மலாய்க்காரர்- அல்லாத பெற்றோர் தங்கள் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிகளுக்கு அனுப்ப விரும்புவதில்லை. அப்பள்ளிகள் சமய நோக்கத்துடன் செயல்படுவதும் இஸ்லாமிய சமயம் படிப்படியே ஊடுருவி வருவதும்தான் இதற்குக் காரணம் என்கிறார் டிஏபி எம்பி சைரில் கீர் ஜொஹாரி.
முன்பு அரசாங்கப் பள்ளிகளில் 70 விழுக்காடு மலாய்க்கார மாணவர்களும் 30 விழுக்காடு மலாய்க்காரர்-அல்லாத மாணவர்களும் பயின்றனர். இப்போது பின்சொல்லப்பட்டவர் எண்ணிக்கை 2-இலிருந்து 3விழுக்காடாகக் குறைந்து விட்டது.
“1960-களிலும் 70-களிலும் பெற்றோர் பிள்ளைகளை அரசாங்கப் பள்ளிகளுக்கு அனுப்புவதையே விரும்பினர். ஏனென்றால், கல்வி தரமாக இருந்தது. இன்று, தரம் குறைந்து விட்டதைத்தான் தேர்வு முடிவுகளும் மதிப்பீடுகளும் காண்பிக்கின்றன.
“பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி கிடைக்க வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பம். அது எந்த மொழியில் கிடைத்தாலும் பிரச்னை இல்லை”, என்றவர் சொன்னார்.
நேற்று பினாங்கில் பிரிட்டிஷ் தூதரகம் ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் சைரில் இவ்வாறு கூறினார்.
உண்மை கசக்கும், ஆனால் இதுதான் உண்மை.
உண்மையை அப்படியே சொல்லியிருக்கின்றீர். பாராட்டுகள்! தேசியப் பள்ளிகளில் கல்வித்தரம் சரிந்துவருவதால் பெற்றோர்கள் தாய்மொழிப்பள்ளிகளை விரும்புகின்றனர். தமிழ்மொழிப் பள்ளிகளின் கல்வித்தரமும் சிறப்பாகவே இருக்கின்றது. பெருப்பாலான தமிழ்ப்பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றுவது பாராட்டுக்குரியது. தாய்மொழிப் பள்ளிகள் தொடர்ந்து இந்நாட்டில் இருப்பதை உறுதிசெய்யுங்கள்!!!!
கிருஸ்துவர்களால் நடத்த படும் பள்ளிகளில் என்னப்பா நடக்குது. நடப்பதை தெரிந்தவர்கள் பாதிக்க பட்டவர்கள் கருத்திடவும்…
கிறிஸ்தவர்களால் நடத்தப்படும் பள்ளிகள் எல்லாக் காலங்களிலும் சிறப்பாகவே நடைபெற்று வந்திருக்கின்றன. இப்போது அரசாங்கத்தின் தலையீட்டினால் அங்கும் அரைகுறை! பெரியார் போற்றி! போற்றி!
ஏன்டா DAP …….. இன்று கோலாலம்பூர் மட்ரும் பினாங் கில் பிற இனத்தவர்கள் வாழ முடிய வில்லை சீனர்களின் அராஜகம் தாங்க முடியவில்லை வீட்டு விலை பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தி வச்சு இருக்கிட்றனர் கேட்டால் வாங்குனால் வாங்குகள் இல்லை என்றால் பொங்கல் ஏட்றூ சீனர்கள் சொலுகிட்றனர் …… எப்பொழுது இவை எல்லாம் மாற போகுதோ
அவர் அவர் களுக்கு ஏட்றூ தாய் மொழி பள்ளி இருக்கும் பொது ஏன் தேசிய மொழி பள்ளியில் உங்கள் புள்ளை கலை அனுப்புகின்றிர்கள் …….. அது உங்கள் தவறு தானே
தேசிய மலாய் பள்ளிகளீல் கல்வித்தரம் மிகவும் பின்னோக்கிசெல்வதை பெருவாரியான மக்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் அதுதான் உண்மை நம்முடைய குழந்தைகளுக்கு மலாய் சீருடையை கட்டாயமாக அணியவேண்டுமென சில மலாய்பள்ளிகளில் கட்டாயபடுத்தப்படுகிறார்கள்.அகாமா பாடநேரங்களில்வெருமனே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள் ந்ம் மாணவர்கள். MP யின் கூற்று உண்மையிலும் உண்மை.
