அரசனுடைய அம்மாவின் பணிப்பெண். அரண்மனையிலிருந்து வருகிற எனக்கே அனுமதி இல்லையா? ’‘வரியைக் கட்டு பெண்ணே. அதுவரை நீ ராஜாவின் அம்மாவாக இருந்தால் கூட உனக்குக் கவலையில்லை.’ பிறகென்ன? தாதிப்பெண் தன் பங்கான வரியைக் கட்டினாள். பிறகுதான் வழிபாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டாள்.
ஏன் இதைச் சொல்கிறேன் என்றால், மதகுருமார்கள் பக்தி, ஆன்மிகம், வழிபாடு இவற்றில் மட்டுமல்ல, பல்வேறு நிர்வாகப் பணிகளையும் இதன் மூலம் செய்து வருகிறார்கள்.
இப்படி மதவிஷயத்தி லும் நிர்வாக விஷயத்திலும் கட்டுப்பாடு, வரி நிர்ணயம், அதன் மூலம் பொதுச்சேவை, அரசன் முதல் பாமரன் வரைக்கும் வரையறுக்கப்பட்ட நீதி என்றும் பொது வழிபாடு என்றும் நாகரிகமான வாழ்க்கை நடத்தி யிருக்கிறார்கள். இவர்களின் இந்த நகர நாகரிக வாழ்க்கை அடுத்த நாட்டு அரசர்களை உறுத்துவது வாடிக்கை தானே. பாபிலோனியா மீது ஆசை சொண்டான் அந்த நாட்டு மன்னன்.– அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி – 93. உச்சகட்டமான பாபிலோனிய கலாச்சார வாழ்க்கை முறையைப் பார்த்தோம். இப்படிப்பட்ட பூமியை ஆள… யாருக்குதான் ஆசை வராது? வந்தது அந்த மன்னனுக்கு. எந்த மன்னனுக்கு? இன்றைக்கு இரண்டாயிரத்து 600 ஆண்டுகள் முன்பாக என்றொரு வரலாற்றுக் கணிப்பு –
பாபிலோனியாவுக்குப் பக்கத்து பூமியான பாரசீக நாட்டின் மன்னன் முதலாம் கேம்பசிஸ் (Cambysis I) என்பவனுக்கு ஒரு மகன் பிறந்தான். பிறக்கும் போதே ஒருவித ஆக்ரோசத்துடன் தான் அவதரிக்கிறான் அந்தப் பயல். எல்லாரும் யோசிக்கிறார்கள். ‘அடிமைகளின் தேசத்தில்… பிறந்த உடனேயே இப்படி ஆக்ரோசத்துடன் துடிக்கிறானே… சரியான வால்தான்’ என்று.
ஆமாம்… அப்போது பாரசீகர்கள் மிடீய நாட்டு அரசனான ஆஸ்ட்யாகஸ் (Astyages) சின் அடிமைகளாகவே (Vassals) வாழ்க்கை நடத்தி வந்தனர். மிடீயன் மன்னனுக்கு அடிமைகளாக இருந்தபோதும், பாரசீக நாடும் ஒரு அமைப்பாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தது. The Persian nation contains a number of tribes என்கிறார் வரலாற்றறிஞர் ஹெராடடஸ்.
அதாவது பல பழங்குடி மக்களின் தொகுப்பு தான் பாரசீகம்.
பாஸரகேட், மராஃபி, மாஸ்பி போன்ற பல பழங்குடியினத்தவர். இப்படி கொத்துக் கொத்தாக வாழ்ந்து வந்த இந்தப் பழங்குடியின மக்களைத் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தான் மிடீயன் நாட்டு மன்னன். இந்த சமயங்களில் சைரஸ் (க்யூரஸ் என்றும் அழைப்பார்கள்) சின்னப் பிள்ளை. தன் அப்பாவின் வளர்ப்பில் எல்லா கலைகளையும் கற்றுக் கொண்டு வந்த சைரஸ்… இளமை துடிக்கும்… முறுக்கேறிய வயதில் தன் நாட்டின் அரசன் ஆனான்.
அப்போதெல்லாம் பாரசீகர்களின் நாட்டுக்கு அன்சன் என்று பெயர். சைரஸ், அன்சனின் அரசானானதும்… தன் தந்தை கட்டி மேய்த்துக் கொண்டிருந்த பழங்குடி நாடோடி மக்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்தான். தன் தந்தையைவிட சைரஸ் அவர்களின் மேல் ஆதிக்கம் செலுத்த… அதாவது இவனே மிடீயன் அரசனுக்கு கட்டுப்பட்டு வந்தவன். ஆனால்… இவன் தனக்கு கீழே சில பழங்குடியினரை உதைத்து கப்பம் வாங்கிக் கொண்டிருந்தால்… அவர்கள் என்ன செய்வார்கள்?
கத்தி, கற்களைத் தூக்கிக் கொண்டு சைரஸ்க்கு எதிராகப் போராட ஆரம்பித்து விட்டார்கள். பார்த்தான் மிடீயன் அரசன். “இந்த சைரஸே நமது கட்டுப்பாட்டில் இருக்கிறான். இவன் எப்படி அந்தப் பழங்குடியினரை மேய்க்கலாம்?” என கோபப்பட்டு… தன்னுடைய ஒரு படையை சைரஸ் நாட்டுக்கு அனுப்பி விட்டான். மிடீயன் நாட்டுப்படை ஹார்பகஸ் (Harpogus) என்ற தளபதியின் தலைமையில் சைரஸ் நாட்டுக்கு விரைந்தது.
“வாடா… வா… நான் என்ன என் அப்பனைப் போல கிழவன் என்று நினைத்தாயா? யாரை அடிக்கலாம்… அதுவும் இவ்வளவு காலமாக எங்களை அடிமையாக வைத்திருந்த உன்னை எப்போது அடிக்கலாம் என காத்திருந்தேன்…” என தொடை தட்டிய சைரஸ்… தன்னை நோக்கி வந்த மிடீயன் நாட்டுப் படையை… ஓட ஓட விரட்டினான்.
தளபதி ஹார்பகஸ் என்பவனை அடித்து நொறுக்கிய சைரஸ் அடுத்த கட்டமாய்… மிடீயா நாட்டையும் பிடித்தான். அது முதற்கொண்டு… மிடீயா மற்றும் பார்ஸியா பேரரசின் தலைவனான் சைரஸ். தன் அப்பன் காலத்தில் தன்னை யார் அடிமையாக்கினார்களோ, அவர்களை தன் சுட்டு விரலுக்குக் கட்டுப்பட்டவர்களாக மாற்றினான்.
