அம்னோ இன்றி மலாய்க்காரர்களால் வாழ முடியும்

anwarமலாய்க்காரர்கள்தான்  இந்நாட்டின்  பெரும்பான்மை  மக்கள். அதனால் அம்னோ  தோற்றுப்  போனால்கூட  அவர்களால்  வாழ  முடியும்  என்கிறார்  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்.

அம்னோ  தோல்வியுற்றால்  மலாய்க்காரர்கள் அழிந்து  விடுவார்கள் என  பிரதமர்  நஜிப்  அம்னோ  பேராளர்  கூட்டத்தில்  குறிப்பிட்டதற்கு  எதிர்வினையாக  அன்வார்  இவ்வாறு  கூறினார்.

இளைஞர்கள்  அவர்களின்  எதிர்காலத்தைத்  தீர்மானிக்கும்  பொறுப்பை  இந்தத்  தலைவர்களிடம்  விட்டுவிடக்  கூடாது  என்றவர்  கேட்டுக்கொண்டார்.

“ஊழல்வாதிகளான  சிலரை நம்பி  நமது  எதிர்காலத்தை அவர்களின்  கைகளில்  ஒப்படைக்கக்  கூடாது. மாற்றத்தில்  நம்பிக்கையும்  அதை  அடையும் துணிச்சலும்  வேண்டும்”, என  அன்வார்  கூறினார்.