மாவீரர் தின பீதி காரணமாக வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் உயிரிழந்த போராளிகளை நினைவு கூரும் வகையில் நடத்தப்பட்டு வரும் மாவீரர் தின நிகழ்வுகள் இம்முறை பிரமாண்டமான முறையில் வடக்கில் நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
வடக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
விடுதலைப் புலி ஆதரவாளர்கள் இன்றும் நாளையும் சில இடங்களில் மாவீரர் தின அனுட்டானங்களில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை திரட்டியுள்ளனர்.
மாவீரா தின அனுட்டானங்களில் ஈடுபட ஆயத்தமாகுமாறு கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது என சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
திடீர் வீதிச் சோதனைகள், இரவு நேர ரோந்து சேவை மற்றும் வாகன சோதனை போன்ற விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. -http://www.tamilwin.com


























இனி சிங்களவன் பிதியில்தான் வாழ்வான்.
அரக்க குணம் படைத்தவர்கள் மத்தியில் ஈழத் தமிழர்கள்.கேட்கத்தான் நாதியில்லை.