இந்த இடத்தில்தான் ஒரு ‘ராஜ ரகசியம்’ பதுங்கிக் கிடக்கிறது. இந்த ரகசியத்தை வரலாற்றாசிரியர் ஹெரடடஸ்ஸே பகிரங்கப்படுத்துகிறார். என்ன ரகசியம்?
சைரஸின் அப்பா இருக்கிறானே… அவன் தன்னை அடிமையாக வைத்திருந்த மிடீயா நாட்டு மன்னனின் மகள் மண்டனே (mandane) வை எப்படியோ வளைத்துப் பிடித்துக் கல்யாணம் செய்து கொண்டு விட்டான். அதாவது பல மனைவியரில் அவளையும் ஒருத்தியாக தன் அந்தப்புரத்து சுந்தரியாகக் கொண்டான்.
சரி… இதில் என்ன ராஜ ரகசியம்… இதுதான் அரச குலங்களிலே நடக்கும் அன்றாடச் செயலாயிற்றே? என நீங்கள் கேட்கலாம்.
ரகசியம் இனிமேல் தான் இருக்கிறது. சைரஸின் அப்பா மிடீயா நாட்டு மன்னனின் ஒரு மகளை கட்டிக் கொண்டானா? இதைத் தொடர்ந்து “Ctesias of Cnidus” என்ற கிரேக்க வரலாற்றாளன் எழுதுகிறார். “மிடீயா நாட்டு மன்னனின் இன்னொரு மகளை சைரஸ் கல்யாணம் பண்ணிக் கொண்டான்”
என்னடா இது? ஒரு மகளை அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டான். இன்னொரு பெண்ணை பையன் கல்யாணம் பண்ணிக் கொள்கிறான். அதுவும் அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்ட பின்! அப்படியென்றால் சைரஸ் தன் சித்தியையே கல்யாணம் செய்து கொண்டிருக்கிறான்.
அதனால் மிடீயா ராஜாங்கத்துக்கு சைரஸ் சொந்தக்காரனாகி விட்டான். அதனால் தன் மாமனாரின் இன்னும் சொல்லப் போனால்… தன் தாத்தாவின் மிடீயா நாட்டு ராஜாங்கத்தையும், பெர்ஸியன் ராஜாங்கத்தையும் இரட்டை குடியாட்சி செய்தான் சைரஸ்.
இந்த சைரஸ்தான் பாபிலோனியா மீது ஆசைப்பட்டவன். ஆனால்…? பாபிலோனியப் படையை சமாளிக்க சைரஸ்க்கு இன்னும் கொஞ்சம் தேவை ராணுவம். அதற்காக என்ன செய்தான்? யாரை கேட்டான்… அடுத்து சொல்கிறேன். — அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி – 94. என்ன பார்த்தோம்? பாரசீக மன்னன் சைரஸ் பாபிலோனியா மீது மண்ணாசை கொண்டதை பார்த்தோம்.
பாபிலோனியாவை வீழ்த்த ‘இந்த படை போதாது. இன்னும் கொஞ்சம் வேண்டும்’ என்ற நிலையில்… அவனுக்கு சிலர் அறிவுரைகள் வழங்கினர். கொஞ்ச தூரம் தள்ளிச் செல்…
அங்கே The king of Sindhu Desh இருக்கிறான். அவனிடம் நீ உதவி கேள். கண்டிப்பாக கொடுப்பான் என்றனர். சைரசோ… அவனது ஆட்களோ சிந்து தேசத்தை அடைந்தனர். சிந்து தேசம் என்றால்… இன்றைய சிந்து நதியின் கரைப் பகுதியை உள்ளடக்கிய பிரம்மாண்ட தேசம்.
சிந்து… இன்றைய திபெத்தில் உள்ள மானசரோவரில் பிறந்து… ஓடி… ஓடி… ஓடி… பாகிஸ்தானின் கராச்சியில் கடலில் போய் கலக்கிறது. சிந்து நதியின் கரைகளிலும், கரைப் பகுதியைச் சுற்றிலும் சிந்து தேசம் வியாபித்து இருந்திருக்கக் கூடும். வலிமையான ராஜாங்கம் செய்து வந்த அந்த சிந்து தேசத்திடம் தான் சைரஸ், படை உதவிக்காக அணுகுகிறான்.
வரலாற்றாசிரியர் Arrian தன் குறிப்பில்… சைரஸ் சிந்து பகுதிக்கு வந்திருக்கிறான். ஆனால்…. அதை அவன் படையெடுத்து வென்றதாக கல்வெட்டுகளோ, ஆதாரங்களோ இல்லை என்று சொல்லியிருக்கிறார்.
சிந்து நதியின் ராஜாங்கத்தைப் போலவே சிந்து தேச ராஜாவும், சைரஸுக்காக தசை பலம் பொருந்திய யானைப் படை, குதிரைப்படையை கொடுத்தான். இந்தப் படையின் உதவி மூலம் தான் பாபிலோனியாவை சைரஸ் ஜெயித்துக் கைப்பற்றினான்.
இது…. வரலாற்றறிஞர் டால்மீயின் குறிப்புகளில் உள்ளது. திருவல்லிக்கேணியில் உள்ள (பி.டி. பாணி என நினைக்கிறேன்) ஒரு பப்ளிஷர்ஸ் வெளியிட்ட Age of Shankara என்ற புத்தகத்தில் டால்மீயின் மேற்கோள் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.
சரி… சிந்து தேச ராஜா, சைரஸுக்கு உதவிவிட்டுப் போகட்டும் என்கிறீர்களா?
இப்போதுதான் நமது விஷயத்துக்கு வருகிறோம். ஹிந்து என்ற பெயர் எப்படி வந்தது என கேட்டிருந்தேன் இல்லையா? இப்போது கேளுங்கள். இந்த சைரஸ்… சிந்து தேச ராஜா நட்பின் மூலம் சிற்சில வார்த்தைகளாவது பரிமாறப்பட்டிருக்காதா?
ஏனென்றால்… உலக ஃபிலாலஜி, அதாவது மொழியியல் வல்லுநர்களின் முடிவுப்படி… சமஸ்கிருத பாஷைக்கும், பாரசீக பாஷைக்கும் இடையிலான சில ஒற்றுமை வேற்றுமைகள் உள்ளன.