தேசிய பள்ளிகளில் ஆசிரியர்களாக இருப்பவர் யார்? இதிலிருந்தே புரிந்திருக்க வேண்டும். அவன்களே எல்லாம் தலைமை ஆசிரியர்களிலிருந்து — பிறகு அர்பணிப்பு எங்கிருந்து வரும்? அதிலும் இன பாகுபாடு வேறு– மற்ற இனங்களுக்கு மரியாதை இல்லை அப்படி இருக்கும்போது?
இந்த வருடம் PT3 தேர்வில் ஒரு சில பாடங்களுக்கு தேர்ச்சி புள்ளிகள் 25க்கு குறைக்கப் பட்டாலும் ஆச்சரியப் படுவதற்கு ஒன்றுமில்லை.
இந்த இன டிஏபி செல்வாக்கு விளைவாக அரசாங்கம் மற்றும் மக்கள் தேசிய பள்ளிகளீல் நடைமுறையிலுள்ளது கல்வி அமைப்பு உட்பட, அரசாங்கம் வெறுக்கிறேன் அவதூறு பிடிக்கும் உள்ளது. சீன தேசிய பள்ளிகள் மலாய்க்காரர்கள் இருந்தால் மற்றும் இஸ்லாமியம் அமைப்பு கற்றல் வலியுறுத்துகிறது விவரிக்கும் இன டிஏபிபிரச்சார மற்றும் தூண்டுதல் தாக்கம் என ஓட்டம் குழந்தைகள் சீனா பள்ளிகளீல் அவர்களை அனுப்ப விரும்புகின்றனர். இந்த அனைத்து வாக்குகள் ஈர்க்க தங்கள் முயற்சிகளை டிஏபி துன்புறுத்தல் ஆற்றிய மற்றும் சீன சமூகத்தில் ஆதிக்கம்.
நீதான்யா ஹீரோ …
அரசுப் பள்ளிகளில் இஸ்லாமிய சமய ஊடுருவல் ?இதில் எந்த தப்பும் இல்லை.எல்லாம் முதல் நிலை பள்ளிகளும் ஒன்று இணைய வேண்டும் தமிழ் சீனம் மலாய் எல்லாமே தனி தனியாக பிரிக்க கூடாது ,அரசாங்கம் எடுக்கும் இந்த முயற்சி நல்ல முயற்சிதான்
எழுதியது என்னவென்று ஒன்றுமே புரியாத ஹீரோவுக்கு இன்னொரு ஜீரோ வாழ்த்து?. இப்படி எத்துனை பேர் செம்பருத்திக்குள் கூலிக்கு மாரடிக்க நுழைந்திருக்கிண்றீர்கள்?.
சில தேசிய ஆரம்பப் பள்ளிகளில் ஓரளவு இனவாதமும் உள்ளது என பல நிகழ்வுகளின் மூலம் நாம் உணர முடிகிறது.
