பிஎன் உச்சமன்றத்துக்கான பிஎன் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளை அம்னோதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று கடந்த வாரப் பேராளர் கூட்டத்தில் முன்மொழிந்த ஜோகூர் அம்னோ இளைஞர் உதவித் தலைவரை ஜோகூர் டிஏபி சாடியுள்ளது.
அக்கட்சியின் கொள்கை இயக்குனர் வொங் சூ கி, உச்சமன்ற உறுப்பினர்களை முடிவுசெய்யும் அதிகாரம் அம்னோ உறுப்பினர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என கைருல் அன்வார் ரஹ்மாட் கூறியது பிஎன்னில் உறுப்புக்கட்சிகளின் பங்களிப்புக்கு மதிப்பில்லை என்பதைக் காண்பிப்பதாகக் கூறினார்.
“கைருலின் கூற்று மசீச, கெராக்கான், மஇகா, பார்டி பெர்சத்து சாபா (பிபிஎஸ்), பார்டி பெசாகா பூமிபுத்ரா(பிபிபி) முதலியவை பிஎன்னில் அம்னோவுக்கு நல்லதொரு தோற்றத்தை உருவாக்கிக் கொடுப்பதற்காக உள்ள ஜோடனைப் பொருள்கள்தான் என்பதை நிரூபிக்கிறது”, என வொங் கூறினார்.
பிஎன் பங்காளிக்கட்சிகள் வெறும் ஜோடனைப் பொருட்கள்தாம். அவை சடப் பொருட்கள். பேசா மடந்தைகள். ஈர மரக் கட்டைகள். உணர்வில்லாதவை. உண்மையில்லாதவை. …. etc. etc. ஆனால் சுயநல காரியவாதிகள்.
கூட்டணி பங்காளிகள் ….
UMNO வின் கோலிகள்…..!
BN பங்காளி கட்சிகள் ஜோடனை பொருள்கள் மட்டுமல்ல — அடுத்த நேர சாப்பாட்டுக்குக்காக …