அதாவது இங்கே க்ஷ என்பதை அவர்கள் ‘ஹ’ என உச்சரித்தார்கள். அதாவது சரஸ்வதியை ஹரக்வதி என்றார்கள். நாம் ‘அசுரஹா’ என்று சொல்வதைப்போல அவர்கள்… அஹீரமஸ்தா என்ற கடவுளை வணங்கினார்கள்.
அந்த வகையில்தான் சிந்து தேசம் என்பதை ஹிந்து தேசம் என உச்சரித்தார்கள். தப்பாக உச்சரித்தார்கள் பாரசீகர்கள்.
ஆனால்… நமது புஸ்தகங்களில் வேதங்களில் ஆயிரம் இடங்களில் ‘சிந்து’ என்ற வார்த்தைதான் உள்ளதே தவிர… ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது.
சரி… சிந்து என்ற வார்த்தை எப்படி பயன்படுத்தப்பட்டது?
‘சிந்தோஹா… அபர பாதே ஆசன்ன…” இந்த வரியைத் தொடர்ந்து வரும் வேத வாக்கியங்கள் ஒரு நதியைப்போல சலசலவென ஓடுகின்றன.
இவற்றுக்கு என்ன அர்த்தம்? சிந்து நதி இப்போதுள்ள அகலத்தைவிட பல மடங்கு அதிகமான அகலத்துடன் ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கிறது. அலைகள் அழகழகாய் அசைந்து கொண்டிருக்கின்றன.
அந்த ஜீவ நதியாம் சிந்துவிலே ஒரு தோணியிலே சிலர் ஏறி அக்கரையிலிருந்து இக்கரை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் இந்த வேதவரியின் விளக்கம்.
இந்த சிந்து நதிக்கரையிலே தான் வாதம் வருத்த பல்வேறு கர்மாக்கள். அதாவது அங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் பிள்ளைகளை ஆச்சார்யர்களிடம் படிக்க அனுப்பினார்கள். இதை உபநயனம் என்றார்கள். அதாவது… பள்ளிக்கு அனுப்புவதை இப்போது பூணூல் போட பயன்படுத்தி வருகிறார்கள்.
அடுத்து, கல்யாணம் பண்ணுவது, குழந்தை பிறப்பது, குழந்தைக்குப் பேர் வைப்பது, குழந்தைக்கு சோறூட்டுவது என்றெல்லாம் மக்கள் அன்றாடம் செய்யும் காரியங்களை மந்திரப்படுத்தினார்கள்.
இதன்படி… வேதத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கர்மாக்கள் மட்டுமன்றி, அதாவது பூர்வ பிரயோகம், அபர பிரயோகம்.
அதாவது… இருக்கும் வரை செய்யும் கர்மா மற்றும் இறந்தபின் செய்யும் கர்மா போன்றவற்றை… ஆபஸ்தம்பர் என்ற ரிஷி விளக்கியுள்ளார். இதற்கு ஆபஸ்தம்ப சூத்ரம் என்று பெயர். “நதேவாஹா நகந்தர்வாஹாநபிதஇதீ ஆஜக்ஷதே அயந்தர்மோ ஆயந்தர்மேதீயந்தா ஆர்யா க்ருமாணம் சம்சந்தி நதர்மஹா”- அதாவது மக்கள் செய்யவேண்டிய இந்த மந்த்ர கர்மாக்களுக்கு தேஸாச்சாரம் என்று பெயர்.
இந்த ஆச்சாரத்தை ஆர்ய மதம் என்று அழைக்க வேண்டும் என்கிறார் ஆபஸ்தம்பர்.
அதாவது சிந்து நதிக்கரை மக்களின் பழக்கத்துக்கு சிந்து மதம் என்று கூட அவர் பெயர் வைக்கவில்லை. ஆர்ய மதம் என்று தான் பெயர் வைத்தார்.
அப்படியென்றால்… சிந்து நதிக்கரையிலிருந்து நாலாயிரம் மைல்கள் கடந்து வாழும் நம்மூர் பையனின் பள்ளி சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே… ஏன்? – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
பகுதி – 95. ஸிந்துவைப் பற்றியும் ஸ என்ற எழுத்து, உச்சரிப்பு ஹ என்று மருவி மாறியதைப் பற்றியும் பார்த்தோம். அதாவது ஸி என்பது ஹி என்று ஆனதைப் பார்த்தோம்.
ஹிந்து தேசம் என்று பாரசீகன் சொன்னானே தவிர… அந்த தேசத்தை வேதக்காரன் பாரதம் என்றுதான் அழைத்தான்.
ரிக் வேதத்தில் விஸ்வாமித்ரர் என்ற பிரபலமான முனிவர் பெயர் அடங்கிய ஒரு மந்த்ரம் எழுந்து வருகிறது பாருங்கள்.
“விஸ்வாமித்ரஸ்ய ரக்ஷதீப்ரம்மே இதம்பாரதஞ்ஜனம்…”…
இதற்கு என்ன அர்த்தம்? விஸ்வாமித்ரர் சொல்கிறார்.. .“என்னுடைய ஞான தேஜஸ்-ஸினால்… நான் கற்ற சாஸ்திரங்களின் பலனால்…. நான் உபதேஸிக்கும் மந்த்ரங்கள் இந்த பாரத தேசத்தின் ஜனங்களை யெல்லாம் வாழவைக்கும்… பாதுகாக்கும்…” என்று வீரமாக, நம்பிக்கையாக சொல்கிறார் விஸ்வாமித்ரர்.
‘என்னுடைய மந்த்ரம், இந்த ஹிந்து தேசத்தை பாதுகாக்கும்’ என்று விஸ்வாமித்ரர் சொல்லவில்லை என்னுடைய மந்த்ரங்கள் ஸிந்து தேசத்தை பாதுகாக்கும்; என்று சொல்லவில்லை, பாரத தேசம் என்றுதான் அழைத்திருக்கிறார்.
அடுத்ததாக…நான் முன்பு மேற்கோள் காட்டியிருந்தேனே… ‘சிந்தோ அபராபாதே ஆஸன்ன…’ என்று ஞாபகம் இருக்கிறதா?
அதற்கு முன்னே ‘பாரதாஸி ஏனா…’ என்றொரு சொற்றொடர் வருகிறது. அதாவது பாரத தேசத்தவர்கள் சிந்து நதியைக் கடக்கிறார்கள்… என்ற வகையிலே தான் இதற்கு அர்த்தம். சிந்து நதியின் பெயர் குறிப்பிடப்படும் இடத்தில் கூட பாரதம் என்றுதான் இந்த தேஸத்தை வேதக்காரன் விளித்திருக்கிறான்.