oruvan அவர்களே கிறித்தவ பள்ளிகளில் நடப்பது என்னவென்று கேடிருக்கிறீர்கள். நான் முன் வேலை செய்த நிறுவனத்தில் இயக்குனராக பணி செய்தவர் ஒரு மலாய்க்கார முஸ்லிம். அவர் ஒரு கிறித்தவ பள்ளியில் படித்தவர். அது மட்டும் அல்ல. அவர் கிறித்தவ வழிப்பாட்டு செபங்கள், வேதாகம (bible ) வசனங்கள் பலவற்றை மனணம் செய்து சொல்வார். ஆனால் அவர் ஒரு கிறித்தவராக மதம் மாற வற்புருத்தபடவும் இல்லை அவரும் தனது சமயத்தை விட்டுவிடவும் இல்லை. ஆனால் இன்று தேசிய பள்ளிகளில் ஒன்றுக்கும் உதவாத அரபு மொழியை கற்பித்து, அதனை நமது பிள்ளைகளும் கண்டிப்பாக கற்க வேண்டும் என்று கால அட்டவணையில் இணைத்துள்ளனர். அம்மொழியால் எவருக்கு என்ன பயன் என்று தெரியவில்லை. இது இஸ்லாமிய சமய பாடம் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காலவட்டத்தில் அதற்கு கண்டிப்பாக இட்டு செல்லும் என்பதில் சந்தேகமேவேண்டாம். சமயத்தால் மொழி வளராது. மொழியால்தான் சமயம் வளரும். மனிதர் இப்படி எதாவது ஒரு வகையில் எனக்கும் என்னை அடுத்திருபவருக்கும் வித்தியாசம் இருப்பதை வைத்து தனிமைபடுத்தி கொண்டே போனால் இறுதியில் ஒவ்வொரு மனிதனும் தனித்தனியாகத்தான் இருக்கவேண்டும். ஒவ்வொரு மனிதனும் அடுத்தவனை கண்டு பயத்துடனேதான் வாழ வேண்டும். அதற்காகவா மனிதன் படைக்கப்பட்டான்? மனிதன் எப்பொழுதுமே சமூகமாக வாழ அல்லவா படைக்கப்பட்டான். அடுத்தவர் நலனில் நாம் அக்கறை காட்டுவோம், அவர்தம் நம்பிக்கையை மதிப்போம், நமது நம்பிக்கையை (குறிப்பாக சமய நம்பிக்கையை) வலுக்கட்டாயமாக திணிக்க முயலக்கூடாது. உலகமே ஒரே சமயமாக மாறினாலும் நம்மிடையே உள்ள வேறுபாடுகள் மாறிவிடுமா? நாம் கண்கூடாக காணாலாம், பல இடங்களில் ஒரே சமயத்தை சேர்ந்தவர்களே ஒருவரொருவரை அழித்து கொன்று குவிக்கின்றனரே. ஆக நம்மை ஒன்றிணைக்கும் காரியங்களை ஆய்ந்து அவைகளை செயல்படுத்தி நாமும் நம்மை சுற்றியுள்ள அனைவரும் எவ்வித பயமுமின்றி வாழ இறைவன் நம்மை ஆசீர்வதித்து வழிநடத்துவாராக.
பினாங்கில் குறைந்த வருமானம் பெறுகின்ற மக்களின் நிலைமை???எப்போது மாறும் இந்த நிலைமை என்று மக்கள் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டு இருக்கிறார்கள்.
காம்பு தேசிய பள்ளிகளில் மட்டுமா இன பாகு பாடு ? என் பையனை முதலாம் ஆண்டு சேர்க்க தமிழ் பள்ளிக்கு அழைத்து போனேன் , அந்த ஆபிசில் வேலை செய்த பெண் ஏனென்னவோ காரணம் குறி அலகளிச்ச . அதில் சலிச்சி போய் தேசிய பள்ளியிலே சேர்த்துட்டேன் . எனக்கு வேற வழி தோணலே , இப்போ என் மகன் எம் அர் எஸ் எம் லே படிக்கிறான் .
முடிந்த வரைக்கும் பள்ளிகளில் அரசியல் கலக்க வேண்டாம்… ஹீரோ அல்லது ஜீரோ முக்கியம் இல்லை… நமது குழந்தைகளின் படிப்பு தரம் தான் முக்கியம்… சிந்தித்து செயல் படுங்க்கள்… நன்றி…
Manggai….. poi solvatharkku alavillayaa?
எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லை அவசரமும் இல்லை . காரணம் என் மகன் படித்தது சீனா தடிகாவில் . என் மகனுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது . அதனால் எம் ஐ சி இடம் கடிதம் வாங்கி வா , கையெழுத்து வாங்கி வா என்று அலைக்ளிச யாருக்கு தான் கோவம் வராது . அங்கே போன நீங்க இதிலே இருக்கீங்கல அதிலே இருகிங்கள பல கேள்வி . அனுபவ பட்டதினலே தான் சொன்னேன் , தமிழ் பள்ளி மேல பலி போடா எனக்கு ஒனும் வேண்டுதல் இல்லே .
