அம்னோ பேரவையில் பேராளர்கள் மற்ற இனத்தவரின் மனத்தைப் புண்படுத்தும் பிரச்னைகளைத் தொடாமலிருப்பது நல்லது; ஆனால், மலாய்க்காரர் தொடர்பிலான விவகாரங்களைத் தாராளமாக விவாதிக்கலாம்.
இவ்வாறு அறிவுறுத்திய செராஸ் அம்னோ தொகுதித் தலைவர் சைட் அலி அல்ஹப்ஷி, நேற்று கட்சித் தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் வலியுறுத்திய ஒன்றைத்தான் தாம் திரும்பவும் எடுத்துரைப்பதாகக் கூறினார்.
“பேராளர்கள் தங்குதடையின்றிப் பேசலாம். ஆனால், உணர்ச்சிவசப்பட வைக்கும் விவகாரங்களை விவாதிக்கும் அளவுக்குச் சென்று விட வேண்டாம் என்று அவர்(தெங்கு அட்னான்) கூறியது சரியே”, என்றாரவர்.
அடிக்கிறான் பல்ட்டி , நல்ல குரங்கு குட்டி.
அம்னோ பேரவையில் உணர்ச்சிவசப்படக் கூடிய விவகாரங்களை விவாதிக்கும் முதல் ஆளாக நீங்கள் தான் இருப்பீர்கள்! பெரியார் போற்றி! போற்றி!
இந்திய -சீன வம்சாவழி மலேசியர்களை மட்டம் தட்டி தூற்றி பேசினால் தானே கைதட்டல் பெறமுடியும் அத்துடன் அம்னோ நாற்காலியில் மேலே உட்கார முடியும். துங்குவிற்கு பின் ஒன்றும் செய்யாமல் நாட்டை சூறையாடி மக்களை பிரித்தாளும் சதி வேலை தானே நடந்து கொண்டிருக்கின்றது.
அம்னோ தலைவர்கள்தான் எப்போதும் இந்திய சீன மக்களின் மனம் புண்படும் படி அடிக்கடி பேசிவருகிறார்கள். இதுப் போன்ற பிரச்சனைகள் எதிர்கட்சி தலைவர்களிடம் வருவதில்லை. அம்னோ பொது பேரவை தொடங்கும் முன்னமே இப்போதே ஆரம்பித்து விட்டார்களே..?
அன்வார் பேசியதை மறந்தீரோ சீரியன் ..
அன்வார் பேசினாலும் இப்பொழுது அவர் திருந்திருக்கலாம்.ஆனால் அந்தப் பக்கம் தீவிரவாதிகள் திருந்தியதாக தெரியவில்லை.
தவறை உணர்ந்து திருந்தி வருவோரை வாழ்த்தி வரவேற்ப்போம்..! ஆனாலும் இனப் பிரிவினையை தூண்டும் இனத் துரோகிகளுக்கு துணைப் போக முடியாதே..?
அன்வாரின் பழைய வரலாறு பேசி திரியுது , அரசியல் தெரியாத காமடி பீசுகள் ! நிஜ காலத்துக்கு வாருங்கள் ஐயா !