இதேபோல் இன்னொரு உதாரணம் பாருங்கள். ப்ராமணர்களிடம் ஒரு பழக்கம் இருக்கிறது. அதாவது சங்கல்பம். சங்கல்பம் என்றால்… ஒவ்வொரு கர்மாக்கள் செய்யும் போதும் ‘இதை இந்த கர்மாவை சிறப்பாக, சிரத்தையுடன் பூர்த்தி செய்வேன்’ என்ற சபதம் எடுத்துக் கொள்ளும் மந்த்ரம்தான் இது. சங்கல்பம் என்றால் உறுதியான எண்ணம் அதாவது சபதம்.
சரி… அந்த சங்கல்பம் என்ன? “விஷ்ணோ…ஆக்ஞாய…… …… …பாரத வர்ஷே பரத கண்டே சகாப்ஹே…” இந்த சங்கல்ப மந்த்ரத்தில் அந்த இடையில் வரும் வரிக்காகத் தான் இதைச் சொன்னேன்.
பாரத வர்ஷே என்றால்…பாரத தேஸத்தில் வாழும் என்று அர்த்தம். பரத கண்டே…. என்றால்… பரதன் ஆண்ட தேசம் என்றும் வைத்துக் கொள்ளலாம்.
விஷ்ணு புராணம், பாகவதம் போன்ற பழம்பெரும் பக்தி இலக்கியங்களில் இந்த ‘சங்கல்பம்’ பிரகாசிக்கிறது. அதாவது… இதை பாரத தேசம் என்று தான் அப்போதும் சொல்லி யிருக்கிறார்கள். அதாவது சிந்து சேதம் என்று கூட அவர்கள் தங்களை அழைத்துக் கொள்ளவில்லை.
பிறகு… ‘ஹிந்து…’ என்ற பெயர் வந்தது எப்படி? நான் மேலே சொன்ன விஷயங்களெல்லாம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு! இப்போது சொல்லப்போவது சிற்சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு.
ஆமாம்… எண்ணி சுமார் நானூறு வருடங்களுக்கு முன்னால் தான் அய்ரோப்பியர், அதாவது வெள்ளைக்காரர்கள் நமது தேசத்தில் அடியெடுத்து வைத்தனர். அப்போது நமது தேஸத்தில் ஆங்காங்கே மொகலாய சாம்ராஜ்யம் ராஜாங்கம் செய்து கொண்டிருந்தது. அதாவது முகம்மதிய சுல்தான்கள் ஆட்சி செய்து வந்தனர். அப்போது வெறும் வியாபார நோக்கத்தில் இங்கே வந்தார்கள் வெள்ளைக்காரர்கள்.
அப்போது நமது பூமியில் எல்லா வளங்களும் கொழித்துக் கிடந்தன. ஆனால் ‘ஒற்றுமை’ என்னும் வளம் மட்டும் வறண்டு கிடந்தது. அதாவது… மொகலாயர்களுக்கு அடிமைப்பட்டுக் கிடந்தவர்கள்… தங்களுக்குள்ளும் அடித்துக் கொண்டனர். சிற்றரசர்கள் என்ற ரீதியில் ராஜாக்கள் ஒருத்தரை ஒருத்தர் அடித்துக் கொண்டனர்.
மக்களோ… ப்ராம்மண, சூத்ர, பஞ்சமர் பிளவுகளில் ஈடுபாட்டோடு இருந்தனர்.
பார்த்தான் வெள்ளைக்காரன், ‘என்னடா இது?’ என கேட்டான். ‘இதுதான் எங்கள் ஜாதி தத்வம்; இதை கேட்க நீ யார்?’ என குரல் எழுந்தது.
சரி… இவர்களிடையே இவ்வளவு பிளவுகள் இருக்கிறது. இந்த தேஸத்தில் இவ்வளவு வளங்கள் இருக்கிறது… என யோசித்த வெள்ளைக்காரன் தன் குடும்பம், குட்டிகளோடு இங்கே வந்தான். அங்கிருந்து பாதிரிகளும் இங்கே வந்தனர்.
நமது தேஸத்தில் புரையோடிப் போயிருந்த ‘ஜாதிதத்வ’ நடைமுறை…
அதாவது ‘ப்ராம்மணனே தெய்வம்’ நசூத்ரா மதிந்தத்யாது… (சூத்திரனை அடி உதை. அவனுக்கு எந்த உபதேசமும் கிடையாது) என்ற நிலைமைகளைப் பார்த்து…
ஒரு அணா, ரெண்டு அணாவுக்கு புஸ்தகங்களைப் போட்டான். அவற்றை சூத்ரர்களிடையே விநியோகித்தான். உங்கள் நிலைமை எப்படியிருக்கிறது பாருங்கள்… என அந்த புஸ்தகங்களைக் காட்டினான். ‘Don’t follow, religion of brhamin, we give you alternative’ என்பதுதான் அவர்களின் முழக்கமாக இருந்தது.
இப்படியாக சில பல வருடங்கள் ஓடிக் கொண்டிருக்க… இந்த ஒட்டுமொத்த மக்களை எப்படி அழைப்பது? என யோசித்தான் வெள்ளைக்காரன்.
அப்போதுதான் இவர்கள் சிந்துநதிக்கரை மக்கள், அப்படி யென்றால் இவர்களை ‘சிந்தூ’ எனக் கூப்பிடுவோம் என முடிவுக்கு வந்தான். அதாவது… பிரிட்டிஷ் டாக்குமெண்ட்களில் நம்மை அவன் முதன் முதலில் எப்படிக் குறிப்பிட்டான் என்றால் ‘Zindoo…’ – அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
பகுதி – 96 . நமது மதத்துக்குப் பெயராக வேதக்காரர் சொன்னது முதல் வெள்ளைக்காரன் சொல்ல வந்தது வரை பார்த்தோம். சிந்து நதிக்கரைக்காரன் என்ற அடிப்படையிலேதான் நம்மை Zindoo என எழுதினான் வெள்ளைக்காரன். இது உமக்கு எப்படித் தெரியும் என்று நீர் கேட்கலாம்.
நான் அந்த பிரிட்டிஷ் டாக்குமென்ட்டை பார்த்திருக்கிறேன், படித்திருக்கிறேன். கும்பகோணத்தில் காவிரிக்கரையோரத்தில் எல்லாம் விளையும். அங்கே காவிரியின் மடியில் அறிவு விளையும், ஞானம் விளையும் ஓர் இடம் இருந்தது. அதுதான் என் ஆசான் ரகுநாதராவ் என்பவருக்குச் சொந்தமான Library.