மங்கை தாங்கள் சொல்லும் கூற்று ஏற்புடையதாக இல்லை. தமிழ் பள்ளியில் பதிய ம.இ.க. கடிதம் வாங்கி வா என்று சொல்லி இருந்தால் அப்படி சொன்னவனின் கன்னத்தில் அறைந்திருக்க வேண்டாமா?. படித்தறிந்த தங்களுக்கு மேல் நடவடிக்கை எடுக்க முடியாமல் போனது எப்படி?. எப்பவவுமே நமக்கு பரிச்சியம் இல்லாத காரியத்தில் தடங்கல் வருமேயானால் உடனே நாம் அணுக வேண்டியது அந்தந்த காரியத்தில் தகுந்த அனுபவ மற்றும் கல்வி அறிவுடையவர்களின் உதவியை நாட வேண்டும். தக்க உதவியைச் செய்ய பலர் இருக்கின்றனர்.
மங்கை… எந்த மொழிப் பள்ளியிலும் நீங்கள் உங்க மகனைப் போடலாம். அது உங்கள் விருப்பம். யாரும் தடுக்கவும் தடை போடவும் முடியாது கூடாது காரணம் உங்கள் அனுபவம் அப்படி. ஆனால் ‘என் மகனுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது’ என்று பெருமை பட நீங்கள் எழுதியதைப் படித்த பின் நீங்கள் MIC. மேலும் தமிழ்பள்ளிகள் மீதும் அதன் நிர்வாகத்தின் வீண் களங்கம் சுமத்துவதாகவே எனக்குப் படுகிறது. மேல் சொன்ன காரணங்களால் என் பிள்ளையை நான் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கவில்லை ஆனால் வீட்டில் தமிழ்ப படித்துக் கொடுக்கிறேன். அவனைத் ‘தமிழனாகவே’ வளர்க்கிறேன் என்று சொல்லியிருந்தால் நீங்கள் உண்மையிலேயே மங்கை தான். ‘என் மகனுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது’ என்று பெருமையாக சொன்ன நீங்கள் மங்கை அல்ல…ஒரு மாங்காய்..!
மணியம் நீங்க ஒரு விசயத்தை தெரிஞ்சிகோங்க . தமிழ் பள்ளியில் படிக்கும் அணைத்து மாணவர்களும் தமிழர் பிள்ளைகள் கிடையாது . மலையாளம் , தெலுகு மொழி பேசுபவர்களின் பிள்ளைகளும் தமிழ் பள்ளியில் படிக்கின்றனர் , எனக்கு தாய் மொழி தமிழ் கிடையாது என்பது இந்த பகுதியில் படிக்கும் பலருக்கும் தெரியும் . என் மகனுக்கு நடந்த சம்பவத்தை நான் பெரிது படுத்த விரும்பி இருந்தால் அப்போதே நான் நடவடிக்கை எடுத்திருக்கலாம் , அதையும் தாண்டி அந்த பள்ளியில் சேர்த்து என் பிள்ளை ஆசிரியரின் கொடுமைக்கு ஆளாக விருப்பம் இல்லை . அதனால் தான் தேசிய மொழி இப்பள்ளிக்கு அனுப்பினேன் . என் மகன் தேசிய மொழி பள்ளியில் படித்தால் அவனுக்கு தமிழ் தெரியாமல் இல்லை . கொஞ்சம் நன்றாகவே பேசுவான் . காரணம் எங்கள் வீட்டில் அஸ்ட்ரோ கிடையாது நாங்கள் எங்கள் தாய் மொழியில் தான் உரையாடுவோம் .
தமிழர்கள் தமிழ் மிது பற்று வைப்பது சரி . மற்ற மொழி பேசுபவர்களுக்கு அது கட்டாயம் இல்லை என்பது என் தனி பட்ட கருத்து. எத்தனை தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளை வேறு மொழி பள்ளிக்கு அனுப்புகின்றனர் . அதை தடுக்க வழி உண்டா என்று யோசிக்கவும் .
