பினாங்கின் வெற்றிக்கு சீனர்களின் சட்டவிரோத தொழில்களே காரணம்

zaidiபினாங்கில்  சீனர்களின்  பொருளாதாரம்  வளமாக  இருப்பதற்கு  சட்டவிரோத  தொழில்களே   காரணமாம்.அம்னோ பேராளர்  கூட்டத்தில்  பெர்மாத்தாங்   பாவ்  பேராளர்  ஸைடி  முகம்மட்  சைட் இவ்வாறு  கூறினார்.

சீனர்களின்  முறைகேடான  செயல்கள்  “பட்டப்  பகலில்”  நடக்கின்றன. கண்டிக்கும்  துணிச்சல்தான்  அம்னோ  தலைவர்களுக்கு  இல்லை என்றவர்  சாடினார்.

“சீனர்களின்  பொருளாதாரத்துக்கு  அடிப்படையாக  இருப்பவை  சட்டவிரோத தொழில்கள் என்பதை அறிவோம்.

“சூதாட்டம், விபசாரம் போன்றவையும்  மற்ற  சட்டவிரோத நடவடிக்கைகளும்  அவர்களுக்கு  உதவுகின்றன”, என ஸைடி  கூறினார்.