ரகுநாதராவ், என்னை விட வயதில் மூத்தவர். அந்தக் காலத்தில் பரோடா சமஸ்தானத்தில் திவானாக இருந்தவர். அவர் பதவிக் காலத்தில் பிரிட்டிஷ் ராஜாங்கத்தோடு தொடர்பு கொண்டிருந்தவர். அந்த ரகுநாதராவ் திவான் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன்…
கும்பகோணத்தில் காவிரிக் கரையோரத்தில் ஒரு லைப்ரரியை ஆரம்பித்தார். அங்கே தான் பிரிட்டிஷாரின் டாக்குமென்ட்களையும் பார்த்தேன். முதலில் நம்மைப்பற்றி Zindoo என்று எழுதி வைத்திருந்தவன், காலப் போக்கில் இந்த உச்சரிப்பை மாற்றி Hindu என்று உச்சரித்தான்.
அவன் உச்சரித்ததையெல்லாம் படிப்படியாக அவனது டாக்குமென்ட்களில் பதிவும் செய்து வைத்தான்.
இப்போது Zindoo என்பது Hindu ஆகிவிட்டது.
ஆக… இப்போது நாம் நம்மை அழைத்துக் கொள்ளும் நமது மதத்தின் பெயரான ‘ஹிந்து’ என்ற பெயர் நாம் சூட்டிக் கொண்டதல்ல. நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் சொல்லப்போனால்… இது Christian சூட்டிய பெயர்
நம்மையெல்லாம் என்ன சொல்லி அழைப்பது என்று தெரியாமல் வெள்ளைக்கார Christian கண்டுபிடித்த… கண்டுகூட பிடிக்கவில்லை.
தன் வாய்க்கு வசதியாக வந்ததை உச்சரித்ததைத் தான் நாம் இன்று நமக்கான அடையாளமாக சுமந்து கொண்டிருக்கிறோம்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய வேதம், மநு, ஸ்மிருதி, சாஸ்திரம், புராணம், சுண்டைக்காய்… எல்லாவற்றையும் பின்பற்றுவதாக சொல்லிக் கொண்டு நாம் அவற்றிலிருந்து ஒரு பொதுப் பெயரை எடுத்து சூட்டிக் கொள்ளவில்லை. சூட்டிக் கொள்ள முடியாது.
ஏனென்றால்…நம் தேசத்தில் எக்கச்சக்க மதங்கள். நான் சொன்னேனே…. ஆரியர்களான பிராமணர்கள் இங்கு வரும்போதே! நம் தேசத்தில் சுமார் 450 மதங்கள் இருந்தன. இதில் எது ஹிந்து மதம் என்று கேட்டிருந்தேன் அல்லவா?
இப்போது நீங்களே சொல்லுங்கள்.
எது ஹிந்து மதம்…? வேத மதம், ஆரிய மதம், ப்ராமண மதம் இங்கே வந்தது. அதை எதிர்த்து புத்த மதம் உண்டானது. மத்வ மதம் பிறந்தது. த்வைதம் கிளைத்தது. விசிஷ்டாத்வைதம் வளர்ந்தது. சைவம், வைஷ்ணவம் பெரிதாகப் பேசப்பட்டது. இடையிலே சமணம் தோன்றியது.
வைணவத்தில் கூட தென் கலை, வடகலை, என கோர்ட் வரை கூட பிளவு படியேறியது.
இவையெல்லாம் தவிர்த்து… நம் தேசத்தின் அகண்ட நிலப்பரப்பில் ஆங்காங்கே சிறுதெய்வ வழிபாடுகள் எக்கச்சக்கம், காளியம்மன், மாரியம்மன், துர்க்கையம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பசாமி, தூண்டிக்காரன் சாமி என.. சொல்லிக் கொண்டே போகலாம்.
அதாவது இவ்வளவு… வழிபாடுகளையும் பார்த்து திக்குமுக்காடிய வெள்ளைக்காரன் தான் எல்லாவற்றுக்கும் மொத்தமாகச் சேர்த்து இந்த தேசத்தில் வாழ்பவர்களை யெல்லாம் மொத்தமாக ‘இந்து’ என்று அழைத்தான்.
நம் வீட்டில் ஒரு குழந்தை பிறக்கிறது. என்ன செய்வோம்? பையனாக இருந்தால் தாத்தா பேர் வைப்போம். பெண்ணாக இருந்தால் பாட்டி பேர் வைப்போம். அல்லது குல தெய்வத்தின் பேரை சூட்டுவோம்.
ஆனால்… நமக்கு முன்பின் தெரியாத இதுவரை நம்மைப்பற்றி எதுவுமே அறியாத… எவனோ ஒருத்தன்… நம் பாஷையும் தெரியாத அவன் தன் வாயில் நுழையும் பெயரை வைத்துக் கூப்பிட்டதால்…. அந்த ‘சத்தத்தையே’ உங்கள் குழந்தைக்குப் பெயராக வைப்பீர்களா?… அப்படித்தான் வைத்திருக்கிறோம்.
நம் மதம் என்னும் குழந்தைக்கு! சரி… ‘ஹிந்து’ என்ற சொல்லின் வரலாற்றைப் பார்த்துவிட்டோம்.
இதுதான் உங்கள் பள்ளி சர்டிபிகேட்களிலும்…. வாழ்க்கையிலும் உங்களைப்பற்றி நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்ளும் ‘ஹிந்து’ என்ற பெயரின் வரலாறு.
வெள்ளைக்காரன் நமக்குக் கொடுத்த இந்த அடையாளத்தை அப்படியே நாம் பின்பற்றி வருகிறோம்.
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
சாந்தி சொல்வது சிந்திக்க வேண்டியது அவசியம்
ஆசாமி நீ என்ன கருத்து கந்தசாமியா?
ஐயா விகடன் ..அப்படியென்றால் அன்வர் கோவிலில் மணி அடிக்ககூடாது
என்று சொன்னாரே, அந்த உத்தமரை என்ன சொல்லலாம்.
ஜெயா, தலை சுத்துதுடா சாமீ!
