ரிஸால்மன் பாலியல் தாக்குதல் நடத்திய குற்றத்தை மறுக்கிறார்

rizalமலேசிய  தூதரகத்தின்  முன்னாள்  இராணுவ  அதிகாரியான முகம்மட்  ரிஸால்மான்  இஸ்மாயில்,   நியு  சிலாந்து  பெண்  ஒருவர்மீது பாலியல் தாக்குதல்  மேற்கொண்டதாக  சாட்டப்பட்ட  இரண்டு  குற்றச்சாட்டுகளையும்  மறுத்து  விசாரணை  கோரியுள்ளார்.

பாலியல்  வல்லுறவு கொள்ளும்  நோக்கத்திலும்  கொள்ளையிடும்  நோக்கத்திலும்  அவர்  அத்தாக்குதலில்  ஈடுப்பட்டாராம்.

இக்குற்றச்சாட்டு  தொடர்பில்  ஏற்கனவே  கைது  செய்யப்பட்டு பின்னர் பிணையில்  விடுவிக்கப்பட்ட  ரிஸால்மான்  இவ்வழக்கை  எதிர்நோக்க  மீண்டும்  நியு சிலாந்துக்கு  அனுப்பப்பட்டார்.

அவர்  மீதான  வழக்கு பிப்ரவரி  19-இல்  விசாரணைக்கு  வரும்  என  நியு  சிலாந்து  ஹெரால்ட்  கூறியுள்ளது.