எதிர்வரும் அம்னோ ஆண்டுக் கூட்டத்தில் சீனப் பள்ளிகள் பற்றிப் பேசப்பட்டு அதன் விளைவாக அவை மூடப்பட்டால் மசீச-வின் “கதையும் முடிந்துபோகும்” என்று டிஏபி எம்பி இங் வெய் ஏய்க் கூறியதால் ஆத்திரமடைந்த மசீச, கிளந்தானில் பாஸ் ஹுடுட்டைக் கொண்டு வந்தால் சீனச் சமூகத்தினர் டிஏபி-க்கு “சங்கு ஊதி விடுவார்கள்” எனப் பதிலடி கொடுத்துள்ளது.
“சீனர்களை பாஸுக்கு வாக்களிக்கச் சொன்னதே டிஏபி-தானே. ‘பாஸுக்குப் போடப்படும் ஒவ்வொரு வாக்கும் டிஏபி-க்குப் போடப்படுவதற்கு இணையாகும்’ என்று கூறியது.
“இப்போது பாஸ் ஹுடுட்டை வலுக்கட்டாயமாகக் கொண்டுவர விரும்புகிறது. டிஏபி-யை நோக்கி பக்கத்தானை விட்டு வெளியேறு என்கிறது. ஆனால், டிஏபி, எல்லாவற்றையும் வாயை மூடிக்கொண்டுப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது”, என மசீச விளம்பரப் பிரிவுத் தலைவரும் செனட்டருமான சாய் கிம் சான் ஓர் அறிக்கையில் கூறினார்.
இங், மசீச-வைக் குறை சொல்லிக் கொண்டிருக்காமல் தன் பக்கத்தான் பங்காளிக் கட்சியான பாஸ் ஹுடுட்டைக் கொண்டுவராமல் இருப்பதை உறுதி செய்வதில் முனைப்பு காட்டுவது நல்லது என்றாரவர்.
pas hudut கொண்டு வந்தால் , சீனர்களுக்கும் சங்குதான் ….!
பாகத்தான் உடைந்தால் mca உனக்கு சந்தோசமான விஷயம் தானே ,,,அப்பறம் எதுக்கு dap சங்குதான் என்று முதலை கண்ணீர் வடிக்கிற
உண்மைதான். அதே போல உம்னோ மீண்டும் மீண்டும் தேசியப் பள்ளிகளை அழிப்போம் என்று குரல் கொடுத்தால் ம.சீ.ச வுக்குத்தான் சங்கும் சாவு மணியும். “சீனர்களை பாரிசானுக்கு வாக்களிக்கக் கெஞ்சியதே ம.சீ.ச தானே? ‘பாரிசானுக்கு சீனர்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் ம.சீ.’சா’வுக்கு போடப்படுவதற்கு இணையாகும்’ என்று கூறியது. எதை எப்படி அடுத்தவனுக்கு நீ தருகிறாயோ அது அப்படியே உனக்கும் வந்து சேரும். இது எப்படி இருக்கு..?
மா சீ ச உக்கு எப்போவோ சங்கு உதியாசேசேசேசேசே
பாஸ் ஹூடுட் சட்டத்தைக் கொண்டு வரும் அளவிற்கு இன்னும் தைரியம் வரவில்லை! சங்கு ஊதும் அளவிற்கு எதுவும் ஆகப்போவதில்லை. பெரியார் போற்றி! போற்றி!
தன் அழிவுக்கு தானே சங்கு ஊதும் பாஸ்
Dap செத்த பாம்பு..எதற்கு சங்கு ..பால் தான் ஊற்றியாச்சே
HUDUD டை நான் ஆதரிக்கிறேன் ,ஏன் தெரிமா ?? இன்று மலேசியாவில் குற்ற சேவல்களில் இந்தியர்கள்தான் அதிகம் ! தலை வெட்டி இயந்திரம் கட்டாயம் வேண்டும் ,அப்படி இருந்தால் தான் குற்ற செயல்கள் குறையும்
MK , hudud வந்தாலும் நம்மவர்களை திருத்த முடியாது..ஏனெனில் DAP இன்னும் நம்ம ஆளுக்கு சம்சு கொடுத்துக்கொண்டுதான் இருக்கிறான். உதராணம், ஒரு இந்தியர் தான் பிரதமர் படத்திற்கு முன் செருப்பை காண்டி கொண்டு விளம்பரம் தேடினாரே ஞாபகம் இருக்கிறதா.
மகா பெரிய கண்டுபிடுப்பு?. வழி தவறிய இந்தியர்களை சரியான வழிக்கு கொண்டு வர வக்கில்லாதா கேனையன் பேசும் பேச்சு கையை, காலை வெட்டு என்பது. இந்தியர்களுக்கு உருப்படியா ஏதாவது நல்ல கருத்தைச் சொல்ல வழி வகுத்த இந்த செம்பருத்தி களத்தை கையகப் படுத்த நேற்று பெய்த மழையில் பூத்த காளான்களாக முளைத்திருகிண்றீர்கள். ஏவுகணைகளையும் குத்தீட்டிகளையும் தாங்க முடியாமல் பின் முதுகை காட்டி ஓடி விடுவீர்கள்.