ஜெயா அவர்களுக்கு, அதிக சிரமம் எடுத்து ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்களின் ‘அக்னி ஹோத்ரம்’ என்ற நூலின் தொகுப்பினை இங்கே பதிவு செய்தமைக்கு நன்றி. தமிழர்களே இன்று நாம் ஏமாளித்தனமாக “ஹிந்து” என்ற வார்த்தையில் என்ன இருக்கின்றது என்று சற்றும் அறியாத பாலகனாக வாழ்கின்றோம். நமக்குரிய சமயம் ஹிந்து என்று பிராமணனால் போதிக்கப்பட்டு அதை அப்படியே விழுங்கி வாந்தி எடுத்தோமே தவிர உண்மையை அறிந்தவர் எவரும் தமிழருக்கு உரிய சமயம் ஹிந்து அல்ல என்பதை உணர்த்த முன் வரவில்லை. என்னே தமிழரின் அறியாமை. இன்று தமிழர் “இந்து” என்ற அடைமொழிக்குள் இருந்து பிரிந்து செல்ல நேரம் வந்து விட்டது என்பதினை உணர்ந்த அறிவுடைய பிராமணர் மீண்டும் நம்மை அவர்கள் கட்டுக்குள் வைக்க, புதியதோர் முறையில் பொருளாதாரம், கல்வி, மனித உரிமை என்ற கவசத்தில் நம் மூளையை சலவை செய்கின்றனர். இதைத்தான் ‘புதிய பானைக்குள் பழைய கஞ்சி” என்றேன். வாழ்வாங்கு வாழ்ந்த தமிழனுக்கு உரிய சமயம் “சைவ சமயம்” என்ற உண்மையை அறிந்து அதன் வழி பரம்பொருள் என்ற ஒரு கடவுள் வழிபாட்டில் நிற்கும் தமிழனே உலகை வெற்றிக் கொள்ளும் எதிர்கால தமிழனாக வாழ்வான். வாழ்க தமிழர் மக்கள்.
இப்படியே மாநாடு நடத்தி நடத்தி ,பேசி பேசி ,காலத்தையும் நேரத்தையும் வீனாக்குங்க்க .செயப்பாட்டில் எதுவுமே நடந்ததாக சரித்திரம் இல்லை .தமிழர்களுக்கு ஒரு விடிவு காலமும் வந்ததில்லை ,போங்கடா போங்க போயி வேற வேலை இருந்தா பாருங்க .
தோடா பச்சி சொல்லிருச்சி..
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் கீழ் இயங்கும் உலக இந்து காங்கிரஸ் நடத்தும் மாநாடா இது?. கோவிந்தா!, கோவிந்தா!. RSS பின்னால இருந்து வேலை செய்யுமே?. சாமர்த்தியமான இந்து பரி ‘நாம’ வளர்ச்சி!.
ஜாதி பார்க்காமல் இருந்தாலே போதும், எவரும் இந்து மதத்தை விட்டு போக மாட்டார்கள். பல கடவுள் கோட்பாடு மிருக கடவுள் வேற ( பைரவர்) தொட்டது கெல்லாம் பரிகாரம்,கற்பனை வரலாறுகள் இன்னும் பல காரணங்கள் தான் பல பேர் இந்து மதத்தை துறக்க காரணங்கள்.
தமிழரின் சைவத்தில் சாதியத்திற்கு இடமில்லை. நமது சமயம் உயிர்களைத்தான் குறித்துப் பேசுகின்றதே ஒழிய உடலை அல்ல. இது காலபோக்கில் சாதியத்தை ஒழிக்கும். சைவத்தில் பரம்பொருள் ஒன்றே உணர்த்தப் படுகின்றது. தமிழரின் சமய நெறி அறிந்தால் இங்கே சிறு தெய்வ வழிபாட்டிற்கு இடமில்லை. பரிகாரம் வைதீகப் பண்பாடு. அதற்கு சைவத்தில் இடமில்லை. சித்தாந்தத்திர்க்குப் புறம்பான புராணத்திற்கு சைவத்தில் இடமில்லை. அப்புறம் ஏன் பிற மதங்களுக்குப் போவானேன். தமிழர் சமயத்தின் உண்மையை அறியுங்கள் தோழரே. தமிழர் சமயத்திற்குத் திரும்புங்கள்.
நன்றி தேனி அவர்களே ! எமது ஆசை, ஒவ்வொரு இனத்தவரும் தமது சுய இன அடையாளத்துடன் இருக்க வேண்டும் .அதை விடுத்து வந்தேறி பார்ப்பனின் சதியில் சிக்கி அவன் விரித்த ஹிந்து என்ற மத வலையில் சிக்கி அவனுக்கு அடிமை ஆவதை விட சாவதே மேல்! தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! ஹிந்து என்று சொல்லாதே இழிவை தேடி கொள்ளாதே !
தங்களை ஹிந்து என்று அறிமுகபடுத்தி பெருமை பட்டுக்கொள்ளும் ஒவொருவரும் கண்டிப்பாக படித்து , பார்பனர்கள் எந்த அளவிற்கு உங்கள் முளையை மழுங்க செய்திருக்கிறார்கள் என்பதை விளங்க இந்த பக்கத்திற்கு செல்லவும் http://thathachariyar.blogspot.com/
அனைவரும் தங்கள் சுய அடையாளத்தோடு வாழ்வதே சிறப்பு தமிழர்கள் தமிழர் என்று சொல்லிகொள்வது போல மலையாளிகளும் தெலுங்கர்கள் தங்களை தமிழர்கள் என்று சொல்லிகொள்ள முடியாது , அவர்கள் தாய் மொழியும் வேறு அப்போ அவர்கள் ஹிந்து என்று சொல்லிக்கொள்ளலாமா ?
தெலுங்கு வம்சாவளி மக்களும், மலையாள வம்சாவளி மக்களும் தங்களுக்கென்று தனி சமயத்தைக் கண்டவர்கள் இல்லை. அதனால் அவர்கள் வைதீகத்தையோ, சைவத்தையோ அதனதன் பொருள் உணர்ந்து ஏற்றுக் கொள்ளலாம். தவறில்லை. ஏதாவது ஒன்றில் நில்லுங்கள். நாமெல்லாம் உருப்படுவோம்.
ஜெயா அவர்கள் எழுதியதை நான் ஏற்கனவே படித்து தெளிவு
பெற்று இருக்கிறேன். எனது முதல் குழந்தை 1990-ல் பிறந்தது.
பிறந்த சான்றிதல் எழுதும்போது ugama என்ற இடத்தில வெறும்
கோடு போட்டேன்,அப்போது அந்த தாதியர் கேட்டார்,நான் ஹிந்து
அல்ல என்றேன். இன்று வரை அப்படிதான் இருக்கிறது. தென்னை
மரத்தில் பாதி ஏறி,கையை விட்டு பாருங்கள்,யார் யாரை பிடித்து
கொண்டிருந்தார்கள் என்று தெரியும்,மதமும் அப்படிதான்.
