தொழில் அதிபரான ஈஷாக் இஸ்மாயில், 2008-இல் வெளியுறவு அமைச்சர் அனிபா அமான், பிஎன்னைவிட்டு வெளியேறி அன்வார் இப்ராகிம் புதிய அரசாங்கம் அமைக்க உதவினால் அவருக்கு ரிம100 மில்லியன் கொடுப்பதாக சொன்னதே இல்லை என்கிறார்.
தாம் ரிம100 மில்லியன் கொடுக்க முன்வந்ததாகக் கூறப்படுவதை “ஒட்டுமொத்தமாக மறுப்பதாக” ஒர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கேஎப்சி-இன் முன்னாள் துணை செயல்முறை தலைவரான ஈஷாக், உண்மையில் சில மாதங்களுக்குமுன் அனிபாவின் “தூதுவர்” ஒருவர்தான் தம்மை அணுகி அனிபாவுக்கு எதிராக அன்வார் தொடுத்துள்ள அவதூறு வழக்கை மீட்டுக்கொள்ள உதவுமாறு கேட்டுக்கொண்டார் என்றார்.
“நான் அன்வாருடன் இப்போது தொடர்பில் இல்லை என்பதால் அவ்வாறு செய்ய முடியாது என்று கூறியதும் வழக்கில் என் பெயரும் இழுக்கப்படும் என்று குறிப்புக் காட்டினார்”, என ஈஷாக் கூறினார்.
Rm 200 மில்லியன் கொடுப்பதாக சொன்னாரோ?
இத்தனை வருடம் வாயில் யானை வாழை வைத்திருந்தான் போலும் ???
இத்தனை வருடம் வாயில் யானை வாழை வைத்திருந்தான் போலும் ????