மங்கை, உங்கள் இயலாமைக்கு அஸ்ட்ரோவுக்கும் தமிழ் படிப்புக்கும் முடிச்சி போடவேண்டாம். ஒரு ஆசிரியர் செய்த தவறுக்க தேசிய மொழி பள்ளிக்கு உங்கள் குழந்தையை அனுப்புவது உங்கள் உரிமை. அங்கும் தவறு நடந்தால் சீனபள்ளிக்கு மத்துவிர்களா? இப்படியே மாத்தி மாத்தி பிள்ளையின் படிப்பை நாசம் பண்ணிராதிங்க,
எத்தனை தமிழர்கள் அவர்கள் பிள்ளைகளை வேறு மொழி பள்ளிக்கு அனுப்புகின்றனர் . அதை தடுக்க வழி உண்டா என்று யோசிக்கவும் . — இதற்கு அவசியமே இல்லை. அவர்களில் யாரும் இங்கே அங்கலாய்க்கவில்லையே, நீங்கள் தானே ‘தேசிய பள்ளிகளில் மட்டுமா இன பாகு பாடு ? என் பையனை முதலாம் ஆண்டு சேர்க்க தமிழ் பள்ளிக்கு அழைத்து போனேன் , அந்த ஆபிசில் வேலை செய்த பெண் ஏனென்னவோ காரணம் குறி அலகளிச்ச . அதில் சலிச்சி போய் தேசிய பள்ளியிலே சேர்த்துட்டேன் ‘ என்றும் ‘என் மகனுக்கு தமிழ் எழுத படிக்க தெரியாது . அதனால் எம் ஐ சி இடம் கடிதம் வாங்கி வா , கையெழுத்து வாங்கி வா என்று அலைக்ளிச யாருக்கு தான் கோவம் வராது . அங்கே போன நீங்க இதிலே இருக்கீங்கல அதிலே இருகிங்கள பல கேள்வி . அனுபவ பட்டதினலே தான் சொன்னேன் ‘ என்றும் அங்கலாய்த்தது நீங்கள் தானே? இங்கே கருத்துரைக்காதவர்களும் சரி நீங்களும் சரி அவரவர் பிள்ளைளை எந்த எந்தப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது அவரவர் ஜனநாயக உரிமை. ஆனால் பிடிக்கவில்லை என்பதற்காக – ஓர் அமைப்பின் மீது அவதூறு சொல்வது முறையல்ல. ம.இ.கா தமிழர்களுக்கு மட்டும் அல்ல. அது அனைத்து இந்தியருக்கும் பொதுவானது. எனவே, நீங்க எந்த தாய்மொழிக்காரராகவும் இருக்கலாம். ஆனால் ம.இ.கா வில் நீங்கள் நடத்தப்பட்ட விதம் சரியில்லை என்று நீங்கள் கருதினால் அதை பத்திரிகையில் வெளியிட்டு வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். அல்லது பள்ளியில் பிரச்சினை என்றால் அதை கல்வியமைச்சின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கலாம். அதை செய்யத் தவறிய நீங்கள் அது பற்றி இங்கே எழுதுவது முறையா? அடுத்து ‘தமிழர்கள் தமிழ் மிது பற்று வைப்பது சரி . மற்ற மொழி பேசுபவர்களுக்கு அது கட்டாயம் இல்லை என்பது என் தனி பட்ட கருத்து’ உண்மைதான். சீனர்களுக்குள் மொழிகள் ஆனால் அவர்கள் பொதுவான மொழியாக அவர்கள் ஏற்றுக்கொண்டது மேண்டரின் மொழியே. அதுபோல இங்கே உள்ள இந்தியர்களுக்கும் தமிழ் தான் பொதுவான மொழி என்று நான் நினைத்துக் கொண்டிருப்பதை ‘தவறு என்று உணர்த்தியமைக்கு நன்றி’…