ஆசாமி சொன்னது சிந்திக்கத் தக்கது. தென்னை மரம், மரமேறியை பிடித்துக் கொண்டு இருக்கின்றதா அல்ல மரமேறி, தென்னை மரத்தை பிடித்துக் கொண்டு இருக்கின்றான?. இந்து, தமிழரைப் பிடித்துக் கொண்டிருக்கின்றதா அல்ல தமிழர், இந்துவைப் பிடித்துக் கொண்டு இருக்கின்றனரா?. இந்து என்ற தென்னை மரத்தில் பாதி ஏறி கையை விட்டால் பரிதாபமாக கீழே விழந்து விடுவோம் என்று பயப்பட வேண்டாம். பக்கத்திலேயே சைவத் தாய் அன்புடன் காத்துக் கொண்டிருகின்றாள் தமிழருக்கு கை கொடுத்து காப்பாற்றிட. தாவி அந்த அன்பு சைவத் தாயை கட்டிப் பிடித்துக் கொண்டால் தமிழர்கள் கீழே விழ மாட்டோம். மேலே ஏற அந்த சைவத் தாய் நமக்கு ஞானப்பால் ஊட்டுவாள்.
மாற்றாந் தாய்யைக் கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தமிட, அவள் உம்மை சண்டாளனே என்று தூற்றினால். தவறு கட்டிப் பிடித்தவனிடமா? அல்ல அன்பில்லாத அந்த மாற்றாந்தாயிடமா?. அன்புடைய உமது தமிழ்த் தாய் காத்துக் கொண்டிருக்கின்றாள் தன் அன்பு மகனை அரவணைத்துக் கொள்ள. அன்பை நாடுவோர் சைவத்தை நாடுங்கள்.
இந்து என்ற சொல்லை சிந்து என்று மாற்றினால் மட்டும் இந்து மதத்தை மட்டும் விமர்சிக்கும் யாவரும் ஒரே நேர் கோட்டில் பயணிப்பார்களா ? அப்போதும் பழைய குப்பைகளை இந்த மூடர்கள் கிளறி கொண்டே தான் இருபபர்..முதலில் மதத்தை நேசிக்க பழகுங்கள்..பிறகு சைவம் – வைணவம் பற்றி பேசலாம்…
மலேசிய இந்துக்கள் பிரச்சனையை திரு குலசேகரன் அவர்கள் ஒளிவு ,மறைவின்றி நியாயமாக வாதத்தை முன்னெடுப்பார் அதில் சந்தேகமே இல்லை! ஆனால், மாநாட்டில் முன்னால் மா இ கா தலைவர் எந்த உண்மையை பேசப்போகிறார் ? இவர், பதவிக்கலதிலிருந்து இன்றுவரை இந்தியர்களின் பிரச்சனை தீர்ந்தப்படில்லை? அம்னோவிற்கு வெண்சாமரம் வீசும் இவர்களை விட்டால் வேறு ஆளே இல்லையா ?
https://www.facebook.com/photo.php?fbid=608421915936395&set=a.105604959551429.11478.100003057758433&type=1
இது போன்ற மாநாடுகளில் உண்மையை தெளிவை பேசும் அறிவு யாருக்கும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை . மதத்தை பற்றியோ இல்லை தாய் மொழி பள்ளியை பற்றியோ நாம் இன்னும் குண்டுசட்டியில் தான் உள்ளோம் . நம்மை சுற்றி உள்ள உண்மையான பிரச்சனை பற்றி பேச அஸ்ட்ரோ வுக்கும் தைரியம் கிடையாது என்ன நடக்குது என்று நாம் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டுவதும் கிடையாது . நான் சொல்வது தான் சரி . எனக்கு தெரிந்த விசயம் மட்டுமே உண்மை என்ற அகந்தையில் உள்ளோம் . அதனால் வரும் குளறுபடிகள் ஏராளம்
சாந்தி அம்மா அன்வார் மணி அடிக்காதே என்று சொன்னால் சாமிவேலு கோயில் உடைத்தார், இதில் எது உங்களுக்கு நியாயம் படுகிறதோ அதையே எடுத்துகொள்ளுங்கள் .
பிரச்சனை இந்துவுக்கும் சிந்துவுக்கும் இல்லை. இந்து என்பது இந்திய நாட்டின் பெயர் என்று அறியாமல் அதுதான் மதம் என்று மதமேறிய அலமந்து போல் தமிழர்களை அலைகழிக்க வேண்டாம் என்றால் ஏன் பிடிவாதமாக தமிழர்களை வற்புறுத்துகின்ரீர்?. அறிந்ததை அறியாதவர்களுக்கு எடுத்துச் சொல்லவே இந்த செம்பருத்தி குழுமத்தில் கூடியுள்ளோம். கருத்து வேற்றுமையை செம்பருத்தி ஆசிரியர் தடுப்பதில்லை. எது தமிழருடைய சமயமோ அதை தமிழரிடம் இருந்து சாதூரியமாக மறைத்து வைதீக பண்பாட்டில் நுழைத்தது சரி என்றால் இப்பொழுது அதனை உணர்ந்து தமிழன் வெளியேறுவதும் சரியாகத்தான் இருக்கும். ஆதலால் இங்கே சைவ வைணவம் என்ற சண்டை இல்லை. தமிழனை தமிழனாக வாழ விடுங்கள் என்பதே எமது வாதம்.
சமயத்தை நேசிக்க அந்த சமயத்தின் நெறியை அறிந்துக் கொள்ள தமிழர்களுக்கு திருமுறைகளும், மெய்கண்ட சாத்திரங்களும் அறநெறிக்கு திருக்குறளும் உள்ளது. இது தமிழர்களுக்கு முறையே தேவையான கடவுள் தத்துவத்தைக் காட்டும், நன்னெறியைக் காட்டும். ஜெர்மெனிய மொழியின் உதவி இல்லாமலேயே தமிழன் தன் சமயத்தை அறிய, தன் வாழ்க்கை அறத்தைப் பேண போதுமான வழிகாட்டல் தமிழனிடம் உள்ளது. இதை அறியாமல், இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி தமிழன் ஏன் எங்கெங்கோ அலைய வேண்டும் என்று வேண்டுகிண்றீர்கள். அறிவிப்பீர்களா?.
நான் சைவ சமயத்தை ஏற்று கொள்பவன்,வைணவம் தமிழனிடம்
ஒட்டி கொண்டது,புரியாமல் உளறுகிறார் inthudarman . சைவ
சமயத்தை பின் பற்றுபவர்கள் ஒருகாலும் மற்ற மதத்துக்கு போக
மாட்டார்கள், மனைவி பிள்ளைகளை தவிக்க விட்டு மதம் மாறி போனவர்கள்தான் இன்று நாம் எதிர் நோக்கும் பிரச்சனைகள்.
மற்ற மதத்தவர்கள் வெகு சுலபமாக ஏமாற்றி விடுகிறார்கள்,
வைணவம் அவ்வளவு விளக்கெண்ணெய், எந்த மதகாரனும்
என்னை இழுக்கவே முடியாது ,சைவ சமயத்தை உணர்ந்தவன்.
ஆசாமி நல்லா இரட்டை வேடம் podukkurai
கும்கி அவர்களே நான் ரெட்டை வேடம் எப்படி போடுகிறேன் என்று
ஒரு எடுத்து காட்டு கூறவும்.
ஆசாமி அவர்களே இதுவரை நீங்கள் எழுதியதை திரும்பி படிக்கவும். அப்போது தங்களுக்கே தெரியும் உங்களது ரெட்டை வேடம்.
இவனுங்களுக்கு வேர வேலை இல்லை ,எதற்கு எடுத்தாலும்
மாநாடு எதை சாதித்தார் ,சும்மா கூட்டத்தை கூடி பேசிவிட்டு
அறிமுகம் செய்துக்கொள்ளவா மாநாடு ,அனைத்துலக இந்து
மாநாடு , இந்து என்றால் வேசியின் மக்கள் என்று கூறுவதால்
அந்த மாநாட்டில் எப்படி நாம் இந்துவாக வாழ்ந்தோம் என்று
பேச போகிறார்களா . அதிர்க்கு மலேசியா வில் இருந்து நம்பர் ஒன ஒன் தமிழர்களின் துரோகி கலந்துக் கொள்கிறார்களா ,ஆமாம் சாமிவேலு பணத்தை அல்லவா கொடுகிறார்,குலா சார் ஒரு காலத்தில் பயந்துகொண்டு மதம் மாறினார்கள் இப்போது விரும்பிதான் அந்த மத பெண்ணை விரும்பிதான் சேருகிறார்கள் , முதலில் மத்தில் உள்ள ஓட்டைகளை
சரிசெய்யுங்கள் அதன் பின் தேவதை வந்தாலும் இவன் மதம் மாறமாட்டான் ,
அப்படியே பேசி கிளிசிடுவனுங்க்கடா நாக்க பொளந்து MK போல கத்திகிட்டிருங்க்கட மட சூனயங்க்கள
சாந்தி என்று பெயர் வைத்துகொண்டு இப்படியா கோபமாக
திட்டுவது ,பேசாம சாந்தி பெயரை மாற்றி marah athi என்று
மாற்றிக் கொள்ளவும் .
என் பெயரில் ..மக்கள் கூட்டனி மக்கை ஒருவன் எழுதுகிறான். ஏன் உனக்கு இந்த பொழப்பு,
இந்த மாதிரி பேடிகளை விடாதிர் சாந்தி !
சாமிவேலு ஒரு நல்ல மனிதர் ,இன்டியாகளுக்கு பெரும் செய்து இருக்கிறார்கள் ,அனால் இவரையும் தப்பாக பேசுகிறது இந்த உலகம் ,நன்றி கேட்ட மனிதர்கள்
jeya (ஜெயா) அவர்களுக்கு மிக்க நன்றி.
சைவ சமயம் மனிதனை மனிதனாக வாழவைக்கும் நெறி, கடவுளின் மொழி!தாய்,தந்தை,குரு,தெய்வம் இயற்கையின் உண்மை ஆதாரங்கள்.
ஒன்றே குலம் ஒருவனே தேவன்…
“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்
நிலவு உலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்து ஆடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்”
சாமி வேலுவை ஒரு நல்ல மனிதர் என்று சொன்ன முதல் ஆள் நீங்கள் தான் mk . நல்லவருக்கும் நாலு பேர் இருப்பார்கள் ,கெட்டவனுக்கும் நாலு பேர் இருப்பார்கள் என்று சொன்னது
உண்மைதான் ,சாமிவேலு கெட்டவன் எத்தனை ஏழை களின் நகைகள் ,பணங்கள் மைக்கா ஹோல்டிங் மூலம் அவன் கொள்ளை அடித்தான் . கண்டிப்பாக அவனுக்கு நீங்கள் துணை போயிருக்கனும் ,ஆமாம் mk என்றால் மக்களை
கொள்ளை அடித்தவன் என்று தானே அர்த்தம் .நைனா
MK சாமீ வேலு உளுக்கன உளுகுல தமிழகைகள் ஐயோ எங்கேயோ போய்ட்டோம் ஏன் என்றால் சாமீ குழுக்கள் அப்படி
tamil biththan சரியாக சொன்னீர்கள் நன்றி ,இன்றுதான் நானும் உங்களை பற்றி தெரிந்து கொண்டேன் ,இந்த பிரபஞ்சகதிலேயே நீங்கள் ஒருவர்தான் உத்தம புத்திரன் என்று ,
ஆமாம் போயும் போயும் படாங் ஜாவா கோவிலுக்கா இந்த நல்ல மனுஷன் சாமிவேலு அவர்களை பதவிலேயே இருந்து தோவி அடைய செஞ்சிங்க ,ஒரு கல்விக்காக போராடுநேங்க்களா ? போருலாதாரதிர்க்காக போராடுநேங்க்களா ? வெறும் …..க்காக ஆட்சியே மாற்ற பார்தேங்க்கள இப்ப எனா ஆச்சி ,ரெண்டும் கேட்டான் பொழப்பா ஆச்சி .எதிகட்சிகாரன் உங்கள நல்லாவே உசுப்பி விட்டு வீதிவரைக்கு பிச்சை எடுக்க 2008 தில் அனுப்பிட்டாணுங்க .கூட இருந்தவனெல்லாம் பதவி ஆசிக்காக ,ஒருத்தன் லண்டனுக்கு போயி சொகுசு வாழ்வு 5 வருசமா வாழ்ந்துட்டான் ,நீங்க எதிகட்சிகாரன் பேச்சை கேட்டு தலையிலே துண்ட போட்டுகிட்டு வீதிலே உக்காந்துகிட்டு இருக்கேங்க ,போதுமா இது
நவம்பர் 20 தேதி ஆரம்பமான இந்த பிரச்னை இன்னுமா முடியல?